மிக அதிகமான பக்கங்களைக் கொண்ட ஒரு தமிழ் PDF fileஐ விரைவாகவும் எளிதாகவும் editable google documentஆக மாற்றுவது எப்படி?
இதற்கு அந்த PDF file, கண்டிப்பாக முற்றிலும் imagesகளில் இருந்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அந்த கோப்பினை Google driveல் பதிவேற்றம் செய்து 'open with Google doc' என்று தந்தால், OCR (Optical Character Recognition - ஒளிவழி எழுத்துரு அறிதல்) feautureன் உதவிகொண்டு, அந்த PDF file முழுவதுமே Unicode Tamil textகளைக் கொண்ட, editable Google documentஆக மாறிவிடும். இதனை நாம் Microsoft Word போன்ற எந்தவொரு கோப்பாகவும் மாற்றம் செய்துகொள்ள முடியும்.
<<< உங்களுக்கு தெரியுமா? >>>
கூகுள் டிரைவில் தமிழ் கையெழுத்துக்களைக் கொண்ட image மற்றும் pdf கோப்புகளைக்கூட நீங்கள் Unicode Tamil textகளைக் கொண்ட, editable Google documentஆக மாற்றிக்கொள்ளலாம். டைப்பிங் கூட செய்யத்தேவையில்லை. கையெழுத்து தெளிவாக இருந்தால் மட்டுமே போதுமானது. அதற்கேற்றவாறு துல்லியமான முடிவுகள் கிடைக்கும்.
சரி. தமிழ் எழுத்துக்களைக் கொண்ட ஒரு PDF fileஐ முழுவதுமாகவே image format கொண்ட PDF fileஆக மாற்றுவது எப்படி?
இதற்கு Free PDFill Tools & No watermarks (PDFill) என்ற இலவச மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். அதில் Convert PDF to images என்ற optionஐ சொடுக்கி TIFF image with all pages in single image format, 300 DPI Set (அதிகமான துல்லியத்திற்கு) செய்து, Convert செய்துகொள்ளவும். பின் அந்த பல பக்கங்களைக் கொண்ட Single TIFF imageஐ, Convert images to PDF என்ற optionஐ பயன்படுத்தி மீண்டும் PDF ஆக மாற்றிக்கொள்ளவும். இப்போது உங்களின் PDF முழுவதுமாகவே image format கொண்டதாக மாறிவிட்டிருக்கும். பின்னர் இதை Google Driveல் பதிவேற்றம் செய்து, editable Google documentஆக மாற்றிக்கொள்ளலாம்.
கருத்தாக்கம் மற்றும் நன்றி: விஸ்வநாதன் பாலசுப்ரமணியன், அழகி மென்பொருள் வடிவமைப்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக