Ads Here

06 ஜனவரி, 2019

அரசியலமைப்பு விதிகள் | அரசியலமைப்பு சட்டங்கள்

முகப்புரை

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை, இறையாண்மையையும் சமநலச்சமுதாயத்தையும் சமயச்சார்பின்மையையும் மக்களாட்சி முறையையும் கொண்டதொரு குடியரசு நாடாக நிறுவ,

அதன் குடிமக்கள் அனைவரும்

சமுதாய, பொருளியல், அரசியல் நீதியையும், 
எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, 
சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமையையும்,

சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமனிலையையும்
எய்திடும் வகையில்,
அனைவரிடையேயும்

தனிமனிதனின் மாண்பு, நாட்டுமக்களின் ஒற்றுமை, 
ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் 
உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும்

உள்ளார்ந்த உறுதி கொண்டு,

நம்முடைய அரசியலமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் 26ஆம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசியலமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்.

பகுதி I

ஒன்றியமும் அதன் ஆட்சிநிலவரையும்

  • உறுப்பு 1. ஒன்றியத்தின் பெயரும் ஆட்சிநிலவரையும்
  • உறுப்பு 2. புதிய மாநிலங்களை ஏற்றிணைத்தல் அல்லது நிறுவுதல். 
    • உறுப்பு 2அ. (நீக்கறவு செய்யப்பட்டது) 
  • உறுப்பு 3. புதிய மாநிலங்களை உருவாக்குதலும் நிலவுறும் மாநிலங்களின் பரப்பிடங்களை, எல்லைகளை அல்லது பெயர்களை மாற்றம் செய்தலும். 
  • உறுப்பு 4. 2, 3 ஆகிய உறுப்புகளின்படி இயற்றப்படும் சட்டங்கள், முதலாம், நான்காம் இணைப்புப்பட்டியல்களைத் திருத்துவதற்காகவும் துணைவுறு, சார்வுறு, விளைவுறு பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்தல்.

பகுதி II - குடிமை

  • உறுப்பு 5. அரசமைப்பின் தொடக்கநிலையில் குடிமை. 
  • உறுப்பு 6. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்தசிலரின் குடிமை உரிமைகள்.
  • உறுப்பு 7. பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்த சிலரின் குடிமை உரிமைகள் 
  • உறுப்பு 8. இந்தியாவுக்கு வெளியே குடியிருந்துவரும் குறித்தசில இந்திய மரபினரின் குடிமை உரிமைகள். 
  • உறுப்பு 9. ஒர் அயல் நாட்டு அரசின் குடிமையினைத் தம் விருப்பாகப் பெற்றுள்ளவர்கள் குடிமக்கள் ஆவதில்லை . 
  • உறுப்பு 10. குடிமை உரிமைகள் தொடர்ந்திருத்தல்.
  • உறுப்பு 11. நாடாளுமன்றம் சட்டத்தினால் குடிமை உரிமையை ஒழுங்குறுத்துதல்.

பகுதி III - அடிப்படை உரிமைகள்


பொதுவியல் 

  • உறுப்பு 12. பொருள்வரையறை. 
  • உறுப்பு 13. அடிப்படை உரிமைகளுக்கு முரணான அல்லது அவற்றைத் திறக்குறைவு செய்யும் சட்டங்கள்.
சமத்துவ உரிமை 

  • உறுப்பு 14. சட்டத்தின் முன் அனைவரும் சமம் (சட்டத்தின் ஆட்சி)
  • உறுப்பு 15. சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை. 
  • உறுப்பு 16. பொது வேலையமர்த்தங்கள் தொடர்பாகச் சமன்மையான வாய்ப்புநலம் 
  • உறுப்பு 17. தீண்டாமை ஒழிப்பு. 
  • உறுப்பு 18. பட்டங்கள் ஒழிப்பு. 
சுதந்திர உரிமை 

  • உறுப்பு 19. பேச்சுச் சுதந்திரம் முதலியவை பற்றிய குறித்தசில உரிமைகளுக்குப் பாதுகாப்பு. 
  • உறுப்பு 20. குற்றச்செயல்களுக்கான குற்றத்தீர்ப்பு பொறுத்த பாதுகாப்பு. 
  • உறுப்பு 21. உயிருக்கும், உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு. 
    • உறுப்பு 21அ. கல்வி கற்பதற்கான உரிமை. 
  • உறுப்பு 22. குறித்தசில நேர்வுகளில் கைதுசெய்தல், காவலில் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு.
சுரண்டலுக்கெதிரான உரிமை 

  • உறுப்பு 23. மனிதரை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல் ஆகியவற்றிற்குத் தடை. 
  • உறுப்பு 24. தொழிற்சாலைகள் முதலியவற்றில் சிறார்களை வேலையமர்த்தம் செய்தலுக்குத் தடை
சமயச்சுதந்திர உரிமை 

  • உறுப்பு 25. மனச்சான்றுவழி ஒழுகுவதற்கான சுதந்திரமும் சுதந்திரமாகச் சமயநெறி ஓம்புதலும் ஒழுகுதலும் ஒதிப்பரப்புதலும். 
  • உறுப்பு 26. சமயம் சார்ந்த காரியங்களை நிருவகிப்பதற்கான சுதந்திரம். 
  • உறுப்பு 27. குறிப்பிட்ட சமயம் எதனையும் வளர்ப்பதற்கான வரிகள் செலுத்துவது குறித்த சுதந்திரம். 
  • உறுப்பு 28. குறித்தசில கல்வி நிறுவனங்களில் சமயப் போதனை பயிலவருவது அல்லது சமய வழிபாட்டுக்கு வருகை தருவது குறித்த சுதந்திரம்.
பண்பாட்டு கல்வி உரிமைகள் 

  • உறுப்பு 29. சிறுபான்மையினர் நலன்களுக்குப் பாதுகாப்பு. 
  • உறுப்பு 30. கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிருவகிக்கவும் சிறுபான்மையினருக்குள்ள உரிமை. 
  • உறுப்பு 31. (நீக்கறவு செய்யப்பட்டது)
குறித்தசில சட்டங்களுக்குக் காப்புரை 

  • உறுப்பு 31அ. உரிமை நிலச்சொத்துகள் முதலியனவற்றைக் கையகப்படுத்துவதற்கு வகைசெய்யும் சட்டங்களுக்குக் காப்புரை. 
  • உறுப்பு 31ஆ. குறித்தசில சட்டங்களையும், ஒழுங்குறுத்தும் விதிகளையும் செல்லுந்தன்மை உடையனவாக்குதல். 
  • உறுப்பு 31இ. குறித்தசில நெறிப்படுத்தும் கோட்பாடுகளைச் செல்திறப்படுத்தும் சட்டங்களுக்குக் காப்புரை.
  • உறுப்பு 31ஈ. (நீக்கறவு செய்யப்பட்டது).
அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வுபெறும் உரிமை 

  • உறுப்பு 32. இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைச் செயலுறுத்துவதற்கான தீர்வழிகள்.
    • உறுப்பு 32அ. (நீக்கறவு செய்யப்பட்டது). 
  • உறுப்பு 33. இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைப் படையினர் முதலானோருக்குப் பொருந்துறச் செய்கையில் அவற்றை மாற்றமைவு செய்ய நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம்.
  • உறுப்பு 34. வரையிடம் ஒன்றில் படைத்துறையாட்சி செல்லாற்றலில் இருக்குங்கால், இந்தப் பகுதி வழங்கும் உரிமைகள் மீதான வரைத்தடை.
  • உறுப்பு 35. இந்தப் பகுதியின் வகையங்களுக்குச் செல்திறம் அளிப்பதற்காகச் சட்டமியற்றுதல்
    • உறுப்பு 35அ - 2019 ஆகஸ்ட் 5ல் நீக்கறவு செய்யப்பட்டது.

பகுதி IV - அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் 


  • உறுப்பு 36. பொருள்வரையறை. 
  • உறுப்பு 37. இந்தப் பகுதியில் அடங்கியுள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்துதல். 
  • உறுப்பு 38. மக்கள் நலப்பாட்டை வளர்க்கும் வகையில், சமுதாய முறையமைவினை எய்திடுமாறு அரசு செய்தல் வேண்டும். 
  • உறுப்பு 39. அரசு பின்பற்ற வேண்டிய குறித்தசில கொள்கைக் கோட்பாடுகள். 
    • உறுப்பு 39அ. சமநீதியும் இலவசச் சட்ட உதவியும். 
  • உறுப்பு 40. ஊராட்சி மன்றங்களை அமைத்தல். 
  • உறுப்பு 41. வேலை, கல்வி, குறித்தசில நேர்வுகளில் பொது நல உதவி ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை. 
  • உறுப்பு 42. இசைவானதும் இதமானதுமான வேலைச் சூழல்களுக்கும், பேறுகால - உதவிக்கும் ஏற்பாடு செய்தல். 
  • உறுப்பு 43. தொழிலாளர்களுக்கு வாழ்வுக்கேற்ற கூலி, முதலியன. 
    • உறுப்பு 43அ. விசைத்தொழில்களின் மேலாண்மையில் தொழிலாளர்கள் பங்கேற்றல்.
  • உறுப்பு 44. குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச்சட்டம். 
  • உறுப்பு 45. ஆறு வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு குழந்தைப் பருவநிலையில் கவனிப்பும் கல்வியும் அளிக்க ஏற்பாடு செய்தல். 
  • உறுப்பு 46. பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை வளர்த்தல். 
  • உறுப்பு 47. உணவுச் சத்தின் தரநிலை, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்தவும் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் அரசிற்குற்ற கடமை. 
  • உறுப்பு 48. வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றின் அமைப்பு. 
    • உறுப்பு 48அ. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துதலும் காடுகள், காடுவாழ் உயிரினங்கள் ஆகியவற்றைப் பேணிக்காத்தலும். 
  • உறுப்பு 49. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், இடங்கள், பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல். 
  • உறுப்பு 50. ஆட்சித்துறையினின்றும் நீதித்துறையைப் பிரித்தல். 
  • உறுப்பு 51. பன்னாடுகளிடையே அமைதியையும் காப்புணர்வையும் வளர்த்தல்.

பகுதி IVஅ - அடிப்படைக் கடமைகள் 


  • உறுப்பு 51அ. அடிப்படைக் கடமைகள்.

பகுதி V - ஒன்றியம் 


அத்தியாயம் I - ஆட்சித்துறை

குடியரசுத்தலைவரும், துணை குடியரசுத்தலைவரும் 

  • உறுப்பு 52. இந்தியக் குடியரசுத்தலைவர். 
  • உறுப்பு 53. ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரம். 
  • உறுப்பு 54. குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல்.
  • உறுப்பு 55. குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை. 
  • உறுப்பு 56. குடியரசுத்தலைவரின் பதவிக்காலம். 
  • உறுப்பு 57. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பெறுவதற்கான தகுமை. 
  • உறுப்பு 58. குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுதிப்பாடுகள். 
  • உறுப்பு 59. குடியரசுத்தலைவரின் பதவிக்கான வரைமுறைகள் . 
  • உறுப்பு 60. குடியரசுத்தலைவருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 
  • உறுப்பு 61. குடியரசுத்தலைவர்மீது அவையில் பழிசாட்டுவதற்கான நெறிமுறை.
  • உறுப்பு 62. குடியரசுத்தலைவரின் பதவி காலியிடமாகும் போது அதை நிரப்புவதற்காகத் தேர்தல் நடத்தவேண்டிய காலமும் இடைநேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெறுபவரின் பதவிக் காலமும். 
  • உறுப்பு 63. இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர். 
  • உறுப்பு 64. குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவைக்குப் பதவிவழித் தலைவராக இருப்பார். 
  • உறுப்பு 65. குடியரசுத்தலைவரின் பதவி இடைநேர்வாகக் காலியிடமாகும் போது அல்லது அவர் இல்லாதபோது குடியரசுத் துணைத்தலைவர், குடியரசுத் தலைவராகச் செயலுறுவார் அல்லது அவருடைய பதவிப்பணிகளை ஆற்றிவருவார். 
  • உறுப்பு 66. குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல்.
  • உறுப்பு 67. குடியரசுத் துணைத்தலைவரின் பதவிக்காலம். 
  • உறுப்பு 68. குடியரசுத் துணைத்தலைவரின் பதவி காலியிடமாகும்போது அதை நிரப்புவதற்காகத் தேர்தல் நடத்த வேண்டிய காலமும் இடை நேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பெறுபவரின் பதவிக் காலமும். 
  • உறுப்பு 69. குடியரசுத் துணைத் தலைவருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி.
  • உறுப்பு 70. பிற எதிருறு நிகழ்வுகளில் குடியரசுத்தலைவரின் பதவிப் பணிகளை ஆற்றி வருதல். 
  • உறுப்பு 71. குடியரசுத்தலைவரை அல்லது குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தல் பற்றிய அல்லது அதன் தொடர்பான பொருட்பாடுகள்.
  • உறுப்பு 72. குறித்தசில நேர்வுகளில் குற்ற மன்னிப்புகள் முதலியன அளிப்பதற்கும் மற்றும் தீர்ப்புத் தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு, இறுத்தல் செய்வதற்கு அல்லது மாற்றிக்குறைப்பதற்கும் குடியரசுத்தலைவருக்குற்ற அதிகாரம். 
  • உறுப்பு 73. ஒன்றியத்து ஆட்சி அதிகாரத்தின் அளாவுகை.
நாடாளுமன்ற அமைச்சரவை (Cabinet)

  • உறுப்பு 74. குடியரசுத்தலைவருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும், தேர்வுரை வழங்குதலும். 
  • உறுப்பு 75. அமைச்சர்களைப் பற்றிய பிற வகையங்கள்.
இந்தியத் தலைமை வழக்கறிஞர் (Attorney General of India)

  • உறுப்பு 76. இந்தியாவின் தலைமை வழக்கறிஞர்.
அரசாங்க அலுவல் நடத்து முறை 

  • உறுப்பு 77. இந்திய அரசாங்கத்தின் அலுவல் நடத்து முறை. 
  • உறுப்பு 78. குடியரசுத்தலைவருக்குத் தகவல் தருவது முதலியவை பொறுத்து தலைமை அமைச்சருக்குள்ள கடமைகள்.
அத்தியாயம் II - இந்திய நாடாளுமன்றம் (Parliament)

பொதுவியல் 

  • உறுப்பு 79. நாடாளுமன்றத்தின் அமைப்பு. 
  • உறுப்பு 80. மாநிலங்களவையின் கட்டமைப்பு .
இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமுதாயப்பணி 

  • உறுப்பு 81. மக்களவையின் கட்டமைப்பு. 
  • உறுப்பு 82. ஒவ்வொரு முறையும் மக்கள் கணக்கெடுப்பிற்குப் பின்பு மறுநேரமைவு செய்தல். 
  • உறுப்பு 83. நாடாளுமன்ற அவைகளின் காலவரை. 
  • உறுப்பு 84. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு. 
  • உறுப்பு 85. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள், அக்கூட்டத்தொடர்களை இறுதிசெய்தல் மற்றும் கலைத்தல். 
  • உறுப்பு 86. நாடாளுமன்ற அவைகளில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் குடியரசுத்தலைவருக்குள்ள உரிமை. 
  • உறுப்பு 87. குடியரசுத்தலைவரின் சிறப்புரை.
  • உறுப்பு 88. நாடாளுமன்ற அவைகள் தொடர்பாக அமைச்சர்களுக்கும் தலைமை வழக்கறிஞருக்கும் உள்ள உரிமைகள்.
நாடாளுமன்றப் பதவியாளர்கள் 

  • உறுப்பு 89. மாநிலங்களவைத் தலைவரும், துணைத் தலைவரும்.
  • உறுப்பு 90. மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியை விட்டகலுதலும் பதவி . விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும். 
  • உறுப்பு 91. மாநிலங்களவைத் தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம். 
  • உறுப்பு 92. மாநிலங்களவைத் தலைவரை அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது. 
  • உறுப்பு 93. மக்களவைத் தலைவரும் துணைத் தலைவரும்.
  • உறுப்பு 94. மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் பதவியை விட்டகலுதலும் பதவி விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும். 
  • உறுப்பு 95. மக்களவைத் தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம்.
  • உறுப்பு 96. மக்களவைத் தலைவரை அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும்போது, அவர் தலைமை வகித்தல் ஆகாது. 
  • உறுப்பு 97. மாநிலங்களவைத் தலைவர், துணைத்தலைவர், மக்களவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும். 
  • உறுப்பு 98. நாடாளுமன்றத்தின் செயலகம்.
அலுவல் நடத்துமுறை 

  • உறுப்பு 99. உறுப்பினர்களுக்குற்ற ஆணை மொழி அல்லது உறுதிமொழி.
  • உறுப்பு 100. நாடாளுமன்ற அவைகளில் வாக்களித்தல், காலியிடங்கள் இருந்தபோதிலும் செயலுறுவதற்கு அவைகளுக்குள்ள அதிகாரம் மற்றும் குறைவெண்.
உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் 

  • உறுப்பு 101. பதவியிடங்களை விட்டகலுதல். 
  • உறுப்பு 102. உறுப்பினர் பதவித் தகுதிக்கேடுகள். 
  • உறுப்பு 103. உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் பற்றிய பிரச்சினைகளின் மீது முடிபு. 
  • உறுப்பு 104. 99 ஆம் உறுப்பின்படி ஆணைமொழி அல்லது உறுதிமொழி ஏற்பதற்கு முன்போ தகுதியற்றவராக அல்லது தகுதிக்கேடுற்றவராக இருக்கும்போதோ, அவையில் அமர்ந்தாலும் வாக்களித்தாலும் அதற்குற்ற தண்டம். 
நாடாளுமன்றத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள் 

  • உறுப்பு 105. நாடாளுமன்ற அவைகளுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் முதலியன.
  • உறுப்பு 106. உறுப்பினர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும். சட்டமியற்றுவதற்கான நெறிமுறை 
  • உறுப்பு 107. சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்தலும் நிறைவேற்றுதலும் பற்றிய வகையங்கள். 
  • உறுப்பு 108. குறித்தசில நேர்வுகளில் ஈரவைகளின் கூட்டமர்வு.
  • உறுப்பு 109. பணச் சட்டமுன்வடிவுகள் பொறுத்த தனியுறு நெறிமுறை. 
  • உறுப்பு 110. “பணச் சட்டமுன்வடிவுகள்” என்பதன் பொருள்வரையறை. 
  • உறுப்பு 111. சட்டமுன்வடிவுகளுக்கு ஏற்பிசைவு.
நிதி பற்றிய பொருட்பாடுகளுக்குற்ற நெறிமுறை 

  • உறுப்பு 112. ஆண்டு நிதிநிலை அறிக்கை. 
  • உறுப்பு 113. மதிப்பீடுகள் பற்றிய நாடாளுமன்ற நெறிமுறை. 
  • உறுப்பு 114. நிதி ஒதுக்களிப்புச் சட்ட முன்வடிவுகள். 
  • உறுப்பு 115. துணை, கூடுதல் அல்லது மிகை மானியங்கள். 
  • உறுப்பு 116. முன்னளிப்பு மானியம், முன்பற்றுத்தொகை மானியம், குறித்த தனிமானியம் இவற்றின் மீதான வாக்களிப்பு.
  • உறுப்பு 117. நிதிச் சட்டமுன்வடிவுகள் பற்றிய தனியுறு வகையங்கள்.
பொதுவியலான நெறிமுறை 

  • உறுப்பு 118. நெறிமுறை விதிகள். 
  • உறுப்பு 119. நாடாளுமன்றத்தில் நிதிஅலுவல்கள் பற்றிய நெறிமுறையைச் சட்டத்தினால் ஒழுங்குறுத்துதல். 
  • உறுப்பு 120. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படவேண்டிய மொழி.
  • உறுப்பு 121. நாடாளுமன்றத்தில் விவாதத்தின்மீது வரையறை. 
  • உறுப்பு 122. நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரித்தல் ஆகாது.
அத்தியாயம் III 

குடியரசுத்தலைவரின் சட்டமியற்றும் அதிகாரங்கள் 

  • உறுப்பு 123. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசரச் சட்டங்களைச் சாற்றம் செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம்.

அத்தியாயம் IV

இந்திய நீதித் துறை / உச்ச நீதிமன்றம்

  • உறுப்பு 124. உச்ச நீதிமன்றத்தை நிறுவுதலும் அதன் அமைப்பும்.
  • உறுப்பு 125. நீதிபதிகளின் வரையூதியங்கள் முதலியன. 
  • உறுப்பு 126. செயலமர் தலைமை நீதிபதியை அமர்த்துதல். 
  • உறுப்பு 127. குறித்தபணி நீதிபதிகளை அமர்த்துதல்.
  • உறுப்பு 128. ஓய்வுபெற்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றங்களின் அமர்வுகளில் பணியாற்றுதல்.
  • உறுப்பு 129. உச்ச நீதிமன்றம் ஒரு நிலையாவண நீதிமன்றமாக இருக்கும். 
  • உறுப்பு 130. உச்ச நீதிமன்றத்தின் அமர்கையிடம். 
  • உறுப்பு 131. உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகாரவரம்பு. 
    • உறுப்பு 131அ. (நீக்கறவு செய்யப்பட்டது).
  • உறுப்பு 132. குறித்த சில வழக்குகளில் உயர் நீதிமன்றங்களிலிருந்து எழும் மேன்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு.
  • உறுப்பு 133. உரிமையியல் பொருட்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றங்களிலிருந்து எழும் மேன்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு.
  • உறுப்பு 134. குற்றவியல் பொருட்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு. 
    • உறுப்பு 134அ. உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்துகொள்வதற்கான உறுதியுரை. 
  • உறுப்பு 135. நிலவுறும் சட்டத்தின்படி கூட்டாட்சிய நீதிமன்றத்திற்குள்ள அதிகாரவரம்பும் அதிகாரங்களும், உச்ச நீதிமன்றத்தாலும் செலுத்தத்தகுவன ஆகும். 
  • உறுப்பு 136. உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து கொள்வதற்கு அதன் தனியுறு அனுமதி. 
  • உறுப்பு 137. உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்புரைகளை அல்லது ஆணைகளை மறுஆய்வு செய்தல்.
  • உறுப்பு 138. உச்ச நீதிமன்ற அதிகாரவரம்பை விரிவாக்குதல்.
  • உறுப்பு 139. குறித்த சில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குதல்.
    • உறுப்பு 139அ. குறித்தசில வழக்குகளை மாற்றுகை செய்தல். 
  • உறுப்பு 140. உச்ச நீதிமன்றத்தின் சார்பியல்பான அதிகாரங்கள்.
  • உறுப்பு 141. உச்ச நீதிமன்றத்தால் விளம்பப்படும் சட்டநெறி, நீதிமன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்.
  • உறுப்பு 142. உச்ச நீதிமன்றத் தீர்ப்பாணைகள், ஆணைகள் இவற்றைச் செயலுறுத்துதலும் வெளிக்கொணர்தல் முதலியவை குறித்த ஆணைகளும்.
  • உறுப்பு 143. உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாய்வு செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம்
  • உறுப்பு 144. ஆட்சி முறை மற்றும் நீதிமுறை அதிகார அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் செயலுறும்.
    • உறுப்பு 144அ. (நீக்கறவு செய்யப்பட்டது). 
  • உறுப்பு 145. நீதிமன்ற விதிகள், முதலியன.
  • உறுப்பு 146. உச்ச நீதிமன்றத்தின் அலுவலர்களும் பணியாளர்களும் செலவுகளும்.
  • உறுப்பு 147. பொருள்கோள்.

அத்தியாயம் V 

இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையர் (Comptroller and Auditor General of India)

  • உறுப்பு 148. இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர். 
  • உறுப்பு 149. கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையரின் கடமைகளும் அதிகாரங்களும்.
  • உறுப்பு 150. ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகளின் அமைவுமுறை. 
  • உறுப்பு 151. தணிக்கை அறிக்கைகள்.

பகுதி VI - மாநிலங்கள்


அத்தியாயம் I - பொதுவியல்

  • உறுப்பு 152. பொருள்வரையறை.
அத்தியாயம் II - ஆட்சித்துறை
மாநில ஆளுநர் 
  • உறுப்பு 153. மாநிலங்களின் ஆளுநர்கள்.
  • உறுப்பு 154. மாநிலத்தின் ஆட்சி அதிகாரம். 
  • உறுப்பு 155. ஆளுநரை அமர்த்துதல். 
  • உறுப்பு 156. ஆளுநரின் பதவிக்காலம். 
  • உறுப்பு 157. ஆளுநராக அமர்த்தப்பெறுவதற்கான தகுதிப்பாடுகள். 
  • உறுப்பு 158. ஆளுநரின் பதவிக்கான வரைமுறைகள். 
  • உறுப்பு 159. ஆளுநருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 
  • உறுப்பு 160. குறித்தசில எதிருறு நிகழ்வுகளில் ஆளுநரின் பதவிப்பணிகளை ஆற்றிவருதல். 
  • உறுப்பு 161. குறித்தசில நேர்வுகளில் குற்றமன்னிப்புகள், முதலியன அளிப்பதற்கும் மற்றும் தீர்ப்புத்தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு, இறுத்தல் செய்வதற்கு அல்லது மாற்றிக்குறைப்பதற்கும் ஆளுநருக்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 162. மாநில ஆட்சி அதிகாரத்தின் அளாவுகை. 

மாநில அமைச்சரவை

  • உறுப்பு 163. ஆளுநருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும் தேர்வுரை வழங்குதலும்.
  • உறுப்பு 163. ஆளுநருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும் தேர்வுரை வழங்குதலும்.
  • உறுப்பு 164. அமைச்சர்களைப் பற்றிய பிற வகையங்கள். 

மாநில தலைமை வழக்குரைஞர் (Accountant General)

  • உறுப்பு 165. மாநிலத்தின் தலைமை வழக்குரைஞர்.

அரசாங்க அலுவல் நடத்துமுறை

  • உறுப்பு 166. மாநில அரசாங்கத்தின் அலுவல் நடத்துமுறை.
  • உறுப்பு 167. ஆளுநருக்குத் தகவல் தருவது முதலியவை பொறுத்து முதலமைச்சருக்குள்ள கடமைகள்.

அத்தியாயம் III - மாநிலச் சட்டமன்றம் (State Legislature)

பொதுவியல்

  • உறுப்பு 168. மாநிலச் சட்டமன்றங்களின் அமைப்பு. 
  • உறுப்பு 169. மாநிலங்களில் சட்டமன்ற மேலவைகளை ஒழித்தல் அல்லது உருவாக்குதல். 
  • உறுப்பு 170. சட்டமன்றப் பேரவைகளின் கட்டமைப்பு.
  • உறுப்பு 171. சட்டமன்ற மேலவைகளின் கட்டமைப்பு.

இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் மற்றும் சமுதாயப்பணி 

  • உறுப்பு 172. மாநிலச் சட்டமன்றங்களின் காலவரை.
  • உறுப்பு 173. மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு. 
  • உறுப்பு 174. மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள், அக்கூட்டத்தொடர்களை இறுதிசெய்தல் மற்றும் கலைத்தல். 
  • உறுப்பு 175. சட்டமன்ற அவையில் அல்லது அவைகளில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் ஆளுநருக்குள்ள உரிமை. 
  • உறுப்பு 176. ஆளுநரின் சிறப்புரை. 
  • உறுப்பு 177. சட்டமன்ற அவைகள் தொடர்பாக, அமைச்சர்களுக்கும் தலைமை வழக்குரைஞருக்கும் உள்ள உரிமைகள்.
  • உறுப்பு 176. ஆளுநரின் சிறப்புரை. 
  • உறுப்பு 177. சட்டமன்ற அவைகள் தொடர்பாக, அமைச்சர்களுக்கும் தலைமை வழக்குரைஞருக்கும் உள்ள உரிமைகள்.

மாநில சட்டமன்றப் பதவியாளர்கள்

  • உறுப்பு 178. சட்டமன்றப் பேரவைத்தலைவரும் துணைத்தலைவரும். 
  • உறுப்பு 179. பேரவைத்தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவியைவிட்டகலுதலும் பதவிவிலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும். 
  • உறுப்பு 180. பேரவைத்தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ, தலைவராகச் செயலுறவோ துணைத்தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம். 
  • உறுப்பு 181. பேரவைத்தலைவரை அல்லது துணைத்தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது. 
  • உறுப்பு 182. சட்டமன்ற மேலவைத் தலைவரும் துணைத்தலைவரும்.
  • உறுப்பு 183. சட்டமன்ற மேலவைத்தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவியை விட்டகலுதலும் பதவி விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும். 
  • உறுப்பு 184. மேலவைத்தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத்தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம். 
  • உறுப்பு 185. மேலவைத்தலைவரை அல்லது துணைத்தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது. 
  • உறுப்பு 186. பேரவைத் தலைவர், துணைத்தலைவர், மேலவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும். 
  • உறுப்பு 187. மாநிலச் சட்டமன்றத்தின் செயலகம்.

அலுவல் நடத்துமுறை 

  • உறுப்பு 188. உறுப்பினர்களுக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 
  • உறுப்பு 189. சட்டமன்ற அவைகளில் வாக்களித்தல், காலியிடங்கள் இருந்தபோதிலும் செயலுறுவதற்கு அவைளுக்குள்ள அதிகாரம் மற்றும் குறைவெண்.

உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் 

  • உறுப்பு 190. பதவியிடங்களை விட்டகலுதல்.
  • உறுப்பு 191. உறுப்பினர் பதவித் தகுதிகேடுகள்.
  • உறுப்பு 192. உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் பற்றிய பிரச்சினைகளின்மீது முடிவு.
  • உறுப்பு 193. 188ஆம் உறுப்பின்படி ஆணைமொழி அல்லது உறுதிமொழி ஏற்பதற்கு முன்போ தகுதியற்றவராக அல்லது தகுதிக்கேடுற்றவராக இருக்கும்போதோ அவையில் அமர்ந்தாலும் வாக்களித்தாலும் அதற்குற்ற தண்டம்.

மாநிலச் சட்டமன்றங்களுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள் 

  • உறுப்பு 194. சட்டமன்ற அவைகளுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் முதலியன.
  • உறுப்பு 195. உறுப்பினர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும்.

சட்டமியற்றுவதற்கான நெறிமுறை

  • உறுப்பு 196. சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்தலும் நிறைவேற்றுதலும் பற்றிய வகையங்கள்.
  • உறுப்பு 197. பணச் சட்டமுன்வடிவுகள் அல்லாத பிற சட்டமுன்வடிவுகள் குறித்துச் சட்டமன்ற மேலவையின் அதிகாரங்கள்மீது வரையறை.
  • உறுப்பு 198. பணச் சட்டமுன்வடிவுகள் பொறுத்த தனியுறு நெறிமுறை.
  • உறுப்பு 199. “பணச் சட்டமுன்வடிவுகள்” என்பதன் பொருள்வரையறை. 
  • உறுப்பு 200. சட்டமுன்வடிவுகளுக்கு ஏற்பிசைவு. 
  • உறுப்பு 201. ஓர்வுக்கென நிறுத்திவைக்கப்படும் சட்டமுன்வடிவுகள்.

நிதிபற்றிய பொருட்பாடுகளுக்குற்ற நெறிமுறை 

  • உறுப்பு 202. ஆண்டு நிதிநிலை அறிக்கை.
  • உறுப்பு 203. மதிப்பீடுகள் பற்றிய சட்டமன்ற நெறிமுறை. 
  • உறுப்பு 204. நிதிஒதுக்களிப்புச் சட்டமுன்வடிவுகள். 
  • உறுப்பு 205. துணை, கூடுதல் அல்லது மிகை மானியங்கள். 
  • உறுப்பு 206. முன்னளிப்பு மானியம், முன்பற்றுத்தொகை மானியம் குறித்த தனிமானியம் இவற்றின் மீதான வாக்களிப்பு. 
  • உறுப்பு 207. நிதிச் சட்டமுன்வடிவுகள் பற்றிய தனியுறு வகையங்கள்.

பொதுவியலான நெறிமுறை 

  • உறுப்பு 208. நெறிமுறை விதிகள்.
  • உறுப்பு 209. மாநிலச் சட்டமன்றத்தில் நிதி அலுவல் பற்றிய நெறிமுறையைச் சட்டத்தினால் ஒழுங்குறுத்துதல். 
  • உறுப்பு 210. சட்டமன்றத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி. 
  • உறுப்பு 211. சட்டமன்றத்தில் விவாதத்தின்மீது வரையறை. 
  • உறுப்பு 212. சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரித்தல் ஆகாது.

அத்தியாயம் IV - ஆளுநரின் சட்டமியற்றும் அதிகாரம் 

  • உறுப்பு 213. சட்டமன்றத்தின் கூட்டத்தொடர், இறுதிசெய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசரச்சட்டங்களைச் சாற்றம் செய்வதற்கு ஆளுநருக்குள்ள அதிகாரம்.

அத்தியாயம் V - மாநில உயர் நீதிமன்றங்கள்

  • உறுப்பு 214. மாநிலங்களுக்கான உயர் நீதிமன்றங்கள்.
  • உறுப்பு 215. உயர் நீதிமன்றங்கள் நிலையாவண நீதிமன்றங்களாக இருக்கும்.
  • உறுப்பு 216. உயர் நீதிமன்றங்களின் அமைப்பு. 
  • உறுப்பு 217. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் அமர்த்துகை மற்றும் அப்பதவிக்கான வரைமுறைகள். 
  • உறுப்பு 218. உச்ச நீதிமன்றம் தொடர்பான குறித்த சில வகையங்கள் உயர் நீதிமன்றங்களுக்குப் பொருந்துறுதல். 
  • உறுப்பு 219. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 
  • உறுப்பு 220. நிலையமர் நீதிபதியாக இருந்தவர் வழக்குரைஞராகத் தொழிலாற்றுவதன்மீது வரையறை. 
  • உறுப்பு 221. நீதிபதிகளின் வரையூதியங்கள் முதலியன. 
  • உறுப்பு 222. நீதிபதி ஒருவரை ஓர் உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுதல். 
  • உறுப்பு 223. செயலமர் தலைமை நீதிபதியை அமர்த்துதல். 
  • உறுப்பு 224. கூடுதல் மற்றும் செயலமர் நீதிபதிகளை அமர்த்துதல்,
    • உறுப்பு 224அ. உயர் நீதிமன்றங்களின் அமர்வுகளில், ஓய்வுபெற்ற நீதிபதிகளை அமர்த்துதல். 
  • உறுப்பு 225. நிலவுறும் உயர் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு. 
  • உறுப்பு 226. குறித்தசில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்க உயர் நீதிமன்றங்களுக்குள்ள அதிகாரம். 
    • உறுப்பு 226அ. (நீக்கறவு செய்யப்பட்டது) 
  • உறுப்பு 227. அனைத்து நீதிமன்றங்களையும் கண்காணிப்பதற்கு உயர் நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம்.
  • உறுப்பு 228. குறித்தசில வழக்குகளை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுதல். 
    • உறுப்பு 228அ. (நீக்கறவு செய்யப்பட்டது). 
  • உறுப்பு 229. உயர் நீதிமன்றங்களின் அலுவலர்களும் பணியாளர்களும் செலவுகளும். 
  • உறுப்பு 230. உயர் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பை ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கு அளாவச் செய்தல். 
  • உறுப்பு 231. இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொதுவானதோர் உயர் நீதிமன்றத்தினை நிறுவுதல். 
  • உறுப்பு 232. (விட்டுவிடப்பட்டது).

அத்தியாயம் VI - கீழமை நீதிமன்றங்கள் 

  • உறுப்பு 233. மாவட்ட நீதிபதிகளை அமர்த்துதல்.
    • உறுப்பு 233அ. குறித்த சில மாவட்ட நீதிபதிகளின் அமர்த்துகை, அவர்கள் வழங்கிய தீர்ப்புரைகள் முதலியவற்றைச் செல்லத்தக்கன ஆக்குதல். 
  • உறுப்பு 234. நீதித் துறைப் பணியத்திற்கு மாவட்ட நீதிபதிகள் அல்லாத பிறரை எடுத்தல். 
  • உறுப்பு 235. கீழமை நீதிமன்றங்கள் மீதான கட்டாள்கை. 
  • உறுப்பு 236. பொருள்கோள். 
  • உறுப்பு 237. இந்த அத்தியாயத்தின் வகையங்கள், குறித்தசில வகுப்பு அல்லது வகுப்புகளைச் சேர்ந்த குற்றவியல் நடுவர்களுக்குப் பொருந்துறுதல்.

பகுதி VII

முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆ பகுதியிலுள்ள மாநிலங்கள் 


  • உறுப்பு 238. (நீக்கறவு செய்யப்பட்டது).

பகுதி VIII

ஒன்றியத்து ஆட்சி நிலவரைகள்


  • உறுப்பு 239. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளின் நிருவாகம். 
    • உறுப்பு 239அ. குறித்தசில ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கென சட்டமன்றங்களை அல்லது அமைச்சரவையை அல்லது இரண்டையும் உருவாக்குதல். 
      • உறுப்பு 239அஅ. தில்லியைப் பொறுத்து சிறப்பு ஏற்பாடுகள். 
      • உறுப்பு 239அஆ. அரசமைப்பின் இயங்கும் முறை செயலற்றுப் போகும் நேர்வில் ஏற்பாடு. 
    • உறுப்பு 239ஆ சட்ட மன்றக் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசரச் சட்டங்களைச் சாற்றம் செய்வதற்கு ஆளுகையருக்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 240. குறித்தசில ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்காக ஒழுங்குறுத்து நெறிமுறைகளை வகுப்பதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 241. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கான உயர் நீதிமன்றங்கள். 
  • உறுப்பு 242. (நீக்கறவு செய்யப்பட்டது).

பகுதி IX - ஊராட்சிகள் 


  • உறுப்பு 243. பொருள் வரையறைகள். 
  • உறுப்பு 243அ. கிராமசபை. 
  • உறுப்பு 243ஆ. ஊராட்சிகளை அமைத்தல். 
  • உறுப்பு 243இ. ஊராட்சிகளின் கட்டமைப்பு. 
  • உறுப்பு 243ஈ. பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல்.
  • உறுப்பு 243உ. உணராட்சிகள் முதலியவற்றின் காலஅளவு. 
  • உறுப்பு 244ஊ, உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடுகள். 
  • உறுப்பு 243எ. ஊராட்சிகளின் அதிகாரங்கள், அதிகார அடைவுகள், பொறுப்புகள் ஆகியன. 
  • உறுப்பு 243ஏ. வரிகளை விதிப்பதற்கு ஊராட்சிகளுக்குள்ள அதிகாரம் மற்றும் அதன் நிதியங்கள். 
  • உறுப்பு 243ஐ. நிதிநிலையை மறுஆய்வு செய்ய நிதி ஆணையத்தை அமைத்தல். 
  • உறுப்பு 243ஒ. ஊராட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல். 
  • உறுப்பு 243ஓ. ஊராட்சிகளுக்குத் தேர்தல்கள்.
  • உறுப்பு 243ஒள. ஒன்றியத்து ஆட்சி நிலவரைகளுக்குப் பொருந்துதல்.
  • உறுப்பு 243க. இந்தப் பகுதி குறித்தசில வரையிடங்களுக்குப் பொருந்துறாது. 
  • உறுப்பு 243ங. நிலவுறும் சட்டங்களும் ஊராட்சிகளும் தொடர்ந்திருந்து வருதல். 
  • உறுப்பு 243ச. தேர்தல் தொடர்பான பொருட்பாடுகளில் நீதிமன்றம் குறுக்கிடுவதற்குத் தடை.

பகுதி IXஅ - நகராட்சிகள் 


  • உறுப்பு 243ஞ. பொருள்வரையறைகள். 
  • உறுப்பு 243ட. நகராட்சிகளை அமைத்தல். 
  • உறுப்பு 243ண. நகராட்சிகளின் கட்டமைப்பு. 
  • உறுப்பு 243த. நகராட்சித் தொகுதிக் குழுக்கள் முதலியவற்றை அமைத்தல் மற்றும் அவற்றின் கட்டமைப்பு. 
  • உறுப்பு 243ந. பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல். 
  • உறுப்பு 243ப. நகராட்சிகளின் கால அளவு முதலியன. 
  • உறுப்பு 243ம. உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடுகள். 
  • உறுப்பு 243ய. நகராட்சிகளின் அதிகாரங்கள், அதிகாரஅடைவு மற்றும் பொறுப்புகள் முதலியன. 
  • உறுப்பு 243ர. வரிகள் விதிப்பதற்கு நகராட்சிகளுக்குள்ள அதிகாரம் மற்றும் அதன் நிதியங்கள். 
  • உறுப்பு 243ல. நிதி ஆணையம். 
  • உறுப்பு 243வ. நகராட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல்.
  • உறுப்பு 243வஅ. நகராட்சிகளுக்குத் தேர்தல்கள். 
  • உறுப்பு 243வஆ. ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்குப் பொருந்துதல். 
  • உறுப்பு 243வஇ. இந்தப் பகுதி குறித்த சில வரையிடங்களுக்குப் பொருந்தாது. 
  • உறுப்பு 243வஈ. மாவட்ட திட்டக் குழு. 
  • உறுப்பு 243வஉ. பெருநகர் திட்டத்திற்கான குழு. 
  • உறுப்பு 243வஊ. நிலவுறும் சட்டங்களும் நகராட்சிகளும் தொடர்ந்திருத்தல். 
  • உறுப்பு 243வஎ. தேர்தல் பற்றிய பொருட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்குத் தடை.

பகுதி X 

பட்டியல் வரையிடங்களும் பழங்குடியினர் வரையிடங்களும் 


  • உறுப்பு 244. பட்டியல் வரையிடங்கள், பழங்குடியினர் வரையிடங்கள் ஆகியவற்றின் நிருவாகம். 
    • உறுப்பு 244அ. அசாமிலுள்ள குறித்தசில பழங்குடியினர் வரையிடங்களை உள்ளடக்கிய தன்னாட்சிக் குறுநிலத்தை அமைத்தலும் அவ்விடங்களுக்கென உள்ளாட்சி சட்டமன்றத்தை அல்லது அமைச்சரவையை அல்லது இரண்டையும் உருவாக்குதலும்.

பகுதி XI 

ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் உள்ள தொடர்புநிலைகள் 


அத்தியாயம் I - சட்டமியற்றுத் தொடர்புநிலைகள்

சட்டமியற்று அதிகாரப் பகிர்வு

  • உறுப்பு 245. நாடாளுமன்றத்தாலும் மாநிலங்களின் சட்டமன்றங்களாலும் இயற்றப்படும் சட்டங்களின் அளாவுகை. 
  • உறுப்பு 246. நாடாளுமன்றத்தாலும் மாநிலங்களின் சட்டமன்றங்களாலும் இயற்றப்படும் சட்டங்களின் உறுபொருள். 
  • உறுப்பு 247. குறித்த சில கூடுதல் நீதிமன்றங்களை நிறுவ வகைசெய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 248. சட்டமியற்றுவதற்கான எஞ்சு அதிகாரங்கள்.
  • உறுப்பு 249. நாட்டின் நலன் கருதி மாநிலத்துப் பட்டியலிலுள்ள பொருட்பாடு எதனைப் பொறுத்தும் சட்டமியற்ற நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 250. நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டில் இருக்குங்கால், மாநிலத்துப் பட்டியலிலுள்ள எந்தப் பொருட்பாட்டினைப் பொறுத்தும் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 251. நாடாளுமன்றத்தால் 249, 250 ஆகிய உறுப்புகளின்படி இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் மாநிலச் சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு. 
  • உறுப்பு 252. இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்காக அவற்றின் இசைவுடன் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும், அத்தகைய சட்டத்தைப் பிற மாநிலம் எதுவும் ஏற்றுமேற்கொள்ளுதலும். 
  • உறுப்பு 253. பன்னாட்டு உடன்பாடுகளைச் செல்திறப்படுத்துவதற்காகச் சட்டமியற்றுதல்.
  • உறுப்பு 254. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு. 
  • உறுப்பு 255. பரிந்துரைகள், முன்ஒப்பளிப்புகள் ஆகியவை பற்றிய வேண்டுறுத்தங்களை நெறிமுறை சார்ந்த பொருட்பாடுகளாக மட்டுமே கொள்ளுதல் வேண்டும்.

அத்தியாயம் - II 

நிருவாகத் தொடர்பு நிலைகள்

பொதுவியல் 

  • உறுப்பு 256. மாநிலங்களின் மற்றும் ஒன்றியத்தின் கடமைப்பாடு. 
  • உறுப்பு 257. குறித்தசில நேர்வுகளில் மாநிலங்கள்மீது ஒன்றியத்திற்குள்ள கட்டாள்கை. 
  • உறுப்பு 257அ. (நீக்கறவு செய்யப்பட்டது) 
  • உறுப்பு 258. குறித்தசில நேர்வுகளில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் முதலியவற்றை வழங்குவதற்கு ஒன்றியத்திற்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 258அ. ஒன்றியத்திடம் செயற்பணிகளை ஒப்படைப்பதற்கு மாநிலங்களுக்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 259. (நீக்கறவு செய்யப்பட்டது) 
  • உறுப்பு 260. இந்தியாவிற்கு வெளியிலுள்ள நிலவரைகள் தொடர்பாக ஒன்றியத்திற்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 261. அரசின் செயற்பாடுகள், பதிவணங்கள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள்

நீர் தொடர்பான பூசல்கள் 

  • உறுப்பு 262. மாநிலங்களிடையேயான ஆறுகளின் அல்லது ஆற்றுப்பள்ளத்தாக்குகளின் நீர் தொடர்பான பூசல்களுக்கு நீதிமுறைத் தீர்வு.

மாநிலங்கள் இயைந்து இயங்குதல் 

  • உறுப்பு 263. மாநிலங்களிடையமை மன்றம் தொடர்பான ஏற்பாடுகள்.

பகுதி XII 

நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் உரிமை வழக்குகள்


அத்தியாயம் I - நிதி

பொதுவியல் 

  • உறுப்பு 264. பொருள்கோள்.
  • உறுப்பு 265. சட்டத்தினால் பெறும் அதிகாரத்தின்படி அல்லாமல் வரிகளை விதித்தல் ஆகாது.
  • உறுப்பு 266. இந்தியாவின் மற்றும் மாநிலங்களின் திரள் நிதியங்களும் அரசுப் பொதுக் கணக்குகளும். 
  • உறுப்பு 267. எதிரதாக்காப்பு நிதியம் .

ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே வருவாய்களைப் பகிர்ந்தளித்தல் 

  • உறுப்பு 268. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநிலங்கள் ஈட்டிப் பயன்படுத்திக் கொள்ளும் தீர்வைகள். 
  • உறுப்பு 268அ. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு ஆனால் ஒன்றியமும் மாநிலங்களும் ஈட்டிப் பயன்படுத்திக்கொள்ளும் சேவை வரி. 
  • உறுப்பு 269. ஒன்றியத்தால் விதித்து ஈட்டப்பட்டு, ஆனால் மாநிலங்களுக்குக் குறித்தொதுக்கப்படும் வரிகள். 
  • உறுப்பு 270. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு, ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படும் வரிகள். 
  • உறுப்பு 271. ஒன்றியத்தின் நோக்கங்களுக்காகக் குறித்தசில தீர்வைகளும், வரிகள் ஆகியவற்றின் மீதான மேல்வரி. 
  • உறுப்பு 272. (நீக்கறவு செய்யப்பட்டது). 
  • உறுப்பு 273. சணல், சணற்பொருள்கள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதித் தீர்வைக்குப் பதிலாக மானியங்கள். 
  • உறுப்பு 274. மாநிலங்கள் அக்கறை கொண்டுள்ள வரி விதிப்பைப் பாதிக்கும் சட்டமுன்வடிவுகளுக்குக் குடியரசுத்தலைவரின் முன் பரிந்துரை வேண்டுறுவதாகும். 
  • உறுப்பு 275. குறித்தசில மாநிலங்களுக்கு ஒன்றியத்திலிருந்து மானியங்கள்.
  • உறுப்பு 276. விழைதொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள், வேலையமர்த்தங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள். 
  • உறுப்பு 277. காப்புரைகள். 
  • உறுப்பு 278. (நீக்கறவு செய்யப்பட்டது). 
  • உறுப்பு 279. “நிகரத் தொகை” முதலியவற்றைக் கணக்கிடுதல். 
  • உறுப்பு 280. நிதி ஆணையம். 
  • உறுப்பு 281. நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்.

நிதிபற்றிய பல்திற வகையங்கள் 

  • உறுப்பு 282. ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் அதன் வருவாய்களிலிருந்து செய்வதாகும் செலவுகள். 
  • உறுப்பு 283. திரள் நிதியங்கள், எதிரதாக்காப்பு நிதியங்கள், அரசுப் பொதுக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தொகைகள் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருத்தல் முதலியன. 
  • உறுப்பு 284. அரசுப் பணியாளர்களாலும் நீதிமன்றங்களாலும் பெற்றுக்கொள்ளப்படும் வழக்காளிகளின் வைப்பீடுகள், பிற பணத்தொகைகள் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருத்தல் .
  • உறுப்பு 285. மாநில வரி விதிப்பிலிருந்து ஒன்றியத்து சொத்திற்கு விலக்களிப்பு.
  • உறுப்பு 286. சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினைமீது வரிவிதிப்பது குறித்த வரையறைகள். 
  • உறுப்பு 287. மின்விசை மீதான வரிகளிலிருந்து விலக்களிப்பு. 
  • உறுப்பு 288. குறித்தசில நேர்வுகளில் நீர் அல்லது மின்விசைக்கு  மாநிலங்களின்வரிவிதிப்பிலிருந்து விலக்களிப்பு. 
  • உறுப்பு 289. மாநிலம் ஒன்றன் சொத்திற்கும் வருமானத்திற்கும், ஒன்றியத்து வரிவிதிப்பிலிருந்து விலக்களிப்பு.
  • உறுப்பு 290. குறித்த சில செலவுகள், ஒய்வூதியங்கள் ஆகியவை பொறுத்த நேரமைவு. 
  • உறுப்பு 290அ. குறித்தசில தேவசுவம் நிதியங்களுக்கு ஆண்டுதோறும் பணம் செலுத்துதல். 
  • உறுப்பு 291. (நீக்கறவு செய்யப்பட்டது).

அத்தியாயம் - II

கடன்பெறுதல் 

  • உறுப்பு 292. இந்திய அரசாங்கம் கடன் பெறுதல். 
  • உறுப்பு 293. மாநிலங்கள் கடன்பெறுதல்.

அத்தியாயம் - III 

சொத்து, ஒப்பந்தங்கள், உரிமைகள், பொறுப்புடைவுகள், கடமைப்பாடுகள் மற்றும் உரிமை வழக்குகள். 

  • உறுப்பு 294. குறித்தசில நேர்வுகளில் சொத்து, சொத்திருப்புகள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் ஆகியவற்றிற்கு வாரிசுரிமை. 
  • உறுப்பு 295. பிற நேர்வுகளில் சொத்து, சொத்திருப்புகள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் ஆகியவற்றிற்கு வாரிசுரிமை. 
  • உறுப்பு 296. வாரிசு இல்லாமை அல்லது உரிமைகோருநர் இல்லாமை அல்லது உரிமைக்குற்றவர் இல்லாமை காரணமாக சேர்ந்தடையும் சொத்து.
  • உறுப்பு 297. ஆட்சிநிலவரை சார்ந்த கடலினுள் அல்லது கண்டத் திட்டினுள் இருக்கும் பெறுமதியான பொருள்களும் தனிப்பட்டதான பொருளியல் மண்டலங்களின் வளஆதாரங்களும் ஒன்றியத்திடம் உற்றமைதல். 
  • உறுப்பு 298. வணிகம் முதலியவற்றை நடத்தி வருவதற்கான அதிகாரம். 
  • உறுப்பு 299. ஒப்பந்தங்கள். 
  • உறுப்பு 300. உரிமை வழக்குகளும் நடவடிக்கைகளும்.

அத்தியாயம் - IV

சொத்துரிமை 

  • உறுப்பு 300அ. சட்டம் அளிக்கும் அதிகாரத்தின்படி அல்லாமல் எவரிடமிருந்தும் சொத்துபறிக்கப்படுதல் ஆகாது.

பகுதி XIII

இந்திய ஆட்சிநிலவரைக்குள், வணிகம், வாணிபம் மற்றும் தொடர்புறவுகள் 


  • உறுப்பு 301. வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றிற்குத் தடையின்மை . 
  • உறுப்பு 302. வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றின்மீது கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு நாடாளுமன்றத்துக்குள்ள அதிகாரம். 
  • உறுப்பு 303. வணிகம், வாணிபம் தொடர்பாக ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றிற்குள்ள சட்டமியற்றும் அதிகாரங்கள்மீது கட்டுப்பாடுகள். 
  • உறுப்பு 304. மாநிலங்களிடையே வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றின்மீது கட்டுப்பாடுகள். 
  • உறுப்பு 305. நிலவுறும் சட்டங்களுக்கும் மாநிலத்தின் ஒரு தனியுரிமைகளுக்கு வகைசெய்யும் சட்டங்களுக்குமான காப்புரை. 
  • உறுப்பு 306. (நீக்கறவு செய்யப்பட்டது). 
  • உறுப்பு 307. 301 முதல் 304 வரையிலுள்ள உறுப்புகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அதிகாரஅமைப்பை ஏற்படுத்துதல்.

பகுதி XIV

ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கீழுள்ள பணியங்கள்



      அத்தியாம் - I
      குடிமைப் பணி சேவைகள் 

      • உறுப்பு 308. பொருள்கோள். 
      • உறுப்பு 309. ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணிபுரிவதற்காக ஆளெடுத்தலும் பணிவரைக்கட்டுகளும். 
      • உறுப்பு 310. ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணிபுரிபவர்களின் பதவியுரிமைக் காலம்.
      • உறுப்பு 311. ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின்கீழ் குடியியல் சார்ந்த வேலைக்கு அமர்த்தப்பெற்றுள்ளவர்களை பணிநீக்கமோ பணியறவோ பணியிறக்கமோ செய்தல். 
      • உறுப்பு 312. அனைத்திந்தியப் பணியங்கள்.
      • உறுப்பு 312அ. குறித்தசில பணியங்களிலுள்ள அலுவலர்களின் பணிவரைக்கட்டுகளை மாற்றுவதற்கு அல்லது முறித்தறவு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம்.
      • உறுப்பு 313. மாறும் இடைக்காலத்திற்கான வகையங்கள்.
      • உறுப்பு 314. நீக்கறவு செய்யப்பட்டது).

      அத்தியாயம் - II


        அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் 

        • உறுப்பு 315. ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள். 
        • உறுப்பு 316. உறுப்பினர்களை அமர்த்துதலும் அவர்களின் பதவிக்காலமும். 
        • உறுப்பு 317. ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவரைப் பணியறவு செய்தலும் தற்காலிகமாக நீக்குதலும். 
        • உறுப்பு 318. ஆணையத்தின் உறுப்பினர்கள், பணியாளர் தொகுதியினர் ஆகியோருடைய பணிவரைக்கட்டுகளைக் குறித்து ஒழுங்குறுத்தும் விதிகளை வகுப்பதற்குள்ள அதிகாரம்.
        • உறுப்பு 319. ஆணையத்தின் உறுப்பினர்கள் அத்தகைய உறுப்பினர்களாக இருப்பது அற்றுப்போன பின்பு பிற பதவிகள் வகிப்பது குறித்த தடை.
        • உறுப்பு 320. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செயற்பணிகள். 
        • உறுப்பு 321. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செயற்பணிகளை விரிவாக்குவதற்கான அதிகாரம். 
        • உறுப்பு 322. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செலவுகள்.
        • உறுப்பு 323. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் அறிக்கைகள்.

        பகுதி XIV - தீர்ப்பாயங்கள் 


          • உறுப்பு 323அ. நிருவாகப்பணித் தீர்ப்பாயங்கள். 
          • உறுப்பு 323ஆ. பிற பொருட்பாடுகளுக்கான தீர்ப்பாயங்கள்.

          பகுதி XV - தேர்தல்கள் 

          • உறுப்பு 324. தேர்தல்களைக் கண்காணிப்பதும் நெறிப்படுத்துவதும் கட்டாள்கைபுரிவதும் தேர்தல் ஆணையத்திடம் உற்றமைந்திருக்கும். 
          • உறுப்பு 325. சமயம், இனம், சாதி அல்லது பாலினம் காரணமாக, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கோ தனியுறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டுமென கோருவதற்கோ எவரும் தகுமையற்றவர் ஆகார். 
          • உறுப்பு 326. மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்குமான தேர்தல்கள் வயதுவந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும். 
          • உறுப்பு 327. சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் பொறுத்து வகை செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம்.
          • உறுப்பு 328. ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் பொறுத்து வகைசெய்வதற்கு அச்சட்டமன்றத்திற்குள்ள அதிகாரம்.
          • உறுப்பு 329. தேர்தல் பற்றிய பொருட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்குத் தடை. 
          • உறுப்பு 329அ. (நீக்கறவு செய்யப்பட்டது).

          பகுதி XVI

          குறித்தசில வகுப்பினர் தொடர்பான தனியுறு வகையங்கள் 


            • உறுப்பு 330. பட்டியலில் கண்ட சாதியினருக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் மக்களவையில் பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல். 
            • உறுப்பு 331. மக்களவையில் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்குச் சார்பாற்றம். 
            • உறுப்பு 332. பட்டியலில் கண்ட சாதியினருக்கும், பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளில் பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல். 
            • உறுப்பு 333. மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளின் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்குச் சார்பாற்றம்.
            • உறுப்பு 334. பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தலும் தனியுறு சார்பாற்றம் அளித்தலும் அறுபது ஆண்டுகளுக்குப் பின்பு அற்றுப்போதல்.
            • உறுப்பு 335. பணியங்களுக்கும் பணியடைகளுக்கும், பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கோருரிமைகள்.
            • உறுப்பு 336. குறித்தசில பணியங்களில் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்கான தனியுறு வகையம்.
            • உறுப்பு 337. ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தின் நலனுக்காகக் கல்வி மானியங்கள் பொறுத்த தனியுறு வகையம்.
            • உறுப்பு 338. பட்டியலில் கண்ட சாதியினருக்கான தேசிய ஆணையம். 
            • உறுப்பு 338அ. பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம். 
            • உறுப்பு 339. பட்டியல் வரையிடங்களின் நிருவாகம், பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நல்வாழ்வு ஆகியவற்றின் மீது ஒன்றியத்திற்குள்ள கட்டாள்கை. 
            • உறுப்பு 340. பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆய்ந்து காண்பதற்கு ஆணையம் ஒன்றை அமர்த்துதல்.
            • உறுப்பு 341. பட்டியலில் கண்ட சாதிகள். 
            • உறுப்பு 342. பட்டியலில் கண்ட பழங்குடிகள்.

            பகுதி XVII - அரசு அலுவல் மொழி



                அத்தியாயம் -  I


                  ஒன்றியத்தின் மொழி

                  • உறுப்பு 343. ஒன்றியத்து அரசு அலுவல் மொழி. 
                  • உறுப்பு 344. அரசு அலுவல் மொழிக்கான ஆணையமும், நாடாளுமன்றக் குழுவும்.

                  அத்தியாயம் - II


                    மண்டல மொழிகள் 

                    • உறுப்பு 345. மாநிலத்து அரசு அலுவல் மொழி அல்லது மொழிகள். 
                    • உறுப்பு 346. ஒரு மாநிலத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையே செய்தித் தொடர்புக்கான அரசு அலுவல் மொழி. 
                    • உறுப்பு 347. ஒரு மாநில மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் பேசும் மொழி பொறுத்த தனியறு வகையம்.

                    அத்தியாயம் - III 


                      உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் முதலியவற்றின் மொழி 

                      • உறுப்பு 348. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலும் சட்டங்கள், சட்டமுன்வடிவுகள் முதலியவற்றிற்கும் பயன்படுத்தவேண்டிய மொழி.
                      • உறுப்பு 349. மொழி தொடர்பாகக் குறித்தசில சட்டங்களை இயற்றுவதற்கான தனியுறு நெறிமுறை.

                      அத்தியாயம் - IV


                        தனியுறு நெறியுரைகள் 

                        • உறுப்பு 350. குறைகளைத் தீர்ப்பதற்கான உரையீடுகளில் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி. 
                        • உறுப்பு 350அ. தொடக்கநிலையில் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கான வசதிகள். 
                        • உறுப்பு 350ஆ. மொழிச் சிறுபான்மையினருக்கான தனிஅலுவலர். 
                        • உறுப்பு 351. இந்தி மொழி வளர்ச்சிக்கான நெறியுரை.

                        பகுதி XVIII 

                        நெருக்கடி நிலை பற்றிய வகையங்கள் 


                          • உறுப்பு 352. நெருக்கடிநிலைச் சாற்றாணை. 
                          • உறுப்பு 353. நெருக்கடிநிலைச் சாற்றாணையின் விளைவு. 
                          • உறுப்பு 354. நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால், வருவாய்களைப் பகிர்ந்தளித்தல் தொடர்பான வகையங்கள் பொருந்துறுதல். 
                          • உறுப்பு 355. அயல்நாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டுக் குழப்பத்திலிருந்தும் மாநிலங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றியத்திற்குள்ள கடமை.
                          • உறுப்பு 356. மாநிலங்களில் அரசமைப்பின் இயங்குமுறை செயலற்றுப் போகும் நேர்வில், அதற்கான ஏற்பாடுகள்.
                          • உறுப்பு 357. 356ஆம் உறுப்பின்படி பிறப்பிக்கப்பட்ட சாற்றாணையின் வழி சட்டமியற்றும் அதிகாரங்களைச் செலுத்துதல்.
                          • உறுப்பு 358. நெருக்கடி நிலைகளின்போது 19 ஆம் உறுப்பின் வகையங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தல். 
                          • உறுப்பு 359. நெருக்கடி நிலைகளின்போது, III ஆம் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகள் செயலுறுத்தப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல். 
                          • உறுப்பு 359அ. (நீக்கறவு செய்யப்பட்டது).
                          • உறுப்பு 360. நிதி நிலை நெருக்கடி பற்றிய வகையங்கள்.

                          நெருக்கடி நிலைப் பிரகடனம்
                          THE EMERGENCY

                          இந்திய அரசிலமைப்பின் பகுதி -XVIII குடியரசுத் தலைவரின் நெருக்கடி கால அதிகாரங்களை மூன்று தலைப்புகளில் கூறுகிறது.

                          * Art.352-ன்படி இந்தியாவின் எல்லைக்குபோர் அல்லது வெளிநாட்டுப் படையெடுப்பின் மூலமோஅல்லது இந்தியாவின் அமைதிக்கு ஆயுதமேந்திய உள்நாட்டுக்கலவரத்தின் மூலமோ பாதிப்பு ஏற்பட்டால்நெருக்கடி நிலை அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

                          மாநில அரசுகள் அரசியமைப்புக்கு முரணாகச் செயல்படுகின்றன என்றால் நெருக்கடி நிலை அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் (Art.356)

                          நிதி நிலையில் (Art.360) நெருக்கடி ஏற்பட்டாலும் இவ்வதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

                          * "நெருக்கடி நிலைப் பிரகடனம்" Proclamation of emergency என்னும் சொல் Art.352-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய நெருக்கடி நிலையையே (National Emergency) குறிப்பிடுகிறது.

                          * Art.356-ன் கீழ் பிரகடனப்படுத்தப்படும் மாநில நெருக்கடி நிலையை குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) என்று குறிப்பிடுவர்.




                          தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனம் - National Emergency
                          * Art.352-ன்படி போர் அல்லது அந்நியப் படையெடுப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சியின் காரணமாக இந்தியா முழுவதற்குமோ,அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதிக்கோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது என்ற கேபினட் தீர்மானம் பற்றி குடியரசுத் தலைவருக்கு எழுத்து மூலம் தகவல் கிடைத்துஅதில் குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்தால்,இந்தியா முழுவதற்குமோஅல்லது அதன் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமோ ஒர் அவசர நிலையை அவர் பிரகடனப்படுத்தலாம். அவசர நிலைப் பிரகடனங்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

                          பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரகடனங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால்அப்பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் முதல் ஒரு மாதம் முடிவந்தவுடன் அவை செயலிழந்துவிடும்.
                          பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் இன்னொரு பிரகடனத்தால் குடியரசுத் தலைவர் அதனை ரத்து செய்யாதவரை அதிகபட்சம் 6 மாதங்களுக்கு மட்டுமே அவசர நிலைப்பிரகடனம் அமலில் இருக்கும்.
                          பின்னர் மீண்டும் பாராளுமன்றம் ஏற்றால் அடுத்து 6 மாத காலத்திற்கு நீடிக்கும்.
                          இவ்வாறாக 3 ஆண்டுகளுக்குத் தான் இவ்வறிவிப்பை நீட்டிக்க இயலும். அவசரநிலைப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கிற தீர்மானங்கள்அல்லது நீட்டிக்க வகை செய்யும் தீர்மானங்கள்பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும்.
                          அவசர நிலை தொடர்பான ஒரு தீர்மானம் பற்றிய அறிவிப்பை அவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்குக்குக் குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடமோ சமர்ப்பித்தால் அத்தீர்மானம் பற்றிப் பரிசீலிக்க, 14நாட்களுக்குள் அவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
                          தாம் பிறப்பித்த நெருக்கடிப் பிரகடனத்தைகுடியரசுத் தலைவரே வாபஸ் பெறலாம். ஆனால் ஒன்றிய அமைச்சரவையின் எழுத்து வடிவிலான அனுமதியைப் பெற்ற பிறகேகுடியரசுத் தலைவர் இந்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவிக்க இயலும்.
                          இந்த நெருக்கடி நிலைப்பிரகடனத்தைப் பொறுத்த வரை குடியரசுத் தலைவரின் நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்கான காரணம்,நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது.எனவேகுடியரசுத் தலைவர் இது குறித்த காரணங்களில் நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டவராவார்.
                          * Art.352-ல் உள்ள அவசர நிலைப் பிரகடனம் பற்றிய வகையுரைகள், 1979-ல் அமுலுக்கு வந்த 44-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1978-ன்படி மேலும் கடுமையாக்கப்பட்டன. அவை:
                          உள்நாட்டு நெருக்கடி Internal disturbances காரணத்தின்பேரில் ஜூன் 25-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்தால் ஏற்பட்ட மிக மோசமான அனுபவங்களை அடுத்து,
                          உள்நாட்டு நெருக்கடி என்ற தெளிவற்ற சொற்களுக்குப் பதிலாகஆயுதக்கிளர்ச்சி -armed rebellion என்ற சொற்கள் இணைக்கப்பட்டன.
                          பிரதமரின் வாய்மொழி ஒப்புதல் அல்லது அனுமதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர்அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் முறையை கைவிடப்பட்டு, 44-வது திருத்தத்தின் மூலம் கேபினட்டின் தீர்மானம் எழுத்து மூலமாக குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரேஅவர் நெருக்கடி நிலையை அறிவிக்க முடியும் என்பது நிபந்தனையாக்கப்பட்டது.
                          அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட 2 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றிருந்த கால வரம்பு, 44-வது சட்ட திருத்தத்தின் மூலம் 1 மாதமாகக் குறைக்கப்பட்டது.
                          * 44-வது திருத்தத்திற்கு முன்னர்அவசர நிலைப்பிரகடனம்பாராளுமன்றத்தில் ஒருமுறை ஒப்புதல் பெற்ற பிறகுகால வரையின்றி அவசர நெருக்கடி நிலை நடைமுறையில் இருக்க வாய்ப்பு இருந்தது.
                          ஆனால் 44-வது திருத்தம் அதை நீக்கிஅவசர நிலையை 6 மாதம் வரை மட்டுமே நீட்டிக்க வழி செய்தது.
                          * 44-வது திருத்தத்திற்கு முன்பு வரைஅவசரநிலை அறிவிக்கப்பட்டு விட்டால்அதை முடிவுக்குக் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு குறிப்பிட்ட வரையறைகள் இல்லாமல் இருந்தது.
                          ஆனால் இத்திருத்தத்திற்குப் பிறகு லஸோக் சபையின் உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில்பாராளுமன்றம் கூட்டப்பட்டுஅவசரநிலையை நிராகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
                          * 44-வது திருத்தத்திற்கு முன்னர்போர்அயல்நாட்டு ஆக்கிரமிப்பு உள்நாட்டுத் தொந்தரவுகள் போன்ற எக்காரணத்திற்காக (Art.352)அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டாலும்,
                          * Art.19 தாமாகவே செயலிழந்து விடும் என்று Art.358 வலியுறுத்தியது.
                          ஆனால் 44-வது திருத்தம்போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு ஆகிய இரு காரணங்களுக்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டால் மட்டுமே Art.19 தாமாகவே செயலிழக்கும் (Art.358) என்று வரையறுத்தது.
                          மேலும் 44-வது திருத்த்திற்கு முன்னர்அடிப்படை உரிமைகளில் எது வேண்டுமானாலும்நிறுத்தி வைக்கப்பட இயலும் என்ற நிலை இருந்தது.
                          ஆனால் 44-வது திருத்தத்தின் மூலம்அவசர நிலைப் பிரகடனத்தின்போதும் Art.20 மற்றும் 21 ஆகிய இரு ஷரத்துக்களையும் நிறுத்திவைக்க இயலாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

                          நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் விளைவுகள்

                          ஷரத்து 352-ன்படி செய்யப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது 1. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் சம்மந்தமாகவும் பாராளுமன்றம் சட்டமியற்றலாம்.
                          2. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஆட்சிக்குழு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை விதிக்கலாம்.
                          3. மத்திய மாநில அரசுகளுக்கிடையே வருமானப் பங்கீடு குறித்து மாறுதல் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
                          4. பொதுமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொருட்டு வழக்குத்தொடர இயலாது. இதுகுறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும்அவ்வழக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
                          5. குடியரசுத் தலைவர்மாநிலங்களுக்கு எதுபற்றி வேண்டுமானாலும் தமது கட்டளைகளைப் பிறப்பிக்கலாம்.
                          6. மேலும் இந்நெருக்கடி நிலைப்பிரகடனப்படுள்ளபோதுமக்களவையின் (லோக்சபை) பதவிக்காலத்தை நாட்டிப்பதற்கும்,பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
                          எனினும் இக்கால நீட்டிப்புநெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 6 மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். அவ்வாறே மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் நீட்டிக்கப்படலாம்.
                          இது தவிர மக்களின் அடிப்படை உரிமைகலில் Art 20 மற்றும் 21 ஆகியவற்றைத் தவிர பிற உரிமைகளின் செயல்பாடுகளை நெருக்கடி நிலையின்போது குடியரசுத் தலைவர் நிறுத்தி வைக்க அதிகாரம் பெற்றுள்ளார்.

                          மாநில நெருக்கடி நிலைப் பிரகடனம் - State Emergency

                          * Art. 356-


                          * Art. 356-ன்படி ஒரு மாநிலத்தின் அரசாங்கத்தை அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளப்படி நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றோஅரசியலமைப்பு இயந்திரம் அங்கே செயலிழந்துவிட்டது என்றோஅம்மாநில ஆளுநர் அளித்த அறிக்கையின்படிஅல்லது வேறு விதமாகக் குடியரசுத் தலைவருக்குத் திருப்தி ஏற்பட்டால்அம்மாநில ஆளுநர் மற்றும் பிர அதிகார அமைப்புகள் உள்ளிட்ட மாநில அரசாங்க அதிகாரங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரேதம்வசம் எடுத்துக்கொள்வதாகப் பிரகடனம் ஒன்றை வெளியிடலாம்.
                          குடியரசுத் தலைவரின் திருப்தி என்பது ஒன்றிய அரசாங்கத்தின் திருப்தியையே குறிக்கும் அத்துடன்குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் அது ஒன்றிய அரசாங்கத்தின் ஆட்சியே ஆகும்.
                          குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மாநில சட்டப்பேரவையின் அதிகாரங்களை பாராளுமன்றமே செயல்படுத்தும்.
                          மாநில சட்டப்பேரவை கலைக்கப்படலாம்அல்லது அதின் இயக்கம் நிறுத்தி வைக்கப்படலாம்.
                          மாநில உயர்நீதிமன்றத்தினைத் தவிரஎந்த ஒர் அதிகார அமைப்புடனும் சம்மந்தப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகளின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பது உட்படதேவையான பிற நடவடிக்கைகளையும் குடியரசுத் தலைவர் மேற்கொள்லலாம்.
                          குடியரசுத் தலைவர் ஆட்சியின் பிரகடனத்திற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்காவிட்டால், 2 மாதங்களின் முடிவில் பிரகடனம் முடிவுக்கு வந்துவிடும். பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் ஒரே சமயத்தில் 6 மாதங்களுக்கு மேலும்தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேலும் ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை நீட்டிக்க இயலாது.
                          எனினும் 68-வது திருத்தத்தின்படி பஞ்சாப் மாநிலத்தில் 1987-ல் பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்ந்து 5ஆண்டுகளுக்கு நீட்டிக்க வழி செய்யப்பட்டது.

                          நிதி நெருக்கடி நிலைப் பிரகடனம் - Financial Emergency

                          இந்தியா முழுவதிலுமோஏதேனும் ஒரு பகுதில் மட்டுமே நிதி நிலை சீர்கெட்டுப்போகும் அபாயம் உள்ளது என்று குடியரசுத் தலைவருக்கு திருப்தி ஏற்பட்டால்நிதிநிலை நெருக்கடியை அவர் பிரகடனப்படுத்தலாம் என்று Art.360 குடியரசுத்தைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.
                          இந்தப் பிரகடனம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், 2 மாத முடிவில் தாமாகவே செயலிழந்துவிடும்.
                          ஆனால் ஒரு முறை பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால்இரத்து செய்யப்படும் வரை அல்லது மாற்றியமைப்படும் வரை நிதிநிலை நெருக்கடி நடைமுறையில் இருக்கும்.
                          நிதிநிலை நெருக்கடி நடைமுறையில் உள்ளபோதுமாநில அரசுகள் சில குறிப்பிட்ட நிதிநிலைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என ஒன்றியம் உதிதரவிடலாம்.
                          மேலும் மாநில அரசின் கீழ் பணியாற்றுவோரின் ஊதியத்தையும் படிகளையும் குறைப்பதுமாநில சட்டப்பேரவைகள் இயற்றிய பண மசோதக்கள் உள்ளிட்ட மற்ற மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.
                          மேலும் ஒன்றியத்தின் கீழ் பணிபுரியும் அனைவருடைய ஊதியங்களையும்படிகளையும் (உச்சநீதிமன்றஉயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட) குறைக்கவேண்டுமென்றும் குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்.
                          நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது முதல் இது வரை ஒருமுறை கூட நிதிநெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதில்லை.

                          பகுதி XIX
                          பல்வகை


                            • உறுப்பு 361. குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், இராஜப்பிரமுகர்கள் ஆகியோருக்குக் காப்பளிப்பு. 
                            • உறுப்பு 361அ. நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை வெளியிடுவதற்குக் காப்பளிப்பு. 
                            • உறுப்பு 361ஆ. ஊதியம் வழங்கத்தக்க அரசியல் பணியடையில் அமர்த்துவதற்கான தகுதிக்கேடு. 
                            • உறுப்பு 362. (நீக்கறவு செய்யப்பட்டது). 
                            • உறுப்பு 363. குறித்தசில உடன்படிக்கைகள், உடன்பாடுகள் முதலியவற்றிலிருந்து எழும் பூசல்களில் நீதிமன்றங்களின் தலையீட்டிற்குத் தடையுறுத்தம். 
                            • உறுப்பு 363அ. இந்தியக் குறுநில அரசர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஏற்பளிப்பு அற்றுப்போதல், மற்றும் மன்னர் மானியங்கள் ஒழிக்கப்படுதல். 
                            • உறுப்பு 364. பெருந்துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் ஆகியவை குறித்த தனியுறு வகையங்கள். 
                            • உறுப்பு 365. ஒன்றியத்தின் பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்கவோ அவற்றைச் செல்திறப்படுத்தவோ தவறுமிடத்து ஏற்படும் விளைவு.
                            • உறுப்பு 366. பொருள்வரையறைகள்.
                            • உறுப்பு 367. பொருள்கோள்.

                            பகுதி XX
                            அரசமைப்பின் திருத்தம் 


                              • உறுப்பு 368. அரசமைப்பினைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும், அதற்கான நெறிமுறையும்.

                              அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள்Amendments to  Constitution 

                              * உறுப்பு 368-இன் படி, பாராளுமன்றமே அரசியல் நிர்ணய அதிகார வைப்பிடமாகத் திகழ்கிறது. அரசியலமைப்பைத் திருத்துவது குறித்து இந்தப் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
                              * பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு சபையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதன் மூலமே அரசியலமைப்பைத் திருத்தும் நடவடிக்கையைத் தொடங்க இயலும்.
                              * எனவே இதற்கான தொடக்க முயற்சியை பாராளுமன்றமே மேற்கொள்ள இயலும். முறைப்படி நிறேவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதவுக்குக் குடியரசுத் தலைவர் கட்டாயமாக ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
                              * மற்ற சாதாரண மசோதாக்களைப் போல அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கவோ, மறுபிரிசீலனை செய்யுமாறு மீண்டும் பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பவோ இயலாது.
                              * அரசியலமைப்பின் எந்த ஒரு பிரிவையும் எப்படி வேண்டுமானாலும் திருத்தவோ, மாற்றியமைக்கவோ, அடியோடு நீக்கிவிடவோ,பாராளுமன்றத்தால் இயலும்.

                              அவ்வாறு மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் அல்லது கூறுகளை திருத்துவதாகவோ, மீறுவதாகவோ இல்லாத பட்சத்தில் அவற்றை எதிர்த்து எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது.
                              * அரசியலமைப்பு திருத்த மசோதாவின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கிடையே ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால்,கூட்டுக் கூட்டம் கூட்டப்பட இயலாது.
                              * மேலும் இரு அவைகளும் தனித்தனியே திருத்த மசோதாவை அங்கீகரித்தால் மட்டுமே, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அரசியலமைப்பைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

                              சாதாரண பெரும்பான்மை - Simple Majority

                              * பாராளுமன்றத்திற்கு வந்துள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வாக்களித்து நிறைவேற்றும் முறையே சாதாரண வாக்கெடுப்பு முறை ஆகும்.

                              * இந்த சாதாரண வாக்கெடுப்பு முறை என்பது கீழ்வரும் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும். அவை:

                              * புதிய மாநிலங்களை உருவாக்குதல், மாநில எல்லைகளை மாற்றியமைத்தல், மாநிலங்களின் பெயர்களை மாற்றியமைத்தல் போன்றவை

                              * மாநில சட்ட மேலவையை நீக்குதல், பாராளுமன்ற நடைமுறைகளில் கட்டுப்பாடுகிள் விதித்தல்,

                              * தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கான நிர்வாக முறை,

                              * அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா மற்றும் மிசோரம் போன்ற பழங்குடி இன மக்கள் வாழும் மாநிலங்களுக்கான நிர்வாக முறை.

                              சிறப்புப் பெரும்பான்மை - Special Majority

                              * அரசியலமைப்பின் பெரும்பாலான பிரிவுகளை மூன்றில் இரு பங்குக்குக் குறையாமல் உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மை ஆதரவுடன், பாராளுமன்றம் திருத்த இயலும்.


                              Special Majority with Ratification of States


                              * ஒரு சில விஷயங்களில் மட்டும் அதாவது, 7-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள பட்டியல்கள் சம்மந்தமானவை,பாராளுமன்றத்தில் மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் மற்றும் ஷரத்து 368-ன் அம்சங்கள், குடியரசுத் தலைவர் தேர்தல் முறை,ஒன்றியத்தின் நிர்வாக அதிகாரத்தை மாநிலங்கள் மாது அதிகப்படுத்துதல், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள்,ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கிடையேயான சட்டமியற்றும் அதிகாரங்களில் பங்கிடு செய்தல், போன்றவற்றைத் திருத்த மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவும், பாதிக்கும் குறையாத மாநிலங்களின் சட்டப்பேரவைகள் ஏற்பளிப்பும் அவசியமாகிறது.



                              முக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள்:

                              முதல் அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம் (1951 ஜூன்):

                              சமூகம் மற்றும் கல்வி நிலையில் பின் தங்கியிருப்பவர்களின் முன்னேற்த்திற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பதை 39 ஆவது சட்டபிரிவு தடை செய்யாது. வன்முறையைத் தூண்டுதல், வெளிநாடுகளுடனான நட்புறவைப் பாதித்தல் போன்ற வகையில் பேசுவது குற்றமாக்கப்படும் வகையில் பேச்சுரிமையின் 19-ஆவது பிரிவு மாற்றப்பட்டது.

                              தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தும் வகையில் 31ஏ பிரிவு திருத்தப்பட்டது. பார்லிமென்ட் மற்றும் சட்டப்பேரவை கூட்டங்களுக்கான இடைவெளி ஆறு மாதகாலத்திற்கு அதிகமாகக் கூடாது எனக் கூறும் வகையில் 85ம், 174ம் சட்டப்பிரிவுகள் திருத்தப்பட்டன. அதே போல் ஒவ்வொரு ஆண்டின் முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்துவார் எனக் கூறும் திருத்தமும் செய்யப்பட்டது.

                              2-வது அரசியல் அமைப்புச் சட்டம் (1953, மே):
                              1951-ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் பாராளுமன்ற உருப்பினர்கள் எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டது.

                              3-வது திருத்தம் (1955, பிபிரவரி):
                              வாணிபம் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் போன்றவை மத்திய, மாநில அரசுகள் கூட்டு அதிகாரத்தினுள் கொண்டு வரப்பட்டது.
                              4-வது திருத்தம் (1955, ஏப்ரல்):
                              அரசு பொதுக்காரியத்திற்கு என்று வாங்கும் நிலத்திற்கு அளிக்கப்படும் இழப்பீடு போதாது என்று கோர்ட்டுக்கு செல்வதை தடை செய்யும் வண்ணம் 31வது பிரிவு திருத்தப்பட்டது.

                              5-வது திருத்தம் (1955, டிசம்பர்):
                              மாநிலங்களின் நிலப்பரப்பு, எல்லை ஆகியவற்றைப் பாதிக்கும் சட்டத்தை பாராளுமன்றம் இயற்றுவதற்கு முன் சம்மந்தப்பட்ட மாநில சட்டப்பேரவையில் அது பற்றி விவாதிக்க போதிய காலம் அளிக்கப்பட வகை செய்யப்பட்டது.

                              6-வது திருத்தம் (1956, செப்டம்பர்):

                              மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தின் மீது மைய அரசு வரிவிக்க வகை செய்யப்பட்டது.

                              7-வது திருத்தம் (1956, அக்டோபர்):

                              மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வகை செய்யப்பட்டது.

                              8-வது திருத்தம் (1960, ஜனவரி):

                              பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் ஆங்கிலோ இந்தியர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

                              9-வது திருத்தம் (1960, டிசம்பர்)

                              சில பிரதேசங்களை பாகிஸ்தானுக்கு அளிப்பதை அனுமதிக்கும் திருத்தம்.

                              10-வது திருத்தம் (1961, ஆகஸ்ட்):

                              இந்திய யூனியனுடன் தாத்ரா நாஹர் ஹவேலி பகுதிகள் இணைப்பிற்கு வகை செய்யப்பட்டது.

                              11-வது திருத்தம் (1961, டிசம்பர்):

                              துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் உரிமை பாராளுமன்றத்தின் இரு சபை உறுப்பினர்கள் அ"ங்கிய தேர்தல் குழுவிற்கு வழங்கப்பட்டது.

                              12-வது திருத்தம் (1962, மார்ச்):

                              கோவா, டையு, டாமன் ஆகியவை இந்திய யூனியனுடன் இணைக்கப்பட வகை செய்தது.

                              13-வது திருத்தம் (1962, டிசம்பர்):

                              நாகாலாந்து, இந்தியாவின் 16 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட வகை செய்தது.

                              14-வது திருத்தம் (1962 டிசம்பர்):

                              யூனியன் பிரதேசங்களுக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் இருக்க வகை செய்யப்பட்டது.

                              15-வது திருத்தம் (1963, அக்டோபர்):

                              உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்தியது.

                              16-வது திருத்தம் (1963, அக்டோபர்):

                              பொது நன்மைக்காக அடிப்படை உரிமைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பார்லிமென்ட், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை மதிப்பதாக உறுதிமொழி எடுக்க வகை செய்யப்பட்டது.

                              17-வது திருத்தம் (1964, ஜூன்):

                              தனியார் சொத்துக்களை அரசு எடுக்கும் போது அப்போதைய சந்தை நிலவரப்படி இழப்பீடு அளிக்க வேண்டும்.

                              18-வது திருத்தம் (1966, ஆகஸ்ட்):

                              பஞ்சாப், அரியானா மாநிலப் பிரிவினையை அனுமதித்தல்.

                              19-வது திருத்தம் (1966, டிசம்பர்):

                              தேர்தல் வழக்குகளை விசாரிக்க நிறுவப்பட்ட தனி மன்றங்கள் அகற்றப்பட்டு அந்த விசாரணை அதிகாரம் உயர்நீதி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டது.

                              20-வது திருத்தம் (1966, டிசம்பர்):

                              மாவட்ட நீதிபதி நியமனத்தை முறைப்படுத்தியது.

                              21-வது திருத்தம் (1967, ஏப்ரல்):

                              எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.

                              22-வது திருத்தம் (1969, செப்டம்பர்):

                              மேகாலயா மாநிலம் உருவாக்க வகை செய்தது.

                              23-வது திருத்தம் (1970, ஜனவரி):

                              பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், ஆங்கிலோ இந்தியருக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை அளிக்க வகை செய்தது.

                              24-வது திருத்தம் (1971, நவம்பர்):

                              கோலக்நாத் வழக்கின் மீது எழுந்த பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டது. பாராளுமன்றத்திற்கு அரசியல் அமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்தும் உரிமை இருப்பதாக அறிவித்தகு. மேலும் இந்த திருத்தத்தின் படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவிற்கு கையெழுத்திட்டே ஆக வேண்டும்.

                              25-வது திருத்தம் (1972, ஏப்ரல்):

                              பொதுக் காரியங்களுக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை பற்றிய வழக்குகள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அப்பாற்பட்டவை ஆக்கப்பட்டது.

                              26-வது திருத்தம் (1971, டிசம்பர்):

                              மன்னர் மானியம் ஒழிக்க வகை செய்தது.

                              27-வது திருத்தம் (1972, ப்ரவரி):

                              இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மிசோரம், அருணாசலப் பிரதேசம் என்ற இரு மத்திய ஆட்சிப்பகுதிகள் உருவாக்கப்பட வகை செய்தது.

                              28-வது திருத்தம் (1972, ஆகஸ்ட்):

                              ஐ.சி.எஸ் அதிகாரிகளின் சிறப்புச் சலுகைகள் அகற்றப்பட்டன.

                              29-வது திருத்தம் (1972, ஜூன்):

                              கேரள மாநில நிலச் சீர்திருத்தச் சட்டம், நீதி மன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டவை என அறிவிக்கப்பட்டது.

                              30-வது திருத்தம் (1972, பிப்ரவரி):

                              உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் தகுதி வரையறுக்கப்பட்டது.

                              31-வது திருத்தம் (1973, அக்டோபர்):

                              லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது.

                              32-வது திருத்தம் (1974, ஏப்ரல்):

                              மத்திய அரசு பல்கலைக் கழகங்களுக்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டது.
                              33-வது திருத்தம் (1974, ஏப்ரல்): 9 வது அட்டவணையில் மாநிலங்களின் நிலச் சீர்த்திருத்தச் சட்டங்கள் சேர்க்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டன.

                              35-வது திருத்தம் (1975, பிபிரவரி):

                              சிக்கிம் இந்தியாவின் 22-வது மாநிலமாக உருவானது.

                              37-வது திருத்தம் (1975, மே):

                              அருணாசலப் பிரதேசத்திற்கு சட்டப்பேரவையும், அமைச்சரவையும் அனுமதிக்கப்பட்டது.

                              38-வது திருத்தம் (1975):

                              அவசரச் சட்டம் நெருக்கடி பிரகடனம் நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டது.

                              39-வது திருத்தம் (1975, ஆகஸ்ட்):

                              குடியரசுத்தலைவர், துணைகுடியரசுத்தலைவர், பிரதமர், லோக்சபா, சபாநாயகர் தேர்தல் வழக்குகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிமன்ற அதிகார வரையறைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது. தனியொரு விசாரணைக்குழு விசாரிக்கும் 9-வது அட்டவணையில் மேலும் சில சட்டங்கள் இணைக்கப்பட்டன.

                              40-வது திருத்தம் (1976, மே):

                              9-வது அட்டவணையில் மேலும் சில சட்டங்கள், சொத்து, உச்சவரம்பு, கடத்தல்காரர்களின் சொத்து பறிமுதல், தவறான விஷயங்கள் பிரசுரமாவதைத் தடுத்தல், கடல்பரப்பின் எல்லைகள், ஆழ்கடல் கனிவளங்கள் பற்றியவை.

                              41-வது திருத்தம் (1976, செப்டம்பர்):

                              பொதுப்பணித் தேர்வு ஆணைக்குழு உறுப்பினர்களின் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது.

                              42-வது திருத்தம் (1976, டிசம்பர்):

                              ஒரு மினி அரசியல் அமைப்பு என்று கூறும் அளவிற்கு ஏராளமான அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட்டன.

                              * சமயச்சார்பற்ற சோஷலிசம் என்ற சொற்கள் அரசியலமைப்பின் முகப்புரையில் இணைக்கப்பட்டது. அடிப்டைக் கடமைகள் இணைக்கப்பட்டது.

                              * அரசியல் அமைப்பு திருத்தத்தில் பாராளுமன்றத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. திருத்தங்கள் நீதிமன்ற அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது.

                              * அரசின் வழிகாட்டும் நெறிகள், அடிப்படை உரிமைகள் விட சக்தி வாய்ந்ததாக்கப்பட்டது.

                              * குடியரசுத்தலைவர் அமைச்சரவை ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும்.

                              * கல்வித்துறை, மத்திய மாநில அரசுகளின் இணைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.

                              * மத்திய அரசு சட்டங்களை செல்லாது என்று கூறும் உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் உட்பட மற்றும் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

                              * ஆட்சித்துறை விசாரணை மன்றங்கள் நிறுவியது.

                              * தேசத்துரோக செயல்கள் பிரிக்கப்பட்டு அவற்றை ஒடுக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம்.

                              43-வது திருத்தம் (1978, ஏப்ரல்):

                              உயர்நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிமன்ற அதிகாரங்கள் மீண்டும் அளிக்கப்பட்டது. தேசதுரோக செயல்கள் பற்றி பாராளுமன்றம் சட்டமியற்றலாம் என்ற 42-வது திருத்தப்பிரிவு ரத்து செய்யப்படும்.

                              44-வது திருத்தம் (1979, ஏப்ரல்):

                              உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் சம்பந்தமான அரசு அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது. நெருக்கடி காலத்தில் திருத்தப்பட்ட அரசியல் அமைப்புகள் பல நீக்கப்பட்டது.

                              சொத்துரிமை, அடிப்படை உரிமை பட்டியலிருந்து நீக்கப்பட்டது.

                              45-வது திருத்தம் (1980, ஏப்ரல்):

                              பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், ஆங்கியோ இந்தியர் இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.

                              46-வது திருத்தம் (1983, பிப்ரவரி):

                              மாநில அரசுகள் விற்பனை வரிவசூல் சம்பந்தமான குறைபாடுகள் நீக்கப்பட்டது.

                              47-வது திருத்தம் (1984, ஆகஸ்ட்):

                              9-வது அட்டவணையில் மேலும் 14 சட்டங்கள் இணைக்கப்பட்டு நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது.

                              48-வது திருத்தம் (1984, ஆகஸ்ட்):
                              பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஒராண்டிற்கு நீடிக்கப்பட வகை செய்தது.

                              49-வது திருத்தம் (1984, செப்டம்பர்):
                              திரிபுரா மாநிலத்தில் மாவட்ட சுய ஆட்சி கவுன்சில்கள் செயல்பட அனுமதித்தது. 6வது அட்டவணை அம்மாநிலத்தில் அமல் செய்யப்பட்டது.

                              50-வது திருத்தம் (1984, செப்டம்பர்):

                              ஆயுதப்படை, பாதுகாப்பு படை மற்றும் சி.பி.ஐ. அதிகார செயல்பாடுகளை கட்டுப்படுத்த பாராளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதித்தது.

                              51-வது திருத்தம் (1984):

                              வடகிழக்கு மாநில சட்டப்பேரவைகளில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

                              52-வது திருத்தம் (1985, பிப்ரவரி):

                              கட்சித் தாவல் தடை செய்யப்பட்டது.

                              53-வது திருத்தம் (1986, ஆகஸ்ட்):

                              மிசோரம் மாநிலத்தின் தனி அந்தஸ்து உறுதி செய்யப்பட்டு அதன் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை நாற்பது ஆக்கப்பட்டது.

                              54-வது திருத்தம் (1986):

                              தலைமை நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம் உயர்த்தப்பட்டது.

                              55-வது திருத்தம் (1986):

                              அருணாசல பிரதேசம், 24 வது மாநிலமாக்கப்பட்டது. அதன் ஆளுநருக்கு சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட விசேஷ அதிகாரங்கள் வழங்கப்பட்டது.

                              56-வது திருத்தம் (1987):

                              கோவா 25 வது மாநிலமாக்கப்பட்டது.

                              57-வது திருத்தம் (1987, செப்டம்பர்):

                              நாகாலந்து, மேகாலயா, மிசோரம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

                              58-வது திருத்தம் (1987):

                              இந்திய அரசியல் அமைப்பிற்கு அதிகாரப்பூர்வமான இந்தி மொழி பெயர்ப்பு வெளியிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

                              59-வது திருத்தம் (1988):

                              உள்நாட்டுக் குழப்பம் காரணமாக பஞ்சாபில் நெருக்கடி நிலை அறிவிக்க அரசிற்கு அதிகாரம் ்ளித்தகு.

                              60-வது திருத்தம் (1988):

                              நபர் ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு தொழில்வரி ரூபாய் 250 லிருந்து 2,500 வரை உயர்த்தப்பட வகை செய்யப்பட்டது.

                              61-வது திருத்தம் (1989 மார்ச்):

                              வாக்களிக்கும் வயது 21லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

                              62-வது திருத்தம் (1988):

                              மேலும் பத்து ஆண்டுகளுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கும் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டது.

                              63-வது திருத்தம் (1988):
                              59 வது திருத்தத்தை (பஞ்சாபில் நெருக்கடி நிலை) ரத்து செய்தது.

                              64-வது திருத்தம் (1990):
                              பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க வகை செய்யும் திருத்தம், ஆனால் இத்திருத்தம் நிறைவேற்றப்படவில்லை.

                              65-வது திருத்தம் (1990):
                              பவங்குடியினர் மற்றும் மலை சாதியினர் நலனுக்கு ஒரு தனி தேசியக் கமிஷன் உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.

                              66-வது திருத்தம் (1990):
                              நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் அரசியலமைப்பில் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட்டன.

                              67-வது திருத்தம் (1990, அக்டோபர்):
                              பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டது.

                              68-வது திருத்தம் (1991, மார்ச்):
                              பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் நீட்டிக்கப்பட்டது.

                              69-வது திருத்தம் (1992, பிப்ரவரி):
                              தில்லி தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.

                              70-வது திருத்தம் (1991, டிசம்பர்):
                              தில்லி தேசிய தலைநகர் ஆட்சிப் பகுதியாக அறிவிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.

                              71-வது திருத்தம் (1992):
                              நேரடியான பஞ்சாயத்து தேர்தல்களில் பழங்குடியினர் மற்றும் மலை சாதியினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ரிசர்வ் தொகுதியை ஒதுக்குவது,பெண்களுக்குத் தனித் தொகுதி ஒதுக்கீடு மற்றும் பஞ்சாயத்துகளின் பதவிக்காலம் குறித்தது.

                              73-வது திருத்தம் (1993):
                              ஊராட்சி அமைப்புகளில் புதிய பொறுப்புகள் மற்றும் தேர்தல்கள் குறித்தது.

                              74-வது திருத்தம் (1993):
                              நகர பஞ்சாயத்து, முனிசிபல் கவுன்சில் மற்றும் முனிசிபல் கார்ப்பரேசன் குறித்தது.

                              75-வது திருத்தம் (1994):
                              மாநிலயளவில் வாடகைக் குழுக்களை நியமித்தல் தொடர்பானது.

                              76-வது திருத்தம் (1994):
                              பிற்படுத்தப்பட்டோர் மலை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் இடஒதுக்கீடு குறித்தது.

                              77-வது திருத்தம் (1995):
                              மலை சாதியினர் மறஅறும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது சம்மந்தமானது.

                              78-வது திருத்தம் (1995):
                              ஒன்பதாம் அட்டவணைக்குள் இடப்பட்ட சட்டதிருத்தங்கள் செயல் முறைப்படுத்தப்படும் போது நீதிமன்றங்களின் இடையூறுகளுக்கு உட்படுகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக வழக்குகளின் பாதிப்பிற்கு உட்படாத வகையில் பல சட்டதிருத்தங்கள் ஒன்பதாம் அட்டவணைக்குள் சேர்க்கப்பட்டன.

                              79-வது திருத்தம் (1996):
                              இதன்படி ஆறாவது அட்டவணையில் அசாமிலுள்ள இரண்டு மலைப்பிரதேச மாவட்டங்கள் அதிக சுயாட்சி கொடுக்கும் படியாக இணைக்கப்பட்டன. கார்பி, அங்லாங் மற்றும் வடக்கு கச்சார் மலைப்பகுதி (Karibi, Anglong and North Cachar Hills) சுயாட்சி கவுன்சில்களுக்கு கூடுதலான நிர்வாக சட்டமியற்றும் அதிகாரங்கள்
                              கொடுக்கப்பட்டன. இந்த மலைப்பகுதி சுயாட்சி கவுன்சில்களுடன் கலந்து மேலும் சில சுய முடிவு (Discretionary Power) அதிகாரங்களை செயல்படுத்த அசாம் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

                              80-வது திருத்தம் (2000):
                              இதன்படி அரசியமைப்பின் 269, 270-ம் விதிகளின்படி மத்திய மாநில அரசுகளுக்கிடையே வரி பங்கீடு செய்து கொள்வதில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

                              81-வது திருத்தம் (2000):
                              இந்த திருத்தத்தின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினத்தவர்களுக்கும் தலைமை நீதிமன்றம் உறுதிப்படுத்திய வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற கட்டுப்பாடு விலக்கப்பட்டது. இதனால் முந்திய வருடம் நிரப்பப்படாமல் இருக்கும் இட ஒதுக்கீடுகளும் அடுத்தவருடம் கண்க்கில் எடுத்துக் கொண்டு இடங்கள் நிரப்பப்படும்.

                              82-வது திருத்தம்(2000):
                              இந்த திருத்தத்தின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் தேர்வு, வேலைவாய்ப்பு, பணிமேம்பாடு ஆகியவற்றில் மதிப்பெண் தகுதியினை தளர்த்துவதற்கும் மாநிலங்களுக்கு 355-ம் விதியின்படி எந்த இடையூறும் ஏற்படாமல் செய்யப்பட்டது.

                              83-வது திருத்தம் (2000):
                              இந்த திருத்தத்தின்படி அரசியலமைப்பின் 243-வது விதி திருத்தப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் பஞ்சாயத்துகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட
                              ஒதுக்கீடு தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. காரணம் அருணாச்சலப் பிரதேச மொத்த மக்கள் தொகையும் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.

                              84-வது திருத்தம் (2001):
                              எம்.பி, எம்.எல்.ஏ., தொகுதிகளில் இந்தியா முழுவதும் மக்கள் தொகை சமநிலை இல்லாமல் வளர்ச்சியடைந்துள்ளது. இதனைப் போக்க 84-வது திருத்தம் வகை செய்துள்ளது.
                              இதன்படி 1991-ல் மக்கள் தொகைக் கணக்கு அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமலும், தாழ்த்தப்பட்ட,பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமலும் தொகுதி எல்லைகளைத் திருத்தவும் மாற்றியமைக்கவும் (to readjust) இத்திருத்தம் வகை செய்தது.

                              85-வது திருத்தம் (2001):
                              அரசு ஊழியர்களாகப் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன்த்தவர்களுக்கு, அரசு இடஒதுக்கீட்டின் சட்ட முறைப்படி பணிமூப்பு (Seniority) அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்க இந்த திருத்தம் வகை செய்கிறது. இது 1995 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதிலிருந்து அமுல்படுத்தப்படும்.

                              86-வது திருத்தம் (2002):
                              குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமையை (Right to Education) அரசியலமைப்பில் சேர்ந்துள்ளது. இதற்காக அரசிலமைப்பின் 21-வது பிரிவில் புதிய 21-ஏ, என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநிலமும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும். மேலும் 45-வது பரிவும் மாற்றப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு குழந்தைக்கும் 6-வயது முடியும் வரை பராமரிப்பும் கல்வியும் அளிக்க வேண்டும்.

                              87-வது திருத்தம் (2003):
                              இதன்படி அரசியலமைப்பின் 81,82,170,330 ஆகிய விதிகளில் காணப்படும் 1991-ஆம் வருடம் என்பதற்குப் பதிலாக 2001 என்பது சேர்க்கப்பட வேண்டும்.

                              88- வது திருத்தம் (2003):
                              இந்தி திருத்தம் சேவை வரிதொடர்பாக செய்யப்பட்டது ஆகும். அரசியலமைப்பின் 286 பிரிவிற்குப் பிறகு 268(ஏ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி மத்திய அரசு சேவை வரி (Taxes on Service) விதிக்கும், பாராளுமன்ற சட்டத்தின்படி மத்திய அரசும், மாநில அரசும் அதை வசூல் செய்து தங்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும்.
                              ஏழாவது அட்டவணையில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களில் 92-சி என்ற பிரிவில் சேவைவரி சேர்த்துக் கொள்ளப்படும். மத்திய அரசு கெசட்டில் வெளியிட்ட நாள் முதல் இது நடைமுறைக்கு வரும்.

                              89-வது திருத்தம் (2003):
                              இது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் தனித்தனியே அமைப்பது பற்றிய திருத்தமாகும். இதன்படி அரசியலமைப்பின் 338-ம் பிரிவின்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் என்பது அமைக்கப்படும் இதில் ஒரு தலைவர், உபதலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுவர். மேலும் 338(ஏ) விதியின்படி பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஒன்றும் அமைக்கப்படும். இதிலும் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர், உபதலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இந்த இரண்டு ஆணையங்களும் தங்களுக்கு உண்டான செயல் முறைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் அதிகாரம் பெற்றுள்ளன.

                              90-வது திருத்தம் (2003):
                              இதன்படி அரசியலமைப்பின் 332 வது பிரிவில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டது. அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் போடோ மாவட்ட நிலப்பகுதியில் அளிக்கப்பட்ட தொகுதிப்பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிக்க இத்திருத்தம் வகை செய்கிறது.

                              91-வது திருத்தம் (2003):
                              இது அமைச்சரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றியதாகும். இதன்படி 75-வது விதியில் இத்திருத்தம் சேர்க்கப்பட்டது. இதன்படி மத்திய அமைச்சரவையில் பிரதமர் உட்பட் அமைச்சர்களின் எண்ணிக்கை லோக்சபா மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது. இதே போல் 164-ல் விதியிலும் இந்த குறிப்பு சேர்க்கப்பட்டது. இதன்படி மாநில அமைச்சரவையும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் (கீழ்சபை) மொத்த எண்ணிக்கையில்லை 15 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது.

                              92-வது திருத்தம் (2003):
                              அரசியமைப்பின் எட்டாவது அட்டவணையில் 3 எண்ணுக்குப் பதில் அந்த இடத்தில் 5 என்று போட வேண்டும். இதற்கு முன்பாக போடா. டொஹரி என்பதைச் சேர்க்க வேண்டும்.

                              93-வது திருத்தம் (2005):
                              அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இடஒதுக்கீட்டில் SC.ST மற்றும் OBC பிரிவினருக்கு ஒதுக்கப்படும் இடங்கள் சம்மந்தமாக மாநில அரசே சட்டத்தை இயற்றிக்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது.

                              94-வது திருத்தம் (2006):
                              பிகாரிலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கான அமைச்சரை ஆளுநரே நியமிக்கும் அதிகாரம் (Art 164-1) ன் படி வழங்கப்பட்டது. பிகாரிலிருந்து, சத்தீஸ்கர், ஜார்கண்ட் பிரிக்கப்பட்டது.

                              95-வது திருத்தம் (2003):
                              88 வது திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்ட Service tax Bill. பாராளுமன்றத்தால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

                              96-வது திருத்தம் (2003):
                              96 வது திருத்த்தின்படி மக்களவைத் தொகுதிகளை 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2026 வரை மாற்ற என்ற திருத்தம் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி என வரையறுக்கப்பட்டது.

                              97-வது திருத்தம்:
                              10-வது அட்டவணையில் உள்ள கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி -விதிமுறையை மீறும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரம் வழங்குதல்.

                              98-வது திருத்தம்:
                              இத்திருத்தத்தின்படி National Judicial Commission அமைக்கப்பட்டது.

                              99-வது திருத்தம்:
                              Bodo land Territorial Council (BTC) ,2003-ல் கொண்டுவரப்பட்ட 90-வது திருத்தத்தில் சிலமாற்ரங்கள்.,மலைவாழ் மக்கள் உள்ள மாவட்டங்களில் நிர்வாகிகளாக மற்ற வகுப்பினரையும் நியமிக்கும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

                              100-வது திருத்தம்:
                              அங்கிகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் 22 என சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

                              103-வது திருத்தம்:
                              சிறுபான்மையினருக்காக தேசிய கமிஷன் (Repeal) மசோதா 23.22.2004 அன்று மக்களவையில் கொண்டுவரப்பட்டது.

                              104-வது திருத்தம் (2006):
                              93-வது திருத்த்தின்படி 2005 இல் கொண்டுவரப்பட்ட "Quota Bill" குடியரசுத் தலைவர் A.P.J.அப்துல்கலாம் அவர்களின் ஒப்புதலின் படி 20 ஜனவரி 2006 ஆம் ஆண்டு 104-வது திருத்தம் சட்டமாக்கப்பட்டது.

                              105-வது திருத்தம் (2006):
                              This Constitution bill was (Art.164.1) came into effect 94th Amendment 2006.

                              106-வது திருத்தம் (2006):
                              புதிதாக Part IX B சேர்க்கப்பட்டு புதிததாக (Art 243 ZH-243 ZT)சேர்க்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கென புதிய வரைமுறைகள் கொண்டுவரப்பட்டது.

                              107-வது திருத்தம் (2007):
                              ஆறாவது அட்டவணையில் உள்ள மாநில தொடர்பான திருத்தப்பட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தால் அது நிராகரிக்கப்பட்டது.

                              108-வது திருத்தம்:
                              மகளிர் இடஒதுக்கீடு மசோதா. 6 மே 2008 இல் ராஜ்யசபாவில் கொண்டுவரப்பட்டு 9 மே 2010 இல் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அங்கீகரிக்கப்பட்டது.

                              110-வது திருத்தம்:
                              பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 1/3 பங்கு என்பதற்கு 1/2 பங்கு என மாற்றி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. (நிலுவையில் உள்ளது).

                              111-வது திருத்தம் (2011):
                              கூட்டுறவு சங்கங்கள், சுதந்திரமாகவும், பணிநியமனம், ஜனநாயக முறைப்படி மேற்கொள்ளலாம் என அரசு நெறிபடுத்தும் கோட்பாட்டின்படி செயல்பட அந்தந்த மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

                              112-வது திருத்தம்:
                              ஊரகவளர்ச்சி முகமை மூலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு.

                              113-வது திருத்தம்:
                              எட்டாவது அட்டவணையில் உள்ளஒரியா என்ற மொழிக்கு ஒடிசா என்று மாற்றப்பட்டது.

                              114-வது திருத்தம்:
                              உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வுபெறும் வயது 62லிருந்து 65 ஆக உயத்தப்பட்டது.

                              பகுதி XXI
                              தற்காலிகமான, மாறும் இடைக்காலத்திற்கான மற்றும் தனியுறு வகையங்கள் 


                                • உறுப்பு 369. மாநிலப் பட்டியலிலுள்ள குறித்த சில பொருட்பாடுகளைப் பொறுத்து, அவை ஒருங்கியல் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளாக இருந்தாற்போன்றே சட்டங்கள் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள தற்காலிக அதிகாரம். 
                                • உறுப்பு 370. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக சிறப்பு தகுதிகள்  (2019 ஆகஸ்ட் 5ல் நீக்கறவு செய்யப்பட்டது)
                                • உறுப்பு 371. மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைப் பொறுத்த தனியுறு வகையங்கள். 
                                • உறுப்பு 371அ. நாகாலாந்து மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 
                                • உறுப்பு 371ஆ. அசாம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 
                                • உறுப்பு 371இ. மணிப்பூர் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 
                                • உறுப்பு 371ஈ. ஆந்திரப் பிரதேச மாநிலம் பொறுத்த தனியுறு வகையங்கள்.
                                • உறுப்பு 371உ. ஆந்திரப் பிரசேதத்தில் மையப் பல்கலைக்கழகத்தை நிறுவுதல். 
                                • உறுப்பு 371ஊ. சிக்கிம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையங்கள். 
                                • உறுப்பு 371எ. மிசோரம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 
                                • உறுப்பு 371ஏ. அருணாசலப் பிரதேச மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 
                                • உறுப்பு 371ஐ. கோவா மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 
                                • உறுப்பு 372. நிலவுறும் சட்டங்கள் தொடர்ந்து செல்லாற்றலில் இருத்தல் மற்றும் அவற்றின் தழுவமைவு.
                                • உறுப்பு 372அ. சட்டங்களைத் தழுவமைவு செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம். 
                                • உறுப்பு 373. தடுப்புக் காவலில் உள்ளவர்களைப் பொறுத்து, குறித்தசில நேர்வுகளில் ஆணை பிறப்பிப்பதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம். 
                                • உறுப்பு 374. கூட்டாட்சிய நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கூட்டாட்சிய நீதிமன்றத்தில் அல்லது மன்றத்தமர் மாட்சிமைதங்கிய மன்னர் முன்பு முடிவுறாநிலையிலுள்ள நடவடிக்கைகள் பற்றிய வகையங்கள். 
                                • உறுப்பு 375. நீதிமன்றங்களும் அதிகார அமைப்புகளும் அலுவலர்களும் இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு தொடர்ந்து செயற்பணியாற்றுதல்.
                                • உறுப்பு 376. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பற்றிய வகையங்கள். 
                                • உறுப்பு 377. இந்தியக் கணக்காய்வர்- தலைமைத் தணிக்கையர் பற்றிய வகையங்கள். 
                                  • குறிப்பு: இந்திய குற்றவியல் சட்ட உறுப்பு 377 (தகாத உறவு பற்றியது) 2018 செப்டம்பர் 6ல் நீக்கப்பட்டுவிட்டது.
                                • உறுப்பு 378. அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் பற்றிய வகையங்கள். 
                                • உறுப்பு 378அ. ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றப் பேரவையின் கால அளவு பற்றிய தனியுறு வகையம்.
                                • உறுப்பு 379. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 380. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 381. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 382. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 383. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 384. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 385. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 386. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 387. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 388. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 389. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 390. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 391. (நீக்கறவு செய்யப்பட்டது.) 
                                • உறுப்பு 392. இடர்பாடுகளை அகற்றுவதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம்.

                                பகுதி XXII
                                குறுந்தலைப்பு, தொடக்கம், அதிகாரஉறுதி பெற்ற இந்திமொழி வாசகம் மற்றும் நீக்கறவுகள்


                                  • உறுப்பு 393. குறுந்தலைப்பு. 
                                  • உறுப்பு 394. தொடக்கம். 
                                  • உறுப்பு 394அ. அதிகாரஉறுதி பெற்ற இந்திமொழி வாசகம். 
                                  • உறுப்பு 395. நீக்கறவுகள்.

                                    இணைப்புப்பட்டியல்கள் / அட்டவணைகள்


                                    • முதல் அட்டவணை - தேசிய,மாநில எல்லைகள்
                                      • I. மாநிலங்கள். 
                                      • II. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகள். 
                                    • இரண்டாம் அட்டவணை - உயர் அரசு பணியாளர் சம்பளம்
                                      • பகுதி அ - குடியரசுத்தலைவர் மற்றும் மாநிலங்களின் ஆளுநர்கள் குறித்த வகையங்கள். 
                                      • பகுதி ஆ - (நீக்கறவு செய்யப்பட்டது) 
                                      • பகுதி இ - மக்களவைத் தலைவர், துணைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர், துணைத்தலைவர், ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், சட்டமன்ற மேலவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் குறித்த வகையங்கள்.
                                      • பகுதி ஈ - உச்ச நீதிமன்றத்தின் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் குறித்த வகையங்கள். 
                                      • பகுதி உ - இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் குறித்த வகையங்கள்.
                                    • மூன்றாம் அட்டவணை - பதவிபிரமானம்
                                      • ஆணைமொழிகளின் அல்லது உறுதிமொழிகளின் சொன்முறைகள் 
                                    • நான்காம் அட்டவணை - மாநிலங்களவை ,இட ஒதுக்கீடு
                                      • மாநிலங்களவையில் பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதல் 
                                    • ஐந்தாம் அட்டவணை - தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் பகுதி நிர்வாகம்
                                      • பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குமான நிருவாகம் மற்றும் கட்டாள்கை குறித்த வகையங்கள். 
                                        • பகுதி அ - பொதுவியல் 
                                        • பகுதி ஆ - பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குமான நிருவாகம் மற்றும் கட்டாள்கை 
                                        • பகுதி இ - பட்டியல் வரையிடங்கள் 
                                        • பகுதி ஈ - இணைப்புப்பட்டியலின் திருத்தம் 
                                    • ஆறாம் அட்டவணை - அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, மிசோரம் பழங்குடி நிர்வாகம்
                                      • அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் வரையிடங்களின் நிருவாகம் குறித்த வகையங்கள் 
                                    • ஏழாம் அட்டவணை - மத்திய மாநில அதிகார பங்கீடு
                                      • பட்டியல் I - ஒன்றியத்துப் பட்டியல் 100 
                                      • பட்டியல் II - மாநிலத்துப் பட்டியல் 61
                                      • பட்டியல் III - ஒருங்கியல் பட்டியல் 52
                                    • எட்டாம் அட்டவணை
                                      • ஆட்சி மொழிகள் 22
                                    • ஒன்பதாம் அட்டவணை - நிலசீர்திருத்தம் (1951)
                                      • குறித்தசில சட்டங்களையும் ஒழுங்குறுத்தும் விதிகளையும் செல்லுந்தன்மை உடையனவாக்குதல் 
                                    • பத்தாவது அட்டவணை - கட்சி தாவல் தடை சட்டம் (52வது சட்டதிருத்தம், 1985)
                                      • கட்சி மாறுதல் காரணமாக விளையும் தகுதிக்கேடு குறித்த வகையங்கள் 
                                    • பதினொன்றாம் அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 வது சட்டதிருத்தம் 1992)
                                    • பன்னிரண்டாம் அட்டவணை - நகர் பாலிகா (74 வது சட்ட திருத்தம் 1992)