Ads Here

25 ஜனவரி, 2019

இமயமலைத்தொடர்கள் (The Himalayan Mountains)

இந்தியாவின் புவியியல் இயற்கையமைப்பு (India's Physiographic Divisions)

இந்தியாவின் இயற்கைப் பிரிவுகளைப் பொருத்தவரை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 
  1. இமயமலைத்தொடர்கள் (The Himalayan Mountains)
  2. தீபகற்ப இந்திய நிலத்தட்டுக்கள் (The Peninsular Plateau)
  3. வடஇந்திய சமவெளிகள் (The North Indian Plains)
  • வடக்கிலுள்ள இமயமலைகள் இந்தியாவின் மொத்தப் பரப்பில் 17.9% பரப்பினையும், 
  • சமவெளிப் பகுதிகள் (Great plains) 17.1% பரப்பினையும், 
  • தார் பாலைவனம் (Thar Desert) 5.4% பரப்பினையும், 
  • தீபகற்ப பீடபூமிப்பகுதி (Peninsular Plateaus) 38.5 % பரப்பினையும், 
  • கடற்கரைச் சமவெளிப்பகுதிகள் (Coastal Plains) 10.4 % பரப்பினையும், 
  • தீவுகள் (Islands) 0.3 % பரப்பினையும் 
கொண்டுள்ளன.

இப்பகுதியில் இமயமலைத்தொடர்கள் (The Himalayan Mountains) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

இமயமலைத்தொடர்கள் (The Himalayan Mountains)

சூரியனிடமிருந்து பிரிந்து வந்த வாயு வளையம் காலப்போக்கில் குளிர்ந்து இறுகி புவிக்கோளமாக உருவெடுத்தது. அவ்வாறு பாறைகளாக இறுதி புவி உருவான காலத்தில் அனைத்து நிலப்பகுதிகளும் ஒரே தொகுப்பாக பேஞ்சியா (Pangea) என்று அழைக்கப் பெற்றது. பேஞ்சியாவைச் சுற்றிலும் பேந்தலாசா (Panthalaza) என்ற நீர்ப்பரப்பும் இருந்தது. பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் (Tethys) என்ற தாழ்வான கடலால் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

டெத்தில் கடற்கரைக்கு வடக்கே அங்காரா (Ankara) என்ற நிலப்பகுதியும், தெற்கே கோண்டுவானா (Gondwana) என்ற நிலப்பகுதியும் இருந்தன. கோண்டுவானா நிலம் கிழக்கில் ஆஸ்திரேலியாவுடனும், மேற்கில் ஆப்பிரிக்காவுடனும் இணைந்திருந்தது. பின்னர் ஒரு கால கட்டத்தில் கண்ட நகர்வு (Continental Drift) ஏற்பட்டது. கண்ட நகர்வினால் கோண்டுவானா பாறைகள் பல மாறுதலுக்கு உட்பட்டன.

புவி அசைவினால் பிளவுபட்ட பாறைகள் கோண்டுவானா நிலப்பகுதியின் ஒரு பகுதி தீபகற்ப இந்தியாவாக உருப்பெற்றது. புவி அசைவிற்கு கோண்டுவானா நிலம் உட்படுத்தப்பட்டபோது தீபகற்ப இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பல பிளவுகள் தோன்றி, பிளவுகளின் வழியே லாவா (Lava) என்ற பாறைக்குழம்பு வெளியேறி தீபகற்பப் பீடபூமியில் படிந்தது. காலப்போக்கில் லாவா இறுகி தீப்பாறைகளாக மாறி இப்பகுதி தக்காணப் பிடிப்பு (Deccan Trap) அல்லது லாவா பீடபூமி (Lava Plateau) என்றழைக்கப்பட்டது.

அங்காராவிலிருந்தும், கோண்டுவானாவிலிருந்தும் ஆறுகள் தாங்கள் அரித்து வந்த பொருட்களை ஆழம் இல்லாத டெதிஸ் கடலில் படிய வைத்தன. காலப்போக்கில் டெதிஸ் கடல் படிவுகளால் நிரப்பப்பட்டு, படிவுகள் இறுகி படிவுப்பாறைகளாக மாறின. புவியோட்டின் பக்கவாட்டு நகர்வால் கோண்டுவானா நிலப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தது. அவ்வாறே அங்காரா நிலப்பகுதியும் நகர்ந்து சென்றது. இரண்டு நிலங்களும் வெவ்வேறு வேகத்தில் நகர்ந்தன. எனவே, இரண்டு நிலப்பகுதிகளுக்கும் இடையே இருந்த மிருதுவான படிவுப் பாறைகள் அழுத்தப்பட்டு, மடிப்பு மலைகளாக உயர்ந்தன. இவையே மடிப்புமலைகள் (Fold Mountains) என்று இமயமலைகளாக அழைக்கக் காரணமாயிற்று.

புவியோட்டின் பக்கவாட்டு நகர்வினால் மடிந்து உயர்ந்த படிவுப் பாறைகளைக் கொண்ட இமயமலைகளை மடிப்பு மலைகள் (Fold mountains) என அழைக்கிறோம். இமயமலைத் தொடர் ஏறக்குறைய 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவான மடிப்பு மலைகள் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். எனவே தான் இவற்றை இளம் மடிப்பு மலைகள் (Young Fold Mountains) என்றழைக்கின்றனர். இம்மலைகளின் முகடுகளும் சரிவுகளும் கடல் படிமங்கள் படிந்த படிவுப்பாறைகளால் ஆனவை.

வடக்கிலுள்ள இமயமலைகள் மேற்கே சிந்து நதிப் பள்ளத்தாக்கிற்கும், கிழக்கே பிரம்மபுத்திராவிற்கும் இடையில் சுமார் 2400 கிமீ நீளம் உடையவை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8000 கிமீ உயரத்திற்கும் மேற்பட்ட குன்றுகளையும், இளம் மடிப்பு மலைகளையும் கொண்டுள்ளன.

இமயமலைகள் காஷ்மீர் பகுதியில் சுமார் 500 கிமீ அகன்றும், அருணாச்சலப்பிரதேசத்தில் சுமார் 200 கிமீ அகன்றும் காணப்படுகிறது. வடக்கிலுள்ள இமயமலைகள் பிறை வடிவத்துடன் (Crescent Shape), சுமார் 5,78,000 சதுர கிமீ பரப்பளவு உடையவை ஆகும். இமயமலைகளின் மிக அதிகபட்ச உயரம் கொண்ட சிகரங்களும், குன்றுகளும் கிழக்கு நேபாளத்தில் அமைந்துள்ளன.

அகன்ற வாக்கில் (Breadthwise), இமயலைகளை 4 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன :
  1. வெளிப்புற இமயமலைகள் அல்லது சிவாலிக் குன்றுகள் (The Outer Himalayas or The Shiwaliks)
  2. தாழ்ந்த இமயமலைகள் அல்லது நடுத்தர இமயமலைகள் அல்லது ஹிமாச்சல் (The Lesser or Middle Himalayas or The Himachal)
  3. பெரிய இமயமலை அல்லது ஹிமாத்ரி (The Greater Himalayas or The Himadri)
  4. டிரான்ஸ் இமயமலைகள் (The Trans-Himalayas)

1) வெளிப்புற இமயமலைகள் அல்லது சிவாலிக் குன்றுகள் (The Outer Himalayas or The Shiwaliks)

இமயமலைகளின் தென்கோடிப் பகுதியில் உள்ள தொடரையே சிவாலிக் அல்லது வெளிப்புற இமயமலைகள் (Outer Himalayas) என்கிறோம். 600 முதல் 1500 உயரம் வரையிலும் (சராசரி உயரம் 1200 மீ), 15 முதல் 50 கிமீ அகலத்துடனும் சிவாலிக் தொடர் காணப்படுகிறது. சிவாலிக் தொடர் பொதுவாக பாறாங்கல் (boulder) மற்றும் களிமண்ணால் (clay) ஆன கடல்படிவுகளையே மிகுதியாகக் கொண்டுள்ளது. 

இமயமலைகளின் தோற்ற வரலாற்றில் சிவாலிக் தொடர் மிக சமீபத்தில் தோன்றியவையே. சிவாலிக் தொடரின் தாழ் பகுதிகளில் ஆறுகள் கூழாங்கற்கள் (Pebbles), சரளைக்கற்கள் (Gravel), மணல் (Sand) ஆகியவற்றைப் படியவைக்கின்றன. இவ்வாறு படிய வைக்கும் படிவுச் சமவெளியை பாபர் சமவெளி (Bhabar Plain) என்பர். தெராய் சமவெளி (Terai Plain) என்பது நன்கு அரிக்கப்பட்ட வண்டல் மண்துகள்களால், (Formed of fine alluvium) படியவைக்கப்பட்ட படிவுகள் ஆகும். இவை பாபர் சமவெளிக்கு தெற்காக உள்ளன.

வெளிப்புற இமயமலைகள், தாழ்ந்த இமயமலைகளிலிருந்து (Lesser Himalayas) டூன்களால் (டூன்கள் என்பவை நீண்ட, குறுகிய புனலுடைய, வண்டல் படிவுகளால் நிரப்பப்பட்ட பள்ளத்தாக்குகள்) பிரிக்கப்படுகின்றன. இத்தகைய டூன்கள் மேற்கு இமயமலைப்பகுதிகளில் டூன் பள்ளத்தாக்குகள் எனப்படுகின்றன. டேராடூன் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்

2) தாழ்ந்த இமயமலைகள் அல்லது நடுத்தர இமயமலைகள் அல்லது ஹிமாச்சல் (The Lesser or Middle Himalayas or The Himachal)

1500 முதல் 5000 மீ உயரம் வரையிலும், 60 முதல் 80 கிமீ அகலத்துடனும் ஹிமாச்சல் தொடர் காணப்படுகிறது. இதில் பீர் பாஞ்சல் (Pir Panjal), தௌலதார் (Dhaula-dhar), நாக்-டிப்பா (Nag-Tibba), முசௌரி (Mussoorie) and மகாபாரத தொடர்கள் (Mahabharat range, Nepal) ஆகிய தொடர்கள் அமைந்துள்ளன. பீர் பாஞ்சல் தொடர்கள் (சுமார் 400 கிமீ நீளத்துடன்) ஜீலம் (Jhelum) மற்றும் பியாஸ் (Beas) நதிகளுக்கிடையில் அமைந்துள்ளது. சிம்லா, முசெளரி, நைனிடால் ஆகிய கோடை வாழிடங்கள் இமாச்சல் மலைகளில் அமைந்துள்ளன. இமாச்சல் தொடர் இமயமலைகளின் வடக்கில் நீண்ட பள்ளத்தாக்குகள் அமைந்து ஹிமாத்ரி இமயமலைத் தொடர்களிலிருந்து பிரிக்கின்றன. இங்கு தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு, காங்க்ரா பள்ளத்தாக்கு, குலு பள்ளத்தாக்கு போன்ற பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. 

3) பெரிய இமயமலை அல்லது ஹிமாத்ரி (The Greater Himalayas or The Himadri)

ஹிமம் என்றால் பனி மூடிய என்று பொருள். முற்றிலும் இத்தொடர் பனியால் மூடப்பட்டிருப்பதால் ஹிமாத்ரி எனப்படுகிறது. உலகின் மிக உயர்ந்த மலைத் தொடர் இதுவே ஆகும். இதன் சராசரி உயரம் சுமார் 6000 மீ. இதன் அகலம் சுமார் 120 முதல் 190 கிமீ வரையிலாகும். இமயமலைத் தொடர்களில் தொடர்ச்சி மிக்க (Most continuous) தொடர்கள் ஹிமாத்ரி தொடர்களே ஆகும்.

இதில் தான் உலகின் உயர்ந்த சிகரங்களான எவரெஸ்ட் (Mt. Everest - 8848 மீ), மகாலு (Makalu - 8481 மீ), தௌலகிரி (Dhaulagiri - 8172 மீ), அன்னபூர்ணா (Annapurna - 8078 மீ), கன்சென்ஜுங்கா (Kanchenjunga - 8598 மீ) and நங்க பர்வதம் (Nanga Parbat - 8126 மீ) ஆகியவை அமைந்துள்ளன. இவை தவிர in Himachal Pradesh (Shipki La Pass and Bara Lapcha La Pass), in Kashmir (Burzil Pass and Zoji La Pass), in Uttar Pradesh (Niti La Pass, Lipu Lekh Pass and Thag La Pass), and in Sikkim (Jelep La Pass and Nathu La Pass) போன்ற பல முக்கிய கணவாய்களும் இத்தொடர்களில் அமைந்துள்ளன. இக்கணவாய்கள் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவிற்கு உள்ள எல்லைப் பிரச்னைகளில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. இத்தொடர்களில் சுமார் 40 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவிற்கு பனியாறுகள் (Glaciers) அமைந்துள்ளன.

ஹிமாத்ரி தொடர்கள் பழங்காலத்தில் Granite மற்றும் Gneiss பாறைகளால் ஆனவை என்றாலும், பிற்காலத்தில் இதன் சரிவுகளில் படிவுப்பாறைகளும் (Sedimentary rocks) அமையப்பெற்றுள்ளன. இமயமலைத் தொடர்களின் வடமேற்கில் சிந்துப்பகுதியை நோக்கியும், வடகிழக்கில் பிரம்மபுத்திரா பகுதியை நோக்கியும் அமைந்ததொடர்களின் வளைவினை 'SYNTAXIAL BEND' என்பர். இந்த வளைவுப் பகுதிக்கு அப்பால் காணப்படும் மலைத் தொடர்கள் இமயமலைகளாகக் கருதப்படுவதில்லை

4) டிரான்ஸ் இமயமலைகள் (The Trans-Himalayas)

இத்தொடர்கள் ஹிமாத்ரி தொடர்களுக்கு வடக்காகக் காணப்படுகிறது. இதில் தான் லடாக், காரகோரம் போன்ற தொடர்கள் உள்ளன. காரகோரம் மலைத்தொடர், மேற்கில் பாமீர் முடிச்சிலிருந்து (Pamir Knot) கிழக்கில் கைலாஷ் தொடர் வரை தொடர்ந்து அமைந்துள்ளது. இத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் K2 அல்லது காட்வின் ஆஸ்டின் (Godwin Austin - 8611 மீ) ஆகும். இவைதவிர Hidden Peak, Broad Peak and Gasherbrum-II ஆகிய சிகரங்களும் உள்ளன. Nubra Valley-ல் உள்ள சியாச்சின் பனியாறு (Glacier) இமயமலைகளில் மிக நீண்ட பனியாறு (75 கிமீ) ஆகும். இவை தவிர Biafo (59 கிமீ), Baltaro (58 கிமீ), Batura and Hispar (62 கிமீ) ஆகிய பனியாறுகளும் உள்ளன. 

பூர்வாஞ்சல் (Purvanchal)

வடகிழக்கின் விளிம்பில் இமயமலைகள் வடக்கு-தெற்காக திசை மாற்றம் அடையும் வளைவின் கிழக்கு விளிம்பில் உள்ள தொடர்கள் பூர்வாஞ்சல் எனப்படும். பூர்வாஞ்சல் குன்றுகள் Arunachal Pradesh, Nagaland, Manipur, Mizoram, Tripura and Eastern Assam ஆகிய பகுதிகளில் ஊடுருவியவாறு அமைந்துள்ளது. பூர்வாஞ்சல் குன்றுகளின் மிக உயர்ந்த பகுதி Mishmi Hills (அருணாச்சலப் பிரதேசத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது) ஆகும். மணிப்பூர் குன்றுகளில் லோக்தக் (Loktak) ஏரி அமைந்துள்ளது.

பூர்வாஞ்சல் தொடர்கள் வடக்கில் பட்கோயில் (Patkoil) மற்றும் நங்கா பர்வதத்தையும் (Nanga hills),  தெற்கில் லுஷாய் (Lushai) மற்றும் மிசோ மலைகளையும் (Mizo hills), மேகாலாயாவில் Garo, Kahsi, Jaintia hills ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இக்குன்றுகளிலும் படிவுகள் காரணமாக, இமயமலைகள் தோன்றிய காலத்திலேயே சற்றே உயர்த்தப்பட்டன. இவை இமயமலைகளின் கிழக்கு விளிம்புகள் எனப்படுகின்றன. இமய மலைகளின் மேற்கு விளிம்பில் Sulaiman, Kirthar ranges, Salt ranges, மற்றும் கைபர் & போலன் (Khyber and Bolan) கணவாய்கள் உள்ளன.

பொதுவாக இமயமலைகள் திசைகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன :- 
  1. மேற்கு இமயமலைத் தொடர்கள் (Western Himalayas)
  2. மத்திய இமயமலைத் தொடர்கள் (Central Himalayas)
  3. கிழக்கு இமயமலைத் தொடர்கள் (Eastern Himalayas)

மேற்கு இமயமலைத் தொடர்கள் (Western Himalayas) 

இது காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மலைப்பகுதிகள் அடங்கியவற்றை உள்ளடக்கியதாகும். 

மத்திய இமயமலைத் தொடர் (Central Himalayas) 

இது Kumaon Himalayas (உத்திரப்பிரதேசம்) மற்றும் எவெரெஸ்ட் சிகரம் போன்றவற்றை உள்ளிட்ட நேபாளத்துடன் அடங்கியதாகும். பாகீரதி (Bhagirathi), கங்கை (Ganga), மற்றும் யமுனை (Yamuna) போன்ற ஆறுகளின் தோற்றமும் உற்பத்தியாகும் இடம் குமாவோன் இமயமலைப்பகுதியே (Kumaon Himalayas) ஆகும். மேலும் பல புனித ஸ்தலங்களான (Pilgrim centres) பத்ரிநாத் (Badrinath), கேதர்நாத் (Kedarnath), கங்கோத்ரி (Gangotri), யமுனோத்ரி (Yamunotri) போன்ற இடங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன. 

கிழக்கு இமயமலைகள் (Eastern Himalayas)

கிழக்கு இமயமலைகள் (Eastern Himalayas) என்பவை மேற்கு வங்காளம், சிக்கிம், பூடான், அருணாச்சல பிரதேசம் போன்றவற்றின் மலைப்பகுதிகளை அடக்கியதாகும்.

இமயமலைத் தொடர்கள் இந்திய நில எல்லைப்பகுதிகளுக்கு அப்பாலும் பரவியுள்ளது. மேலும் உலகின் இளம் மடிப்பு மலையாக (Youngest fold mountains) பெயர் பெற்றுள்ளது.



இமயமலைப் தொடர்களை கிழக்கு-மேற்காக, அல்லது படுக்கை வாக்கில் (Longitudinally) 5 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன :
  1. காஷ்மீர் இமயமலைகள் (Kashmir Himalayas)
  2. பஞ்சாப் இமயமலைகள் (Punjab Himalayas)
  3. குமாயோன் இமயமலைகள் (Kumaon Himalays)
  4. மத்திய இமயமலைகள் (Central Himalayas)
  5. அஸ்ஸாம் இமயமலைகள் (Assam Himalayas)

1) காஷ்மீர் இமயமலைகள் (Kashmir Himalayas)

இவற்றின் சராசரி உயரம் 3000 மீட்டர் ஆகும். காஷ்மீர் இமயமலைப்பகுதி அதிக அளவில் பனியாறுகளைக் கொண்டுள்ளது. பீர் பாஞ்சால் தொடர்களில் Banihal மற்றும் Pirpanjal என்ற இரண்டு கணவாய்கள் உள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு இப்பகுதியில் அமைந்துள்ளது. 

2) பஞ்சாப் இமயமலைகள் (Punjab Himalayas)

மிக உயர்ந்த குன்றுகள் (peaks) இங்கு அரிதாகவே காணப்படுகின்றன. மானசரோவர் ஏரி (Mansarovar), ராகாஸ் ஏரி (Rakas) போன்ற ஏரிகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. பஞ்சாப் இமயலைப் பகுதிகளில் முக்கிய கணவாய்களான (Passes) ஜோசில்லா (Zojila) கணவாய், ரோடங்க் (Rohtang) கணவாய், Bara Lapcha கணவாய் போன்றவையும், காங்ரா (Kangra), Lahaul, Spiti ஆகிய பள்ளத்தாக்குகளும் (Valleys) அமைந்துள்ளன. தோட்டக் கலை மற்றும் காட்சியழகின் அடிப்படையில் பஞ்சாப் இமயமலை முக்கியத்துவம் பெறுகிறது.

3) குமாயோன் இமயமலைகள் (Kumaon Himalays)

குமாயோன் இமயமலைகள் சட்லெஜ் (Sutlej) ஆற்றுப் பள்ளத்தாக்கு முதல் காளி (Kali) ஆற்றுப் பள்ளத்தாக்கு வரையில் நைனிடால் (Naini Tal), Bhim Tal போன்ற 360 ஏரிகளுடன் காணப்படுகிறது. பத்ரிநாத், கங்கோத்ரி போன்ற இந்துக்களுக்கான புனித யாத்ரீக ஸ்தலங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன. நந்தா தேவிக் குன்றுகள் (Nanda Devi, 7816 மீ) இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். 

4) மத்திய இமயமலைகள் (Central Himalayas)

இப்பகுதி காளி (Kali) ஆறு முதல் தீஸ்தா (Tista) ஆறு வரை பரவியுள்ளது. அத்துடன் எவரெஸ்ட் போன்ற உலகின் மிக உயர்ந்த சிகரங்களையும் கொண்டு விளங்குகிறது. இப்பகுதி சிக்கிம் இமயமலைகள், டார்ஜிலிங் இமயமலைகள் மற்றும் பூட்டான் இமயமலைகள் என மேலும் சில பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

5) அஸ்ஸாம் இமயமலைகள் (Assam Himalayas)

இப்பகுதி தீஸ்தா (Tista) ஆறு முதல் பிரம்மபுத்திரா (Brahmaputra) ஆறு வரையில் அமைந்துள்ள இமயமலைப்பகுதியாகும். இப்பகுதியில் Pauhunri மற்றும் Kulhakakangai ஆகியவை குறிப்பிடத்தகுந்த சிகரங்களாகும். இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையில் நாகா மற்றும் பட்காய் பம் (Patkai Bum) குன்றுகள் காணப்படுகின்றன.