Ads Here

18 செப்டம்பர், 2021

நிலம் மற்றும் வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

நிலம் மற்றும் வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை :

(1) நிலம் அல்லது வீடு போன்ற சொத்து பத்திரத்தில் ஏதும் வில்லங்கம்
(2) காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் நிலம் அல்லது வீடு மீது ஏதாவது வழக்கு
(3) அரசு கையகப்படுத்தும் ஏற்பாட்டில் இருக்கிறதா அல்லது ஏற்கனவே கையகப்படுத்தியதா
(4) கடன் வாங்கி
(5) இரண்டு பேருக்கு விற்பதாக அக்ரிமெண்ட்
(6) பத்திரங்கள் துல்லியமாக இருக்கின்றதா
(7) விற்பவர் குறித்த துல்லியமான விவரங்கள், உண்மை தன்மை - என்ன காரணத்திற்காக விற்பனை செய்கிறார் - பேச்சுவார்த்தை -  அடையாளச்சான்றை வாங்கி நாம் சரிபார்க்கும்போது நமது நடவடிக்கைகளை அவர் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார் - விசாரிப்புகள் அவருக்கு தெரியம்படியா அல்லது மறைமுகமாகவா (நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்) - நேர்மையான விற்பனையாளருக்கு விசாரணைகளை முன்னமே தெரிவிப்பது கசப்புணர்வுகள் வராமல் காக்கும் - உண்மைத்தன்மை விசாரிப்புகளுக்கு அவர் அஞ்சினால் சந்தேகம் வரலாம் - ஆள்மாறாட்டம் செய்பவர் பாதியிலேயே விற்பனை நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வார்
(8) பதிவு அலுவலகத்தின் நடைமுறைகளில் அனுபவம் அல்லது ஏற்கனவே இருந்தவருடன் பயணித்த அனுபவம்
(9) மூலப்பத்திரம் - உரிமையாளருக்கு எப்படி கிடைத்தது, சொத்தை விற்பனை செய்தவர் யார், தானமாக கொடுத்தவரின் உயில் அல்லது அதிகாரம், ரத்த சம்பந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக