Ads Here

22 ஜனவரி, 2019

உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் (Fertilizers, Pesticides, Insecticides)

உரங்கள் (Fertilizers)

  • தாவரங்களின் வளர்ச்சிக்கு சுமார் 16 தனிமங்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
    • பெரும ஊட்டத்தனிமங்கள் ( Macro Nutrients) - கார்பன் (C), ஹைட்ரஜன் (H), ஆக்சிஜன் (O), நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K), சல்பர் (S), கால்சியம் (Ca), மெக்னீசியம்(Mg)
      • தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான முதல்நிலை ஊட்டப்பொருட்கள் - 
      • N, P, K.
      • நைட்ரஜன் (N)
        • தாவரங்கள் விரைந்து வளர்ச்சியடைய,
        • அதிக மகசூலை தர,
        • தாவரப்பொருளில் புரோட்டின் அளவை அதாவது, அமினோ அமில அளவை அதிகரிக்க,
        • தாவரங்களுக்கு அடர்பச்சை நிறம் தர
        • நைட்ரஜன் குறைப்பாட்டால் தாவரங்களில் ஏற்படும் நோய் - குளோரஸிஸ்
      • பாஸ்பரஸ் (P)
        • தாவரங்கள் விரைந்து முதிர்ச்சியடைய - ஊட்டப்பொருட்களின் இடப்பெயர்ச்சி,
        • நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது - ஆற்றல் மாற்றம்,
        • இனவிருத்தி பகுதிகள வளர்ச்சியடைய - மரபுப் பொருட்கள் கடத்தப்படல்.
      • பொட்டாசியம் (K)
        • வேதிப்போக்குவரத்து காவலராக,
          • நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இடப்பெயர்ச்சிக்கும் தாவரங்கள் குளிர்ச்சியடையவும் உதவுகிறது.
          • சைலக்குழாய்களில் நீர் மற்றும் நைட்ரேட், பாஸ்பேட், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டப்பொருட்கள் கடத்துதலுக்கும் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
          • நொதிகள் செயல்பாட்டிற்கு உகந்ததான PH  ஐ 7 - 8 வரை நலையாக இருக்க உதவுகிறது.
        • வேர்ப்பகுதி ஆரோக்கியமாக இருக்க,
          • வேர் வளர்ச்சியைத் தூண்டி, வறட்சியைத் தாக்குபிடிக்கும் தன்மையை செடிகளுக்கு அளிக்கிறது.
        • கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அல்பினாய்டுகளைத் தயாரிக்க.
          • காய்கறிகள் மற்றும் கனிகளின் தரத்தினை உயர்த்தி அவை நீண்ட நாள் கெடாமலிருக்க உதவுகிறது.
        • ஒளிச்சேர்க்கைக்கு உதவும் இலைத்துளைகள் திறத்தல் மற்றும் மூடுதலை கட்டுப்படுத்துகிறது.
    • நுண் ஊட்டத்தனிமங்கள் (Micro Nutrients ) - இரும்பு (Fe), மாங்கனீசு (Mn), மாலிப்டினம் (Mo), துத்தநாகம் (Zn), போரான் (B) & குளோரின்(Cl)
  • யூட்ரோபிகேஷன் (Eutrophication)
    • நீரில் அதிகப்படியான உரச் சத்துக்கள் கலப்பதன் காரணமாக, நீரின் மேற்பரப்பில் அதிகளவு " ஆல்காக்கள் " வளர்ந்து (Algae Bloom - ஆல்கா மலர்ச்சி), நீர்வாழ் விலங்குகள் மடிந்துவிடும் நிலை
      • எ.கா.: கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு
    • இதனை தடுக்க, உயிரியல் தீர்வு முறையின்மூலம் அதிகப்படியான நைட்ரஜனை நைட்ரேட்டுகளாக மாற்றிவிடலாம்.

உரங்களின் வகைகள்

  • இயற்கை உரங்கள்
    • எ.கா.: 
      • மக்கிய உரம்
      • மண்புழு தொழு உரம்
      • பசுந்தாள் உரம்
        • சணல் (குரோட்டலேரியா ஜெனிஸியா), கொழிஞ்சி, தக்கைப்பூண்டு & லெகூமினஸ் தாவரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது
        • கிளைரிஸிடியா, இண்டிகோஃபெரா, செஸ்பேனியா போன்ற பயிறு வகை தாவரங்கள் பயன்படுகின்றன.
  • செயற்கை உரங்கள்
    • நைட்ரஜன் உரங்கள் (தழைச் சத்து)
      • எ.கா.: 
        • யூரியா (அ) கார்பமைடு (Carbamide - (NH2)2 CO)
        • அம்மோனியம் சல்பேட் ((NH4)2 SO4)
        • சோடியம் நைட்ரேட் ( Na NO3 )
        • கால்சியம் நைட்ரேட் ( Ca (NO3)2 )
        • கால்சியம் சயனமைடு
    • பாஸ்பரஸ் உரங்கள் (கனிம சத்து)
      • எ.கா.:
        • தனி சூப்பர் பாஸ்பேட்
        • டை கால்சியம் பாஸ்பேட் (கால்சியம் சூப்பர் பாஸ்பேட் - Ca(H2PO4)2・H2O )
          • இது " சுண்ணாம்பின் சூப்பர் பாஸ்பேட் " என்றும் அழைக்கப்படுகிறது.
          • இதில் வினைபுரியக்கூடிய பகுதிப்பொபொருள் கால்சியம் - டை - ஹைட்ரஜன் பாஸ்பேட்டாகும்.
        • டிரிப்பிள் சூப்பர் பாஸ்பேட் (மும்மை சூப்பர் பாஸ்பேட்)
        • பாறை பாஸ்பேட்
        • எலும்புத்துகள்
    • பொட்டாஷ் உரங்கள்
      • எ.கா.:
        • பொட்டாசியம் நைட்ரேட் (KNO3)
          • இது "நைட்டர் உப்பு" எனவும் அழைக்கப்படுகிறது.
          • பொட்டாசியம் குளோரைடு (KCl), சோடியம் நைட்ரேட்டுடன் (NaNO3) வினைபுரிந்து பொட்டாசியம் நைட்ரேட்டை தருகிறது.
          • இது புகையிலை, பருத்தி, காபி, உருளைக்கிழங்கு & மக்காச்சோளம் போன்றவற்றிற்கு அவசியமாகும்
        • பொட்டாசியம் குளோரைடு ( KCl )
        • பொட்டாசியம் மூரியேட்
        • பொட்டாசியம் சல்பேட்
    • கலப்பு உரங்கள்
      • எ.கா.:
        • நைட்ரோ பாஸ்பேட்
        • அம்மோனியம் நைட்ரேட் (NH4 NO3)
          • இதிலுள்ள 24 - 25 % அம்மோனியாவை மண்ணிலுள்ள நைட்ரஜனாக்கும் பாக்டீரியா, நைட்ரேட்டாக மாற்றுகிறது.
          • இது நெல், உருளைக்கிழங்கு போன்றவற்றிற்கு ஏற்றது.
        • CAN (கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்)
          • இது நேரடியாக தாவரங்களால் உறிஞ்சப்படுகிறது.
          • நிலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்துவதில்லை.
        • அம்மோனியம் பாஸ்பேட் ((NH4)3 PO4)
        • DAP உரம் (டை அம்மோனியம் பாஸ்பேட்)
  • உயிரி - உரங்கள்
    • உயிருள்ளவற்றிலிருந்து பெறப்படும் உரங்கள்.
    • இவை பாக்டீரியா, நீலப்பசும்பாசியினங்கள் (சயனோ பாக்டீரியங்கள்) & பூஞ்சைகள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.
    • உயிரி உரமாக பாக்டீரியங்கள் (நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியங்கள் )
      • அசிட்டோபாக்டர், ரைசோபியம்
    • உயிரி உரமாக பாசிகள்
      • நீலப்பசும்பாசிகள் (சயனோ பாக்டீரியங்கள்)
        • அனபீனா, நாஸ்டாக், அஸோஸ்பைபைரில்லம், பாஸ்போ பாக்டீரியா
      • சிலிண்ட்ரோஸ்பெர்மம், ப்ளேக்டோ நீமா, டோலிபோத்ரிகஸ் 
    • உயிரி உரமாக வேர்ப்பூஞ்சைகள் ( மைக்கோரைசா வேர்கள் )
      • நிலத்தில் கரையா நிலையிலுள்ள ஊட்டப்பொருளை கரையும் நிலைக்கு மாற்றுவதற்கு உதவுகிறது.

யூரியா 

  • கார்பமைடு (Carbamide) 
  • 90 - 95% கந்தக அமில முன்னிலையில், அம்மோனியாவை நாஃப்தாவிலிருந்து வெளியேறும் CO2 உடன் 135 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 10 - 30 atm  அழுத்தத்தில்  வினைக்குட்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
  • மூலக்கூறு வாய்ப்பாடு : (NH2)2 CO
  • யூரியாவில் 46.66 % நைட்ரஜனைக் கொண்டுள்ளது.
  • இது நிலத்தின் PH  மதிப்பினை மாற்றுவதில்லை.

தீங்குயிர்க்கொல்லிகள் (Pesticides)

பூஞ்சைக்கொல்லிகள் (Fungicides)

  • எ.கா.: போர்டாக்ஸ் கலவை

போர்டாக்ஸ் கலவை (Bordeaux Mixture)

  • போர்டாக்ஸ் கலவை
    • 2.24 கிலோ மயில்துத்தம் (அ) காப்பர்(II) சல்பேட் ( Copper(II) Sulphate - CuSO4 )
    • 2.24 கிலோ சுட்டச் சுண்ணாம்பு (Slaked Lime (Ca(OH)2 )
    • 50 காலன் தண்ணீர்
  • இது மரங்களில் ஏற்படும் காயங்களின் மூலம், நோய் பரவாமல் தடுக்க உதவும் ஒரு தாமிர பூசணக் கொல்லியாகும்.

களைக்கொல்லிகள் (Herbicides)

  • பயிர்களில் தேவையற்ற களைச்செடிகளை நீக்குவதற்கு
  • எ.கா.: 
    • டாலபோன் (Dalapon) - ‎C3H4Cl2O2
    • மெடோலாக்ளோர் (Metolachlor)
    • 2,4-D  ( 2,4 - டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் - 2,4-Dichloro phenoxy acetic acid) - C8H6Cl2O3
    • பிற - Aminopyralid, Atrazine, Clopyralid, Dicamba, Glufosinate ammonium. 

எலிக்கொல்லிகள் (Rodenticides)

  • Rodents - கொறிப்பான்கள் - வீட்டெலி, வயலெலி, சுண்டெலி, அணில்கள், பிரெய்ரி நாய்கள், முள்ளம்பன்றிகள், நீரெலிகள் (Beavers), கினியா பன்றிகள். மூங்கில் அணத்தான்கள், காபிபராக்கள், ஆம்சுட்டர்கள் (Hamsters), கெருபிகள் (Gerbils)
  • கொறிக்கும் விலங்குகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருள்கள்
  • எ.கா.: 
    • துத்தநாகப் பாஸ்பேட் (Zinc Phosphate - (Zn3(PO4)2) )
    • ஆர்சனிக் (Arsenic - As - atomic number 33 - பாஸ்பரஸ் குடும்பத் தனிமம்)

பூச்சிக்கொல்லிகள் (Insecticides)

பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள்

  • அலிஃபாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்
  • அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்
  • பாஸ்பரஸ் அதன் வழிப்பொருட்கள்
  • குளோரின் போன்ற ஹேலஜன்கள்

பூச்சிக்கொல்லிகலின் வகைகள்

  •  குளோரின் சேர்ந்த பூச்சிக்கொல்லிகள்
    • எ.கா.: DDT, BHC
  • பாஸ்பரஸ் சேர்ந்த பூச்சிக்கொல்லிகள்.
    • எ.கா.: பாராதையான்

DDT (டைகுளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன் - Di-chloro Di-phenyl Tri-chloro Ethane)

  • இதனை முதன்முதலில் தயாரித்தவர் ஜெய்ட்லர். ஆனால் இதன் பூச்சிக்கொல்லி பண்பை கண்டறிந்தவர் பால்முன்னர்.
  • கந்தக அமிலத்தின் முன்னிலையில், குளோரோ பென்சீனை (C6H5Cl) குளோராலுடன் (Cl3C-CHOட்ரைகுளோரோ அசிட்டால்டிஹைடு) குறுக்கவினைக்குட்படுத்தி (condensation) DDT தயாரிக்கப்படுகிறது.
  • மூலக்கூறு வாய்பாடு : 2C6H5Cl - CH - CCl3
  • கரிம குளோரின் பூச்சிக்கொல்லி
  • IUPAC பெயர் : 2,2-பிஸ் ( பாரா குளோரோபினைல் ) - 1,1,1-ட்ரைகுளோரோ ஈத்தேன்
  • நன்மைகள்
    • இது ஒரு வலிமைமிக்க பூச்சிக்கொல்லி - கொசுக்கள், ஈக்கள், பயிர்களை அழிக்கும் உயிரினங்களை கொல்லும் 
    • இது மலேரியாவை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது
  • தீமைகள்
    • இது மனித இனத்திற்கும் (சிறுநீரக கல் உருவாவதற்கு), பறவைகளுக்கும் (அவற்றின் முட்டையின் தோல் மெலிந்து, கரு அழிந்துபோவதற்கு), மீனினங்களுக்கும் நச்சுத்தன்மையுடையது. இவ்வாறு, உயிரிகளின் உடல்திசுக்களில் DDT  கலப்பதற்கு 'உயிரியல் உருப்பெருக்கம் (Biomagnification)' என்றுபெயர். 
    • இதனை அதிகளவில் பயன்படுத்தினால் உயிரியல் சிதைவுக்கு உள்ளாகாது.

BHC ( பென்சீன் ஹெக்ஸா குளோரைடு - Benzene Hexa-Chloride)

  • இது காம்மெக்ஸேன் அல்லது லிண்டேன் அல்லது HCB (Hexa-Chloro Benzene) எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, இது வியாபார ரீதியில்  BHC எனப்படுகிறது.
  • புற ஊதாக்கதிர்களின் முன்னிலையில். பென்சீனை  குளோரினுடன் வினைக்குட்படுத்தி BHC தயாரிக்கப்படுகிறது.
  • மூலக்கூறு வாய்பாடு : C6Cl6
  • இதன் பூச்சிக்கொல்லித் தன்மை அதிலுள்ள காமா அமைப்பினால் ஏற்படுகிறது. இந்த காமா அமைப்பின் ஐசோமரின் பெயர் தான் லிண்டேன் அல்லது காமெக்ஸேன் எனப்படுகிறது.

பூச்சிக்கொல்லிகள் - பிற குறிப்புகள் :

  • வேரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் பூச்சிக்கொல்லி குளோரோபைரிபாஸ் (Chlorpyrifos - CPS).
  • தண்டையும், இலையையும் கடித்துத்துளைக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள்
    • மாலத்தியான் (Malathion)
    • லிண்டேன் (Lindane)
    • தையோடான் (அதாவது) எண்டோசல்ஃபன் (Thiodan (aka) Endosulfan)
  • சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள்
    • டை மீத்தோயேட் (Di-Methoate)
    • மெட்டாசிஸ்டாக்ஸ் (Metasystox)