Ads Here

14 ஜூன், 2022

மேற்கோள்கள் - புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை

எட்டுத்தொகை மேற்கோள்கள்

எட்டுத்தொகை நூல்கள் மேற்கோள்கள்

புறநானூறு

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
 - (குடபுலவியனார், 18)
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; - - - -- -
- - - - - - - - - - - - - - - - - - -
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்,- - - - - -
- - - - - - - - - - - - - - - - - - -
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
- (கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி, 182)
நெல்லும் உயிரன்றே; நீரும்உயி ரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
- (மோசிகீரனார், 186)
நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
 - (ஔவையார், 187)
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
 - (மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், 189)
பல்சான் றீரே பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள், 
பயனில்மூப்பின், பல்சான்றீரே! 
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் 
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ 
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், 
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான் 
எல்லாரும் உவப்பது அன்றியும், 
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
- (நரிவெரூஉத் தலையார், 195)
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய 
மாமலை பயந்த காமரு மணியும்
இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
- (கண்ணகனார், 218)

அகநானூறு

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கள் உப்பெனச்
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு,
இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மாமூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வந் தீர வாங்குந் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே.
-(அம்மூவனார், 140).
உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய ...
-(மருதன் இளநாகனார்).

நற்றிணை

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் 
மறுகால் உழுத ஈரச் செறிவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் 
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் 
புன்கண் அஞ்சும் பண்பின் 
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே.
 - (மிளைகிழான் நல்வேட்டனார்)

குறுந்தொகை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
- (தேவகுலத்தார்)

ஐங்குறுநூறு


கலித்தொகை

ஆற்றுதல் என்பதுஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை 
அறிவனெப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செறிவெனப் படுவது  கூறியது மறாஅமை 
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை 
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்.
- (நல்லந்துவனார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக