- குடிமக்கள் அலைச்சல் இல்லாமலும், யாருக்கும் பயப்படாமலும், யாரின் வற்புறுத்தல் இல்லாமலும், கட்டுப்படுத்துதல் இல்லாமலும், தங்களின் மன விருப்பபடி நேர்மையாக வாக்களிக்கவும் வழிவகை செய்யக்கூடிய ஒரு platform ஆக இருக்க வேண்டும்.
- Online மூலம் Secured ஆக, செலவு குறைவாக நடக்க வேண்டும்.
- குடிமக்கள் தங்களின் வாக்குகளை செல்போன் மூலம் இரகசியமாக பதிவு செய்ய வேண்டும். இதற்கு, ஒவ்வொரு குடிமகனுக்கும், தனிப்பட்ட Account உருவாக்கி (ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ID Proof மூலம்), OTP feature-ஐ பயன்படுத்த வேண்டும். இது அவர்களின் சுய நினைவினையும், அடையாளத்தையும் உறுதி செய்யும்.
- வாக்களித்ததற்கான Receipt ஒவ்வொறு குடிமகனிடமும் இருக்க வேண்டும். மேலும் அதனை அவன் மட்டுமே Access பண்ணவும், பார்வையிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
- இதன் மூலம், குடிமகன் தன் வாக்களிப்பினை உறுதி செய்து கொள்ள இயலும்.
- குடிமகன் தன் வாக்களிப்பினை, தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரும் Response மூலம் Cross Verify செய்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
- தனது வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட வாக்கினை குடிமக்கள், அடுத்த 5 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றி (including NOTA), வேறு ஒருவரை அப்பதவிக்கு கொண்டுவர முடிய வேண்டும். இது தேர்தல் வாக்குகளை எண்ணிக்கை செய்யும் அமைப்பினை, அடுத்த 5 ஆண்டுகளிலும் Active ஆக வைத்து இருந்தால் கண்டிப்பாக சாத்தியமே. மேலும் மக்கள் நல ஆட்சி முறை நடக்கவும் இது வழிவகை செய்யும்.
- இதன் மூலம், மக்கள் விருப்பப்படும் கணம் மட்டுமே, வேட்பாளர் அப்பதவியினை வகிக்க முடியும்.
- மேலும் இது தேர்தலில் போட்டியிட்ட, அனைத்து வேட்பாளர்களையும் (5 ஆண்டுகளிலிலும்) விழிப்புணர்வுடன் போட்டி களத்திலேயே இருக்க வைக்கும். இதனால் அடுத்த வேட்பாளரை உடனடியாக அப்பதவிக்கும் மாற்றாக கொண்டு வர இயலும். இதற்கு உறுதுணையாக, ஒவ்வொரு குடிமகனுக்கும், 5 வருட காலத்தில், எப்போது வேண்டுமானாலும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு Real Time Voters Supporters இருக்கிறது என தெரிந்து கொள்ளும் வசதியினை செய்துக் கொடுக்கவும் வேண்டும்.