Ads Here

24 நவம்பர், 2023

இயற்சீர் வெண்டளை

மாமுன்நிரையும் விளமுன்நேரும் வரும் வெண்பா.

முன்னமே அறிந்திருக்க வேண்டியது :-

[1] இயற்சீர் = ஈரசைச்சீர்கள் (மாச்சீர் மற்றும் விளச்சீர்)

[1.1] மாச்சீர் = ஈரசைச்சீரின் இறுதியசை நேரசையில் முடிவது. 

[1.2] விளச்சீர் = ஈரசைச்சீரின் இறுதியசை நிரையசையில் முடிவது.

[மேலதிகம்] உரிச்சீர் = மூவசைச்சீர்கள் (காய்ச்சீர் மற்றும் கனிச்சீர்)

##############

மாமுன்நிரை வருவது இயற்சீர் வெண்டளை - அஃதாவது, நிலைச்சீர் மாச்சீராக வந்து (ஈரசைச்சீரின் இறுதியசை நேரசையில் முடிந்து), அதன்பின்பு வரும் வருஞ்சீர் நிரையசையில் தொடங்குவது இயற்சீர் வெண்டளையாகும்.


விளமுன்நேர் வருவது இயற்சீர் வெண்டளை - அஃதாவது, நிலைச்சீர் விளச்சீராக வந்து (ஈரசைச்சீரின் இறுதியசை நிரையசையில் முடிந்து), அதன்பின்பு வரும் வருஞ்சீர் நேரசையில் தொடங்குவது இயற்சீர் வெண்டளையாகும்.


(இயற்சீர் வெண்டளைக்கு எடுத்துக்காட்டாக ஒரு குறள் வெண்பா :-)


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூரிய நீர். 


பாலொடு தேன்கலந் - விளமுன்நேர்


தற்றே பணிமொழி - மாமுன்நிரை


வாலெயி றூரிய - விளமுன் நேர்


இங்கு குறள் வெண்பாவானதால்,

இறுதிச் சீரான, நீர் நேரசையில் வந்து 'நாள்' எனும் வாய்ப்பாட்டில் முடிகிறது.


###############


இந்த வெண்பாக்கள் தூங்கிசை செப்பலோசையில் வரும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக