Ads Here

04 அக்டோபர், 2022

சமூக மேம்பாட்டுத் திட்டம் (CDP - Community Development Programme 1952) - Group 2 & 2A Mains Notes in Tamil

Group 2 & 2A Mains Syllabus > Socio-economic issues in India & Tamil Nadu (இந்தியாவிலும் தமிழ்நாட்டிலுமுள்ள சமூகப் பொருளாதார பிரச்சினைகள்)

சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் (Community Development Programme - CDP)

சமூக மேம்பாட்டுத் திட்டம்

1. அக்டோபர் 2, 1952ல் காந்தியடிகளின் பிறந்தநாளன்று தொடங்கப்பட்டது.

2. சுதந்திர இந்தியாவில் அரசால் தொடங்கப்பட்ட மிகப்பெரிய ஊரக புணரமைப்பு திட்டமாகும் (Biggest Rural Reconstruction Programme).

3. இத்திட்டத்தின் அடிப்படையில் 55 சமூகத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

4. இத்திட்டமானது எட்டாவா (Etawah Pilot Project) மற்றும் கோரக்பூர் சோதனைகளின் அடிப்படையினால், ஆல்பர்ட் மேயர் (Albert Mayer) என்பரின் விளக்கதினாலும் உருவானது.

சமூக மேம்பாட்டு திட்டத்தின் அமைப்பு முறை :

1. சமூக வளர்ச்சி நிறுவனம்

2. சமூக வளர்ச்சி ஆராய்ச்சி மையம்

3. மாவட்டமானது 100 கிராமங்களை உள்ளடக்கிய வளர்ச்சி வயல்களாக பிரிக்கப்பட்டு, ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் (BDO) நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்படுகிறது.

4. வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு கீழே கிராம அளவிலான பணியாளர்கள் (10 பேர் முதல் 12 பேர் வரை) கிராமங்களுக்கு ஒரு பொறுப்பாளராக உள்ளனர்.

சமூக மேம்பாட்டு திட்டத்தின் பண்புகள் :

1. கிராமப்புற மக்களினையே தன்னம்பிக்கையை வளர்ப்பது.

2. கிராமப்புற மக்களின் உளவியல் கண்ணோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது.

3. புதிய நிர்வாக அமைப்பினை உருவாக்குவது.

4. மக்கள் நலன் சார்ந்த திட்டம்.

5. இது பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விகாஷ் மண்டலங்கள் மூலமாக ஒன்றிணைந்து சமுதாய அக்கறைக்காக செயல்படுவது என்ற எண்ணத்தை வழங்குவது.

சமூக மேம்பாட்டு திட்டத்தின் நோக்கங்கள் :

1. வேளாண்மை உற்பத்தி, தரம் மற்றும் அளவை பெருக்குவது.

2. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்ப்பது.

3. கிராமப்புறங்களில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது.

4. கிராமப்புறங்களில் பொது சுகாதாரம், ஆரம்பகல்வி, பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது.

5. கிராமப்புற வீடுகளின் மேம்பாடு

6. குடிசைத்தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொடர்பான தொழிற்சாலைகளை அமைத்தல்.

7. சரியான முறையில் காணத்தக்க வளங்களை பயன்படுத்துவதன் மூலம் முழுமையான வளர்ச்சியை அளிப்பது.

8. மக்கள் நலனை சிறப்பாக்கும் நாட்டில் உள்ள அனைத்து வசதிகளும் கிராமப்புற மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வது.

9. கிராமப்புற மக்களுக்கு சமூக, தார்மீக மற்றும் நிதி முன்னேற்றத்திற்கான வழிவகை செய்வது.

10. அரசானது மாவட்டம், வட்டம் மற்றும் கிராமப்புற அளவில் நேரடியாக தொடர்புகொள்வதற்கு ஏதுவாக ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவது.

சமூக மேம்பாட்டுத் திட்டம் உருவாகக் காரணமான வரலாற்று பின்னணி :

முதல் நிலை : முன்னோடிகளின் முயற்சிக்காலம் (1921 - 1930)

1. Hemilton Project 1903.

2. காந்திய பாரம்பரியத்தின் ஆக்கப்பூர்வமான வேலைகள். (Gandhian Constructive Programme 1920)

3. குஜராத் மாநிலம் கூர்கான் மாவட்டத்தில் F.L. பிரைன் என்பவரால் கொண்டுவரப்பட்ட சோதனை (Brayne’s Gurgaon Experiment 1920).

4. 1921இல் இரவிந்திரநாத் தாகூர் அவர்களால் கிராமப்புற மறுபுணரமைப்புகாக கொண்டு வரப்பட்ட ஸ்ரீநிகேதன் சோதனை (Sriniketan Project 1908 in some books).

5. மார்த்தாண்டம் சோதனை (Marthandam Project) 1929-இல் ஸ்பெண்ஸர் ஹெட்ச் (Spencer Hetch) என்பவரால் கொண்டு வரப்பட்டது.

6. 1932 இல் V.T. கிருஷ்ணமாச்சாரி என்பவரால் கொண்டுவரப்பட்ட பரோடா

கிராமப்புற மறுபுணராய்வு சோதனை (Baroda Project).

7. ஆச்சார்ய வினோபா பாவேயின் இயக்கம் (Acharya Vinoba Bhave)

    ▪   பூதான் - கிராமதன் இயக்கம் (Bhoodan - Gramadan) - கூடிப்பேசுதல்

    ▪   கிராமசுயராஜ்ஜியம் (GramSwaraj)

இரண்டாம் நிலை : பயிற்சி கால முன்னோட்டம் (1945 - 1952)

1. 1946 இல் மெட்ராஸ் பிர்கா திட்டம் 34 பீர்காக்களில் கொண்டுவரப்பட்டது.

2. S.K. டே (S.K. Dey) என்ற முன்னாள் சமூக வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்ட நிலோ கேரி சோதனை (Nilo Kheri Experiment).

3. 1948 இல் ஆல்பர்ட் மேயர் (Albert Mayer) என்பவரின் உதவியுடன் தொடங்கப்பட்ட எட்டாவா சோதனை திட்டம் (Etawah Pilot Project).

சமூக மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிந்தைய நிலை :

முதல் நிலை : அமைப்பு நிர்வாக கூட்டம் (1952 - 1956)

1. அமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டது.

2. பணியாளர்கள் சேர்த்தல்.

3. வட்டார அளவிலான வரவு, செலவு திட்டம் மற்றும் நிர்வாக அமைப்பு முறை ஆகியவற்றை வரையறை செய்தல்.

4. திட்டத்தின் ஆண்டு முறை குறித்த விளம்பரம்.

5. மத்திய, மாநில மற்றும் மாவட்ட அரசுகளுக்கிடையேயான அதிகாரங்களை பிரதிநிதிப்படுத்துதல்.

இரண்டாம் நிலை : ஒன்றிணைப்பு தொழில்நுட்ப திட்டம் (1956 - 1958)

1. இக்கூட்டமானது 5வது வளர்ச்சி ஆணையர்கள் மாநாட்டிற்கு பிறகு தொடங்கியது.

2. சமூக வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட நிதியானது 200 கோடியாக உயர்த்தப்பட்டது.

3. திட்டமானது மக்கள் பங்கேற்புடன் கூடிய அரசு திட்டம் என்ற நிலையில் இருந்து அரசின் பங்கேற்புடன் கூடிய மக்கள் திட்டம் என்று மாற்றப்பட்டது.

4. திட்டத்தின் நிர்வாகம் மற்றும் அமைப்பு முறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

மூன்றாம் நிலை :

1. ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவ படுத்தப்படுதல் சட்டம் 1959.

2. தேசிய வளர்ச்சி குழுவானது சமூக வளர்ச்சி திட்டம் (1952 CDP) மற்றும் அதன் தேசிய விரிவாக்க சேவை (1953 National Extension Service) ஆகியவற்றின் நிலையை பற்றி அறிய பல்வந்தராய் மேத்தா குழுவை (1957 - Balwant Rai Mehta Committee) நியமித்தது.

3. பல்வந்தராய் மேத்தா குழுவின் பரிந்துரைகள் 1957 :

• விவசாயம், குடிநீர், கிராமப்புற தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மூன்றடுக்கு பஞ்சாயத்துராஜ் அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும்.

• திட்டமானது சிறந்து செயல்பட, வட்டார அளவிலான பணியாளர்களின் (BDO) உதவியுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்தப்படக்கூடிய ஒரு செயல்திட்டங்களை உருவாக்கப்பட வேண்டும்.

சமூக மேம்பாட்டு திட்டத்தின் நிர்வாகம்:

1. கிராம பஞ்சாயத்திற்கும், கிராம சேவர்களுக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்த வேண்டும்.

2. கிராம சேவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக வேண்டும்.

3. 800 குடும்பங்களை உள்ளடக்கிய மக்கட்தொகை கொண்ட பரப்பளவிற்கு ஒருவர் என கிராம சேவகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

4. மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும்.

சமூக மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வரும் செயல்திட்டங்கள் :

1. வேளாண்மை மற்றும் வேளாண்சார்ந்த தொழில்களின் மேம்பாடு.

2. தரிசு நில மேம்பாடு.

3. வீரிய விதைகள் மற்றும் உரங்களை வழங்குவது.

4. கால்நடை வளர்ப்பு, மண் பாதுகாப்பு போன்றவைகளுக்காக கடன்வசதிகளை ஏற்படுத்தித் தருவது.

5. கூட்டுறவு சங்கங்களை அமைப்பது.

6. சிறு மற்றும் பெரிய நீர்பாசன வசதிகளை வழங்குவது.

7. குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவது.

8. கிராமப்புற சுகாதார திட்டத்தை ஏற்படுத்துவது.

9. கிராமப்புறங்களில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது.

10. ஆரம்ப வயது வந்தோர்க்கான சமூகக்கல்வி வளர்ச்சி.

11. சுய தொழில் பயிற்சியளிப்பது.

12. சிறுதொழில் மற்றும் குடிசைத்தொழில்கள்மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை தீர்ப்பது.

13. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் மற்றும் கிராமப்புற வீடுகள் அமைத்தல் போன்ற சமூக திட்டங்களை ஏற்படுத்துவது.

பயிற்சி வினாக்கள்

1. சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக.


திட்டம், அமைப்புகள், பண்புகள், நோக்கங்கள்


2. சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்குவதற்கு முந்தைய நிலையைக் குறிப்பிடுக.


சமூக மேம்பாட்டுத் திட்டம் உருவாகக் காரணமான வரலாற்று பின்னணி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக