Ads Here

21 செப்டம்பர், 2021

ஒரு செல்போன் சர்வீஸ்க்கு போன அனுபவம்

Srinivasa Enterprises என்ற நிறுவனம்தான் Chennai, Jafarkhan Pettaiயில் இந்த ஷோரூமை நடத்துகிறது. மணி என்ற பையன்தான் இந்த ரிவியூ எழுத மூலக்காரணம். அவனுக்கும் மூலகாரணம் புதிதாக சேர்ந்துள்ள inexperienced servicemen தான். வாடிக்கையாளர்களிடம் எப்படி கனிவாகவும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் கன்னியமாகவும் நடந்து கொள்வது என்று Company Management சரியாக கற்றுத்தரவில்லையோ அல்லது அக்கம்பெனிக்கே தெரியவில்லையோ என்னவோ?

நான் கடந்த காலங்களில் ஏற்கனவே இங்கு Authorised சர்வீஸ் பண்ணி இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் சரியாக பில் போட்டு தருவார்கள். Faulty Partஐ நாம கேட்காமலேயே நமக்கு திருப்பித் தந்துவிடுவார்கள். பில்லில் Actual Part Price from the authorised company, Service charge, GST நம்பர் எல்லாத்தையும் போட்டு தருவாங்க.

ஆனால் சமீபகாலமாக நடப்பது எதுவும் சரி இல்லை. பணவிஷயத்தில் மோசமாக நடந்து கொள்கிறார்கள். வெளிப்படைத்தன்மையோ மனிதாபிமானமோ மேலும் பில் கூட கிடையாது.

Warranty period முடிந்து அதே பொருளுக்கு Unauthorised Serviceக்கு செல்லும்போது Bill சுத்தமாக கொடுப்பதில்லை. ஆனால் அருகில் உள்ள Samsung போன்ற மற்ற கம்பெனி சர்வீஸ் சென்டர்களில் Unauthorised Serviceக்கு கூட சரியா Bill போட்டு தருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

சரி Replaced Partன் Actula Price, Labour Charge இதுலயாவது ஒரு அளவுக்கு நியாயம் இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. நாம போகும்போதே நம்ம போன்ல என்ன பிரச்சினை, மாற்ற வேண்டிய Part எதுன்னு ஓரளவிற்கு நல்லாவே தெரிஞ்சினு மேலும் ஆன்லைன்லகூட Price என்னன்னு பாத்துட்டு போவோம். ஆனா, சும்மாவே 200 ரூபா PCB Part மாற்றுவதற்குக்கூட மனசாட்சியே இல்லாம 350 ரூவான்னு பில்லு போடுறாங்க.

இதைவிட, முக்கால் மணி (😬😬) நேரம் மட்டுமே செஞ்ச வேலைக்குக்கூட Lumpஆக Labour Chargeன்னு 300 ரூவா வாங்குறாங்க. ஆனால் நம்ம நாட்டுல, வெயில்ல நாள் முழுக்க உழைக்குற தொழிலாளிக்குக்கூட ஒரு நாள் சம்பளம் அவ்வளவு கிடைக்குதான்னு தெரியல.

மேலும் Faulty Partஐ திரும்ப கேட்டா கோபம் வேற படுறாங்க.

சரி Serviceஐயாவது ஒழுங்கா பண்ணியிருப்பாங்கன்னு பார்த்தா, உள்ளே இருக்குற Boardஐ மாத்திட்டு வெளியே இருக்குற பிளாஸ்டிக்க உடைச்சு விட்டுடுறானுங்க. வேலை செய்யத் தெரிஞ்சா மட்டும் போதுமா? பொறுமை என்றது ஒன்று வேண்டும் இல்லையா??? ஏம்பா இப்படி, இதனால மேலும் பிரச்சினை ஏதும் வருமான்னு கேட்டா அதுக்கும் கோவப்படுறானுங்க.
இது எல்லாம் காச வாங்கிட்ட பின்னாடி. இதைவிடக் கொடுமை என்னன்னா, அந்த புதுப்பையன், "அடுத்த Serviceல பார்த்து பண்ணிக்கலாம்னு ஜி!" ன்னு சொல்றான்.

வாடிக்கையாளரை பிரச்சனை என்று வரும்போது அவருக்கு இந்த Part தான் faultன்னு புரியவச்சு, இதுதான் சரிசெய்ய வேண்டியது முறை,  குறைந்தபட்சம் (அதிகபட்சம் இல்லை) இவ்வளவு செலவு ஆகும் அப்படின்னு சொல்லித்தந்து மீண்டும் அந்த பிரச்சினை ஏற்படாதவாறு அவங்களுக்கு சொல்லித் தரணும். இதானே நல்ல True Sevice Menகளுக்கு அழகு? அதைவிடுத்து, சின்ன பிரச்சினைக்குகூட அவர்களை பயமுறுத்தி காசு பிடுங்குவது என்ன தொழில்??? கடைசிவரை, பணம் இல்லாதவர்களிடம் படிக்காதவர்களிடம்தான் மீண்டும் மீண்டும் சுரண்டி சுரண்டித் திண்பீர்களா?

நம் நாட்டில் பணத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டுமானால், உங்களைப் போன்றவர்கள்தானே குறைந்த விலைக்கு அதிக Quality தரவேண்டும். அப்போதுதானே 10, 20 என வைத்திருக்கும் ஏழைகள் உண்மையில் செழிப்பாக வாழ முடியும்.

இந்த Review முழுக்க முழுக்க நான் இந்த குறிப்பிட்ட நேரத்தில் அடைந்த, எனக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. மிகச்சிறந்த நல்ல அனுபவம் பெற்றவர்களை வாழ்த்துகிறோம்.


2021 செப்டம்பர் 21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக