தமிழில் பிறமொழிச் சொற்களைக் கண்டறிவது எப்படி?
- இருப்பவன் கடன் வாங்குவதும், கடன்வாங்கியே
பிழைப்பை ஓட்டுவதும் இழிவே -
-----
மெய்ம்மயக்கம்
தமிழில் ர், ழ் (அதாவது, ரழ) இவற்றைத் தவிர்த்து, பிற பதினாறு
மெய்யெழுத்துக்களும் அவற்றின் ஒற்றுகளுடன் இரட்டித்து வரலாம் (உடனிலை மெய்ம்மயக்கம்).
அச்சம் - அச்ச்+அம்
குறிப்பாக, க், ச், த், ப் (அதாவது, கசதப) ஆகிய நான்கு மெய்யெழுத்துக்கள்
உடனிலை மெய்ம்மயக்கத்தில் மட்டும் வரும். இவை வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில்
வாரா.
சான்றாக,
மயக்கம், அச்சம், பட்டம் – தமிழ்ச் சொற்கள் ✅
இவ்வாறுதான், வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில்,
க், ச், த், ப்
(அதாவது, கசதப) ஆகிய நான்கு மெய்யெழுத்துக்களைத் தவிர்த்து, பிற பன்னிரண்டு மெய்யெழுத்துக்களும்
அவற்றின் இணைஒற்றுகளுடன் இரட்டித்து வரலாம்.
++++
ஈரொற்று மெய்ம்மயக்கம் அல்லது ஈரொற்று உடனிலை மெய்ம்மயக்கத்தில் (இரண்டுமே ஒன்றுதான்), முதல்
மெய்யெழுத்து ய், ர், ழ் ஆகிய மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கும்.
எடுத்துக்காட்டாக,
வாய்க்கால், தேர்க்கால், தமிழ்த்தாய்
- தமிழ்ச்சொற்கள்
✅
ராட்ச்சசன், சொற்க்கள் – பிறமொழிச் சொற்கள் (தமிழ்ச்சொற்கள்
அல்ல) ❌
-----
கோவில் ❌ (கோபுரமும் மதிலும்
கொண்ட பரப்பு)
கோயில் ✅ (இறைவன் இருக்கும்
கருவறை)
எனவே, கோயில் என்பதே சரி.
-----
வினாயகர் ❌
விநாயகர் ✅ (தனக்கு மேல் தலைவன் இல்லை)
எனவே, விநாயகர் என்பதே சரி.
மேலும், சந்தனம், சந்தானம் (பிள்ளைவரம்) ஆகியவற்றில் எது சரி
என்று நோக்கும்போது
சந்தான விநாயகர் என்பதே சரி ✅ (பிள்ளை
வரம் தரும் விநாயகர்).
சந்தன விநாயகர் என்பது தவறு ❌.
-----
தோப்புக்கள் ❌ (தோப்பில் இருந்து இறக்கப்பட்ட கள்)
தோப்புகள் ✅ (தோப்பின் பன்மை)
-----
மருந்து கடை ❌ (மருந்தினைக் கடை)
மருந்துக்கடை ✅ (மருந்தை விற்கும் கடை)
----
பின்வருபவை
தமிழ்ச் சொற்கள் அல்ல ❌. (??? விளக்கம் வேண்டும்)
நேமி, கோவலர், படிவம், கண்டம், படம்,
கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம், ஜன்னல், பீப்பாய், மேசை, சலாம், ராவுத்தன்
----
மேசை என்பதன் தமிழ்ச்சொற்கள் - இருத்தி,
பரத்தி, மேடை, தளம், மேற்கோளி, மீதுகை, மேட்டி, கால்பலகை, மிசைப்பலகை, எழுதுமேடை, எழுதுதளம்,
மேல்தாங்கி, பலகைச்சட்டம், மரக்கிடுகு, தட்டுமேடை, நிலைமேடை, பணிப்பலகை
----
Tags (தேடலுக்கான சொற்கள்) : பிறமொழிச் சொற்களைக் கண்டறிதல், என்ற சொல்லின் பொருள், பொருள், பிறமொழிக்கலப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக