Ads Here

17 ஜூன், 2022

புவிப் பழங்காலங்களின் அட்டவணை (Geological Time Scale)

புவிப் பழங்காலங்களின் அட்டவணை 

    பூமியின் மிகப் பழமையான கற்களின் வயது 3.8 பில்லியன் (3800 மில்லியன்) ஆண்டுகளாகும். இது 38,000,000 நூற்றாண்டுகளுக்குச் சமம். நிலப் பொதியியலார், புவியியலார் ஆகியோரது எண்ணத்தின் படி நாம் வாழும் பூமியானது 4.7 பில்லியன் (4,700 மில்லியன்) ஆண்டுகட்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும். 

    இத்தகைய மிகப்பழமையான கால அளவில் முதல் உயிர் 2.5 பில்லியன் (2500 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இதனால் பூமி தோன்றிய காலத்திலிருந்து உயிர் தோன்றிய காலம் வரையிலான 2200 மில்லியன் ஆண்டுகள் இடைவெளியில் பூமியில் உயிர்கள் இல்லாத சூழ்நிலை அமைந்திருந்தது. அக்காலத்தில் பூமி உருவாகிக் கொண்டிருந்தது என்பர். உயிரிகளற்ற அக்காலம் 'ஏசோயிக் காலம்' (Azoic Era) எனப்படும். இக்காலம் 5,000 முதல் 2,200 பில்லியன் ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. இக்காலத்தில் பூமி ஓர் அதிக வெப்பமுடைய எரிகோளமாக இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. படிப்படியாக பூமியின் மேற்பரப்பில் வெப்பம் தணிந்தது. இதனால் பாறைகளும் பாறைப் பரப்புகளும் தோன்றத்துவங்கின. மேலும் நீர் மூலக்கூறுகள் தோன்றின. புவிப்பரப்பில் நீர்நிலைகள் ஏற்பட்டன. இத்தகைய பல்வேறு மாற்றங்கள் உயிர்கள் தோன்றுதலுக்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தன. 

    முதல் உயிரி தோன்றியபின் படிப்படியாக பரிணாம மாறுதல்கள் ஏற்படத் துவங்கின. உயிரிகளின் அமைப்பு, வாழ்முறை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் இயற்கைச் சூழலின் தன்மைகளையும் அங்கு நிகழும் மாற்றங்களுக்கு ஏற்பவும் அமைந்திருந்தன. இவ்வகையிலேயே பல்வேறு தாவர, விலங்கினங்கள் பெருகத் துவங்கின. நீர் நிலைகள் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்டன. பிறகு நிலப்பரப்புகளிலும் உயிரினங்கள் வாழமுற்பட்டன. 

    ஏசோயிக் காலத்திற்குப் பிறகு நிகழ்ந்த தொன்மைக்கால நிகழ்வுகள் அறிதலுக்கு மிகவும் சுவையானவை. இக்காலம் மூன்று பெருங்காலங்களாகப் (Eras) பிரிக்கப்பட்டுள்ளது. இவை பூமியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலங்கள். இவை மூன்றில் பழமையானது 'பாலியோசோயிக் காலம்' அல்லது 'தொல்லுயிர்க் காலம்' (Palaezoic Era) ஆகும். இக்காலம் 600 முதல் 210 மில்லியன் ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. இவ்வகையில் இக்காலம் 390 மில்லியன் ஆண்டுகள் அமைந்திருந்தது. இப்பெருங்காலத்தில் கடற்பஞ்சுகள், நட்சத்திர மீன்கள், நத்தைகள், பூச்சிகள், நண்டுகள், நிலவாழ், நீர்-நில வாழ்விகள், ஊர்வன இனங்கள் பலவும் தோன்றித் தழுவிப்பரவின. 

    பாலியோசோயிக் காலத்திற்குப் பின்னால் மையக்காலமாகிய மீசோசோயிக் பெருங்காலம் (Mesozoic Era) அமைந்திருந்தது. இப்பெருங்காலம் 65 முதல் 210 மில்லியன் ஆண்டுகள் இருந்தது. இக்காலம் ஏறக்குறைய 145 மில்லியன் ஆண்டுகள் பரவியிருந்தது எனலாம். இக்காலத்தில் விலங்குகளில் ஊர்வன இனங்கள் சிறப்புற்றன. எனவே இக்காலத்தை ஊர்வன இனங்களின் பொற்காலம் என்பர். மேலும் இக்காலத்தில் பறவைகளும் பாலூட்டிகளும் தோன்றின. 

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு துவங்கி இன்றுவரை உள்ள காலம் சீனோசோயிக் பெருங்காலம் (Cenozoic Era) எனப்படும். இக்காலத்தில் பாலூட்டிகள் முக்கியத்துவம் பெற்றன. அவை பலவகைகளாகப் பரிணமித்தன. எனவே இப்பெருங்காலத்தினை பாலூட்டிகளின் காலம் எனலாம்.

பழங்கால அட்டவணை 

பல்வேறு பாறைகள், பாறைப் படிவுகள் ஆகியவற்றின் வயதினை தீர்மானித்து ஒரு ‘புவிப்பழங்கால அட்டவணை' தயாரிக்கப்பட்டுள்ளது. 

பெருங்காலம்கால அளவுமுக்கியத்துவம்
பாலியோசோயிக்600 - 210 மில்லியன் ஆண்டுகட்கு முன்பழமை உயிரிகளின் தொட்டில்
மீசோசோயிக்210 - 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்ஊர்வன இனங்களின் பொற்காலம்
சீனோசோயிக்65 - 1 மில்லியன் ஆண்டுகட்கு முன்பாலூட்டிகளின் காலம்

    காலம், வயது, நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் புவி வரலாற்றுக் காலங்கள் பெருங்காலம் (Era), காலம் (Period), சிறுகாலம் (Epoch) என பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் பெயரிடப்பட்டு திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இக்காலங்களில் வாழ்ந்த உயிரினங்கள், அவற்றில் நிகழ்ந்தமாற்றங்கள் யாவும் துல்லியமாகக் குறிக்கப்பட்டுள்ளன. இக்காலங்களில் புவி அமைப்பிலும் பருவகாலங்களிலும் ஏற்பட்ட மாறுதல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

பெருங்காலம்காலம்சிறுகாலம்கால அளவு (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு)
சீனோசோயிக்குவார்ட்டர்னரிபிளிஸ்டோசீன்2-1

டெர்ஷியரிபிளையோசின்7-2


மையோசீன்26-7


ஆலிகோசீன்38-26


இயோசீன்54-38


பாலியோசீன்65-54
மீசோசோயிக்கிரிட்டேஷியஸ்
130-65

ஜுராசிக்
160-130

டிரையாசிக்
210-160
பாலியோசோயிக்பெர்மியன்
235-210

பென்சில்வேனியன்
255-235

மிசிசிப்பியன்
275-255

டிவோனியன்
315-275

சைலூரியன்
350-315

ஆர்டோவிஷியன்
440-350

கேம்பிரியன்
600-440

முன்கேம்பிரியன்600க்கு மேல்

காலங்கள்
நிகழ்ச்சிகள்
குவார்ட்டர்னரி - பிளிஸ்டோசீன்2-1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்மனிதனின் பரிணாமம்
டெர்ஷியரி - பிளையோசீன்7-2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்எலி, முயல், அணில் வகைகளின் சிறப்பு 
டெர்ஷியரி - மியோசீன்26-7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்அகன்ற புல்வெளிகள் தோன்றின. குதிரைகளின் பரிணாமம், ஊனுண்னும் பாலூட்டிகளின் சிறப்பு
டெர்ஷியரி - ஆலிகோசீன்38-26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்குரங்கினங்கள், மனிதக் குரங்குகள் தோன்றின.
டெர்ஷியரி - இயோசீன்54-38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்குதிரைகள் தோன்றின.
டெர்ஷியரி - பாலியோசீன்65-54 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்முதல் பூக்கும் தாவரங்கள்
கிரிட்டேஷியஸ்130-65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாலூட்டிகளின் டைனோசர்கள்
ஜுராசிக்160-130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பறவைகள் தோன்றின. தற்காலத்திய எலும்பு மீன்கள் தோன்றின.
டிரையாசிக்210-160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்டைனோசர்கள் தோன்றின. பாலூட்டிகள் தோன்றின.
பெர்மியன்235-210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்ஊர்வன இனங்கள் தோன்றின.
பென்சில்வேனியன்255-235 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்நிலவாழ் பூச்சிகள்
மிசிசிப்பியன்275-255 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்நீர்நில வாழ்விகள் தோன்றின. நிலவாழ் பூச்சிகள், காடுகள்
டிவோனியன்315-275 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்மீன்களின் காலம், பெரணிகள்
சைலூரியன்350-315 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தாடையுடைய மீன்கள் தோன்றின.
ஆர்டோவிஷியன் பிரையோபைட்டுகள்440-350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்முதல் முதுகெலும்பிகள்.
கேம்பிரியன்600-440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தாலோபைட்டுகள், கணுக்காலிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள்.
முன்கேம்பிரியன்600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்ஒருசெல் உயிரிகள், கடற்பஞ்சுகள், வளைத்தசையுடலிகள்.

I. பாலியோசோயிக் பெருங்காலம் 

    இக்காலத்தில் புவி அமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. மேலும் இன்றைய பல்வேறு இனங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த பல முன்னோடிகளும் தோன்றிப் பரவியது இக்காலத்தில்தான். இக்காரணத்தினால் இப்பெருங்காலத்தினை ‘பண்டைய உயிரிகளின் தொட்டில்' என்பர். 

1. கேம்பிரியன் காலம் (Cambrian Period) (600 முதல் 440 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

    கேம்பிரியன் காலத்திற்கும் முன்பிருந்த காலம் முழுமையும், மொத்தத்தில் முன்கேம்பிரியன் எனப்படும். அக்காலத்தில் எளிய ஒரு செல் உயிரிகள், கடற்பஞ்சுகள், வளைத்தசையுடலிகள் போன்றவை நிலைபெற்றிருந்தன. இவ்வகை உயிரிகளைக் கொண்டு கேம்பிரியன் காலம் துவங்கியது. கேம்பிரியன் காலத்தில் தாவரங்களில் தாலோபைட்டுகள் சிறப்புற்று விளங்கின. இவை பல பிரிவுகளாகப் பரிணமித்தன. (உதாரணம். குளோரோபைசியே, ரோடோபைசியே முதலியவை). விலங்கினங்களில் நீர்வாழ் கணுக்காலிகளும் முட்தோலிகளும் முதல்நிலை வகித்தன. இவ்வுயிரினங்களின் படிவங்கள் கிடைத்துள்ளன. 

2. ஆர்டோவிஷியன் காலம் (440 முதல் 350 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

ஜமாய்டிஸ் - முதல் தாடைகளற்ற மீன்

    இக்காலத்தில் பவளப்பறைகள் பரவின. மெல்லுடலிகளும் முட்தோலிகளும் தோன்றின. தாவர உலகில் ஓரளவு நிலத்தில் வாழும். பிரையோபைட்டுகள் நிலை பெற்றன. இக்காலத்தில் முதல் நிலை முதுகெலும்பிகள் தோன்றின. இவ்விதம் தோன்றிய ஏநேத்தா (Agnatha) எனும் தாடைகளற்ற, மேல்கவசம் உடைய மீன்கள் பிறகு மறைந்து விட்டன. முதல்நிலை முதுகெலும்பிகள் தோன்றியது விலங்குகளின் பரிணாமத்தில் ஓர் மிக முக்கிய நிகழ்ச்சி. கணுக்காலிகளில் டிரைலோபைட்டுகள் முன்னிலை பெற்றன. 

3. சைலூரியன் காலம் (350 முதல் 315 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

ஆஸ்டிரக்கோடெர்ம் - முதல் ஓடுடைய மீன்கள், பிளாக்கோடெர்ம் - முதல் தாடை மீன்கள்

   பழமையான நிலத்தாவரங்கள் தோன்றின. இத்தாவரங்களில் கடத்தும் திசுக்கள் இருந்தன. இவை நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்தன. பூச்சிகள் நீங்கலாக பிற முதுகெலும்பற்றவை சிறப்பாக வாழ்ந்தன. பவளங்கள் பல வகைகளாயின. பல பவளத் தீவுகள் தோன்றின. தாடைகளையுடைய மீன்கள் தோன்றின. மீன்கள் செதில்களையும் இணைத்துடுப்புகளையும் பெற்றன. இணைத்துடுப்புகளும் தாடைகளும் தோன்றியது முதுகு நாணிகளின் பரிணாமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளாகும். 

4. டிவோனியன் காலம் (315 முதல் 275 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

    பாலியோசோயிக் பெருங்காலத்தில் இக்காலம் குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் நில வாழ் தாவரங்கள் முக்கியத்துவம் பெற்றன. காடுகளில் பலவகை பெரணிகளும், சைக்கஸ் தாவரங்களும் தோன்றின. நீர் வாழ் விலங்குகளில் மீன்கள் முக்கியத்துவம் பெற்றன. அவை பல வகைகளாகி பல நீர் நிலைகளில் வாழும் தகவமைப்புகளைப் பெற்றன. தற்காலத்திய அனைத்துவகை மீன்களின் முன்னோடிகளும் வாழ்ந்திருந்தன. இக்காரணங்களால் இக்காலம் 'மீன்களின் காலம்' எனப்படுகிறது. 

5. மிசிசிப்பியன் காலம் (275 முதல் 255 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

    பல நில மாற்றங்கள் தோன்றின. புவிப்பரப்பின் பல இடங்களில் நிலம் மேலெழும்பியது. இதனால் மலைத்தொடர்கள் தோன்றின. பெரிய நீர் நிலைகள் சிறிய ஏரிகளாக உடைந்தன. இத்தகைய மாற்றங்களுக்கு ‘புரட்சிகர மாற்றங்கள்' (Revolutions) என்று பெயர். இத்தகைய மாற்றத்தினால் மீன்களில் நுரையீரல்கள் தோன்றின. இதனால் அம்மீன்கள் புதிய நீர் நிலைகளைக் காண்பது எளிதாயிற்று. இவ்வகை நடவடிக்கைகளால் நீர்-நில வாழ்விகள் தோன்றின. நிலவாழ் பூச்சிகளின் பரிணாம வளர்ச்சி, நீர்-நில வாழ்விகளை மேலும் ஊக்குவித்தது. 

ஆஸ்திரேலியாவின் நுரையீரல் மீன் - நியோசெரட்டோடஸ்

6. பென்சில்வேனியன் காலம் (255 முதல் 235 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

    நில வாழ் உயிரிகள் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. நிலத்தில் மிகப்பெரிய பெரணிக் காடுகளும் சைக்கஸ் வனங்களுமிருந்தன. புவிப்பரப்பின் மாற்றங்களால் பல காடுகள் மண்ணில் புதையுண்டன. இப்புதைவிலிருந்துதான் இன்றைய நிலக்கரியும் பெட்ரோலியமும் கிடைக்கின்றன. இக்காரணத்தால் மிசிசிப்பியன், பென்சில்வேனியன் காலங்களை இணைத்து கார்பானிபெரஸ் (Carboniferous) காலம் என்பதுண்டு. 

7. பெர்மியன் காலம் (235 முதல் 210 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

    இதுவே பாலியோசோயிக் பெருங்காலத்தின் இறுதிக் காலமாகும். அப்போது வாழ்ந்த உயிரினங்களில் 60% வகைகள் மறைந்தன. சில நீர்-நில வாழ்விகள் ஓடுடைய நில முட்டைகளை இட்டன. இதனால் ஊர்வன இனம் பரிணமித்தது. குறிப்பாக நீர் நில வாழ்விகள், ஊர்வன இனங்களுக்கிடையே இணைப்புப் பாலமாக சீமூரியா எனும் உயிரி தோன்றிற்று. 

II. மீசோசோயிக் பெருங்காலம் 

    உயிரின வரலாற்றில் இது ஓர் இடைக்காலம். நில வாழ்வு மேலும் சிறப்படைந்தது. விலங்குகளில் ஊர்வன ஓங்கு நிலையடைந்தன. அளவிலும் எண்ணிக்கையிலும் அதிகரித்தன. இப்பெருங்காலத்தை 'ஊர்வன இனத்தின் பொற்காலம்' என்பதுண்டு. 

1. டிரையாசிக் காலம் (210 முதல் 160 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

    முதன் முறையாக இக்காலத்திலிருந்து ஆமைகள், முதலைகள், டைனோசார்களின் படிவங்கள் கிடைத்துள்ளன. நில வாழ், நீர் வாழ் ஊர்வன இனங்கள் சிறப்புற்றிருந்ததாகப் படிவங்கள் தெரிவிக்கின்றன. ஊர்வன இனத்திலிருந்து பாலூட்டிகள் தோன்றின. 

2. ஜுராசிக் காலம் (160 முதல் 130 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

    டைனோசார்கள் சிறப்பாகப் பரவியிருந்தன. ஊனுண்ணும், தாவர உணவுண்ணும் டைனோசார்கள் இருந்தன. முதல் பறவைகள் ஊர்வன இனத்திலிருந்து தோன்றின. முதலில் தோன்றிய பறவைகளில் ஒன்று ஆர்க்கியாப்டெரிக்ஸ் (Archeopteryx). பின் பறவைகள் தோன்றியது வெப்பப் பாதுகாப்பு இயல்பில் ஓர் புதிய மாற்றமாகும். எலும்பு மீன்கள் பலவாகப் பரிணமித்தன. 

3. கிரிட்டேஷியஸ் காலம் (130 முதல் 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்) 

    மிகப்பெரிதாயிருந்த மெல்லுடலிகள் மறைந்தன. இக்காலத்திய உயிரிகளின் படிவங்கள் தமிழகத்தின் அரியலூரில் கிடைக்கின்றன. 

    மீசோசோயிக் பெருங்காலத்தின் டைனோசார்கள் இக்காலத்தில் முற்றிலுமாக மறைந்தன. இதற்கு பலவகையான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இதற்குப் பிந்திய காலங்களில் டைனோசார்களின் படிவங்கள் கிடைக்கவில்லை. 

மீசோசோயிக் பறவைகள், ஊர்வன உயிரிகள்

III. சீனோசோயிக் பெருங்காலம் (65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்து இன்று வரை)

டிரைசெரடாப்ஸ் - கொம்புடைய டைனோசார்

    இக்காலத்திற்கான படிவங்கள் பல கிடைத்துள்ளன. இவற்றில் தற்காலத்திய விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் உண்டு. இப்பெருங்காலம் டெர்ஷியரி, குவார்ட்டர்னரி என இரண்டு காலங்களைக் கொண்டது. மேலும் இதில் ஏழு சிறுகாலங்கள் உண்டு. இக்காலங்களின் படிவங்களால் குதிரைகள், யானைகள், ஒட்டகம், மனிதன் போன்ற தனிப்பட்ட விலங்கு வகைகளின் படிப்படியான பரிணாம வளர்ச்சியைக் காணலாம். 

1. பாலியோசீன் சிறுகாலம் 

இக்காலத்தில் தாய்-சேய் இணைப்புத்திசு உடைய பாலூட்டிகள் தோன்றின. 

2. இயோசீன் சிறுகாலம் 

குளம்புக் கால் பாலூட்டிகள் (Ungulates) தோன்றின. இக்காலத்தில் குதிரைகளின் முன்னோடிகள் வாழ்ந்தன. 

3. ஆலிகோசீன் சிறுகாலம் 

பழமைப் பண்புகளுடைய பல விலங்குகள் மறைந்தன. தற்காலத்திய பாலூட்டிகள் இனக் குடும்பங்கள் நிலைப்பெற்றன. மனிதக் குரங்குகள் தோன்றின. 

4. மயோசீன் சிறுகாலம் 

பலவகைப் புற்கள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தோன்றிப் பரவின. மிகப்பெரிய புல்வெளிகள் தோன்றின. புல்வெளிகளில் வேகமாக ஓடும் பாலூட்டிகளும் அவற்றை விரட்டிப் பிடிக்கும் மாமிச உண்ணி பாலூட்டிகளும் தோன்றின. 

5. பிளியோசீன் சிறுகாலம் 

புல்வெளிகள் மேலும் பெரிதாகின. முயல், எலி வகைகள் அதிகமாயின. பாலூட்டிகளின் எண்ணிக்கைக் கூடியது. 

6. பிளீஸ்டோசீன் சிறுகாலம் 

பல உறைபனித் தோன்றுதல்கள் (Glaciations) நிகழ்ந்தன. இதனைப் 'பனிக்கட்டி காலம்' என்பர். குதிரைகள், மனிதனின் பரிணாமம் இறுதி நிலைகளை எட்டியது. 1500 ஆண்டுகட்கு முன் பனிப்பாறைகள் உருகியது. இக்காலத்தின் இறுதி நிகழ்ச்சியாகும். நாம் இப்போது ‘இடைப்பகுதி' காலத்தில் உள்ளோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக