பணக்கார முதலைகள் முதலீடு செய்யும்போது ஒரு போதும் பணத்தை இழக்க முன்வரமாட்டார்கள். அவர்கள் எப்போதும் சேமிப்பு பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.
பணக்கார செல்வந்தர்கள் தங்கள் நாட்டில் மட்டும் எப்போதும் முதலீடு செய்யமாட்டார்கள். வளர்ந்து வரும் நாடுகளை கூர்ந்து கவனிப்பார்கள். எந்தெந்த நாட்டில் முதலீடுகள் எளிதாகவும் லாபகரமாக இருக்கும் என்று நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அதற்கேற்றார்போல் முதலீடுகளை அவர்கள் மேற்கொண்டு அதிக லாபத்தை குறிப்பாக அந்நாட்டு ஏழைகளிடம், நடுத்தர மக்களிடம் இருந்து சுரண்டி விடுவார்கள்.
செல்வந்தர்கள் எப்போதும் தொட்டு உணர முடியும் சொத்துக்களான ரியல் எஸ்டேட், நிலம், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்ய ஆசைப்படுவர்.
பண முதலைகள் 100% முதலீட்டையும் மக்கள் சந்தைகளில் மட்டுமே முதலீடு செய்யமாட்டார்கள். தனியார் சந்தைகளில் அதிகமாக முதலீடு செய்து கால்குலேட்டட் ரிஸ்க் எடுப்பார்கள்.
பண முதலைகள் எப்போதும் நீண்டகால முதலீட்டை மட்டுமே மேற்கொள்வார்கள். அடுத்தவன் என்ன செய்கிறானோ அதே மாதிரி செய்ய மாட்டார்கள்.
பண முதலைகள் பல தொழில்களை ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தாலும், அவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும், தொழில் வளர்ச்சியை மறுசீரமைத்துத் கொண்டே இருப்பார்கள். அதாவது ஒரு அடிக்கடி தொழில் வளர்ச்சியை சமநிலைப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
பண முதலைகள் ஒருபோதும் சேமிப்பை கைவிட மாட்டார்கள்.
ஆக, நீங்கள் பணக்காரராக விருப்பம் இருந்தாலும், பணக்காரன் மட்டும் எப்படி இன்னும் பணக்காரனாக ஆகிறான் என்று தெரிய விரும்பினாலும் இதெல்லாம் மனசுல வெச்சுக்கோங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக