Ads Here

22 ஜனவரி, 2019

தமிழ் இலக்கணம்


பொருத்துதல் : பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

  • ஏதிலார் - அயலவர்
  • கதழ்வு - சினம்
  • கிழமை - உரிமை
  • தானை - சேனை
  • பீழை - பழி
  • பூரியார் - இழிந்தவர்
  • வலன் - வலிமை
  • விழுப்பம் - சிறப்பு 

பொருத்துதல் : புகழ் பெற்ற நூல் - நூலாசிரியர்

  • திருப்புகழ் - அருணகிரிநாதர் 
  • மூதுரை - ஔவையார்

தொடரும் தொடர்பும் அறிதல் : தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்

  • தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்

தொடரும் தொடர்பும் அறிதல் : அடைமொழியால் குறிக்கப்படும் நூல்

  • மணநூல் - சீவக சிந்தாமணி

பிரித்தெழுதுக

  • கலந்தீமை - கலம் + தீமை 
  • தேமதுரம் - தேன் + மதுரம் 
  • பைந்தமிழ் - பசுமை + தமிழ் 
  • வெவ்விறகு - வெ + விறகு 

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

  • ஓடுமீன் X உறுமீன் 
  • நல்லார் X அல்லார் 
  • பகட்டு X எளிமை 

பொருந்தாச் சொல்லைக் கண்டுபிடித்தல்


  • தத்தை, கிள்ளை, மயில், சுகம்
  • மலரும் மாலையும், ஆசியஜோதி, குடும்பவிளக்கு, குழந்தைச் செல்வம்

பிழைத்திருத்தம் : சந்திப்பிழையை நீக்குதல்


  • திரு.வி.க. பெண்களைப் போற்றினார்.

பிழைத்திருத்தம் : ஒருமை, பன்மை பிழைகளை நீக்குதல்


  • யானைகள் கூட்டமாக நின்றன.

பிழைத்திருத்தம் : மரபுப் பிழைகள், வழூவுச் சொற்களை நீக்குதல்


  • காட்டில் ஆந்தை அலறியது.

பிழைத்திருத்தம் : பிறமொழிச் சொற்களை நீக்குதல்


  • பெண்கள் கோயிலில் விளக்கு ஏற்றினர்.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்


  • Accident - நேர்ச்சி
  • Platform - நடை மேடை
  • Video Cassette - ஒளிப் பேழை

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்


  • இனம் - நீர்நிலை
  • உடல் உறுப்பு - கட்டு
  • தீ - வீசு
  • நகர் - வெளி
  • பார் - காடு

ஓரெழுத்து ஒரு மொழி - உரிய பொருளைக் கண்டறிதல்


  • ஊ - இறைச்சி
  • தா - கொடு
  • பே - அச்சம்
  • மோ - முகர்தல்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்


  • ‘பிளந்தான்’ என்னும் வினைமுற்றின் வேர்ச்சொல் - பிள
  • ‘எடுத்தான்’ என்னும் வினைமுற்றின் வேர்ச்சொல் - எடு
  • ‘தந்தான்’ என்னும் வினைமுற்றின் வேர்ச்சொல் - தா
  • ‘கற்றவன்’ என்னும் வினையாலணையும் பெயரின் வேர்ச்சொல் - கல்

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்


  • ‘நில்’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று - நின்றான்
  • ‘காண்’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று - கண்டான்
  • ‘வெல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் - வென்று
  • ‘அறி’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - அறிந்தவன்
  • ‘சுடு’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் - சுடுதல்

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்


  • கடல், தந்தம், பட்டம், மனிதன்

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்


  • இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
  • உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
  • பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்

  • கண் - சினைப்பெயர்
  • மணி - காலப்பெயர்
  • தஞ்சை - இடப்பெயர்
  • பசு - பொருட்பெயர்
  • நடித்தல் - தொழிற்பெயர்

இலக்கணக் குறிப்பறிதல்


  • தொடுகுழி - வினைத்தொகை
  • தானம் தவம் - உம்மைத்தொகை
  • தொழுது - வினையெச்சம்
  • கடிந்த - பெயரெச்சம்
  • சொலல் - இடைக்குறை

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்


  • கலம்பகம் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.
கலம்பகம் எவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தது ?
  • தென்காசிக்குச் செல்லும் வழி இது.
தென்காசிக்கு செல்லும் வழி யாது?
  • தேர்வுக்குப் படிக்காமல் இருப்பேனா ?
தேர்வுக்குப் படித்தாயா?


எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்


  • வீரன் யானையைக் கொன்றான். - தனி வாக்கியம்
  • நீ நன்றாகப் படி. - கட்டளை வாக்கியம்
  • என்னே தமிழின் இனிமை ! - உணர்ச்சி வாக்கியம்

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

  • செல்வன் பாடம் கற்றான். - தன்வினை வாக்கியம்
  • கயல்விழி திருக்குறளைப் பயிற்றுவித்தாள். - பிறவினை வாக்கியம்
  • நான் திருக்குறளைக் கற்றேன். - செய்வினை வாக்கியம்
  • நாடகம் மக்களால் பார்க்கப்பட்டது. - செயப்பாட்டு வினை வாக்கியம்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்


  • அனலில் விழுந்த புழுப்போல - துடித்தல்
  • இலவு காத்த கிளி போல - ஏமாற்றம்
  • மடை திறந்த வெள்ளப் போல - விரைவு
  • மதில் மேல் பூனை போல - நிச்சயம் இல்லாத நிலை

மோனை, எதுகை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக


  • மோனை : ப்பிலா - ண்பதே
  • எதுகை : தீவை - பத்தலால்
  • இயைபு : வாழ்வதோ - வாழ்வதோ