Ads Here

11 மார்ச், 2020

டொரண்ட் (Torrent) வலைத்தளங்கள் எவ்வாறு இயங்குகின்றன?

   ஒரு கோப்பை நீங்கள் மற்றவருக்கு டொரண்ட் மூலமாக பகிர விரும்பினால், அவ்வளைத்தளத்திற்கு சென்று அந்த கோப்பினை பதிவேற்றம் செய்து விடுங்கள். அது உங்கள் கோப்பை குறியீடாக்கம் செய்து, தனித்தனி துண்டுகளாகப் பிரித்து, அத்துண்டுகளின் MD5 Hash முகவரிகளை உள்ளடக்கிய legalthing என்ற iso கோப்பாக மாற்றிவிடும். இந்த பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டி, மூலக்கோப்பினை அழிக்கவோ, மாற்றவோ நடைமுறைச் சாத்தியம் இல்லை.
   இதன்பிறகு announce என்று குறியிட்ட UDB அல்லது TCP நெறிமுறைகள் அல்லது வளைத்தள முகவரிகளைக் கொண்ட டொரண்ட் Trackerகளைக் கொண்ட ஒரு சிறு டொரண்ட் கோப்பாக மாற்றித்தந்து விடும்.
   இந்த டொரண்ட் கோப்பினை பயன்படுத்தி நீங்கள் இரு வழிகளில் அந்த கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். (1) Trackersகளில் இருந்தோ அல்லது (2) Seeders அல்லது peersகளில் இருந்தோ.
   இயல்பாக டொரண்டை பதிவிறக்கம் செய்யும் போது, பகுதிகள் ஒவ்வொன்றும் வரிசையாக பதிவிறங்காது. காரணம், பளு தான். 

   மேலும், சில டொரண்ட் வார்த்தைகளை புரிந்து கொள்ளுங்கள் :

Seedrs 

டொரண்ட்டின் முழு பகுதிகளையும் வைத்துக்கொண்டு, அதனை மற்றவர்களிடமும் பகிர்ந்தளிப்பவர்கள். இவர்களில் ஒருவராவது ஆன்லைனிற்கு வந்தால் மட்டுமே, கோப்பின் Availabilityஐ சரிபார்த்துக்கொண்டு, பதிவிறக்கத்தை தொடங்குங்கள். இல்லையெனில் நேரம்தான் வீண்.

Peers

டொரண்ட்டின் ஒரு சில பகுதிகளை மட்டுமே வைத்துக்கொண்டும், உங்களுடன் சேர்ந்து பதிவிறக்கம் செய்துகொண்டும், மற்றவர்களிடம் இல்லாத டொரண்ட்டின் பகுதிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்தளிப்பவர்கள்.

Availability

இது டொரண்ட் கோப்பின் நகல் நிகழ்நேரத்தில் எத்தனை இருக்கிறது என சொல்லும். இது நிகழ்நேரத்தில் இருக்கும் seedrsகளைப் பொறுத்தது. இதன் மதிப்பு 1 எனும் போதுதான் (அவர் இணைப்பில் உள்ள வரை மட்டுமே) அந்த கோப்பின் முழு பகுதிகளையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஒன்றுக்கும் கீழிருந்தால் நேரம்தான் வீண். அதிகபட்சம் 30 நகல்களை டொரண்ட் வாடிக்கையாளர் வழங்குவார்.

Trackers

இத்தடங்கள் https, udp, tcp ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு வகையாக இருக்கலாம். ஆனால் டொரண்ட் நன்றாக பதிவிறங்க இவை உயிர்ப்புடன் இருப்பவைகளாக இருத்தல் வேண்டும். இதற்காக working trackersகளை தேடிக்கண்டுபிடித்து, டொரண்டுடன் சேர்த்து விடுங்கள்.

Download Priority

ஒரு டொரண்டில் பல கோப்புகள் உள்ளதென்க. எல்லாவற்றையும் மொத்தமாக ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்வதைவிட 100 சதவீதம் Availability கொண்ட கோப்பை முதலில் பதிவிறக்கம் செய்வதுதானே சாமர்த்தியம். மேலும் seedrsகள் கூட எப்போதும் ஆன்லைனில் இருக்கமாட்டார்கள் தானே. அதனால் தான் Maximum Download Priority (அதிகபட்ச பதிவிறக்க முன்னுரிமை) கொடுத்துவிட்டால் அது அல்லது அந்த குறிப்பிட்ட சிறு பகுதி முதலில் பதிவிறக்கமாகிவிடும்.

   மேலும் சட்டரீதியற்ற டொரண்ட்களைப் பதிவிறக்கும்போது, பாதுகாப்பான VPNகளைப் பயன்படுத்தினால் உங்கள் ISP (Internet Service Provider) உங்களை கண்டறியவியலாது.
*****
ஒரு கருத்தை வேற்றுமொழியில் படிச்சா அரைமணி நேரம் ஆகுமெனில், தாய்மொழியில் தெரிந்து கொள்ள அஞ்சு நிமிஷமே போதுமாம். 
மேலும், இப்படி பயின்றால்தான் யார் உதவியுமின்றி, தாய்மொழியை தட்டுத்தடுமாறி பேசவே, வார்த்தைகள் வருமாம்.