https://tools.pdf24.org/en/ocr-pdf
ஒரு மிக நல்ல செய்தி!
நீங்கள் என்றாவது ஒரு தமிழ் PDF கோப்பினை வாசிக்கும் போது, அதில் இருக்கும் நல்ல கருத்துக்களை பிறருக்கு பகிர முற்பட்டு இருக்கிறீர்களா? அப்படி இருந்திருந்தால் உங்களுக்கு தோல்வி மட்டுமே கிடைத்திருக்கும். மேலும் நம்மால் எளிதாக நம் தாய்மொழியில் உள்ள கருத்தைக்கூட பிறருக்கு பகிர முடியவில்லையே என்று ஆதங்கமும் ஏற்பட்டிருக்கலாம்.
காரணம் எந்த ஒரு PDF மென்பொருளும் ஆங்கில மொழி எழுத்துக்களை மட்டுமே Copy செய்ய அனுமதிக்கும். ஆனால் இந்திய மொழிகளை அவை அனுமதிக்காது. மேலும் கணினி Programming Language கூட ஆங்கிலத்தில் தான் இருக்கும். இதனால் தான் ஆங்கிலம் மொழி மட்டுமே கணினிப்பயன்பாட்டில் அழியாத புகழை பெற்றுள்ளது. ஆனால் இது போன்ற தடைகளை உங்கள் தாய்மொழி கொண்டு தகர்த்து பாருங்கள். தாய்மொழி எட்டுத்திக்கும் பரவி சுயசிந்தனை மேம்பட்டு உண்மையான அறிவியல் அறிவு உண்டாகும்.
இவ்வாறாக ஆங்கில PDF களில் உள்ள கருத்துக்களை மட்டும் இனி பகிராமல், https://tools.pdf24.org/en/ocr-pdf என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் தமிழ் PDF கோப்பை பதிவேற்றம் செய்தால், ஒளியெமுத்துணரி OCR துணைகொண்டு அது தமிழ் எழுத்துக்களை கண்டுணர்ந்து, அந்த PDFஐ Image Based OCR character recognition சிறப்பம்சம் கொண்ட PDF ஆக மாற்றித் தந்துவிடும். இதில் தமிழ் & ஆங்கிலம் இரு மொழிகளையும் கொண்ட PDFஐ மாற்ற முடியுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் தமிழ் மொழி மட்டும் கொண்ட PDF மிக நன்றாக வேலை செய்கிறது.
இது போன்ற மென்பொருட்கள் தான் உண்மையில் தமிழை மேம்படுத்தும். ஆக இனி Tamil99, Bamini, Tamil TAC போன்ற எந்த முறையில் எழுதப்பட்ட PDF ஆனாலும் எளிதாக Unicode எழுத்துக்களாக இந்த மென்பொருள் மூலம் எளிதாக மாற்றி, கருத்துக்களை பகிரவும் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும்.
இவ்வாறு நாம் தாய்மொழியில் கருத்துக்களை பகிர்வதுதான் தமிழ் கூறும் நல்லுலகம் உண்மையில் நிமிர்ந்து நிற்கும். வெற்று பெருமைகளால் அல்ல.
நன்றி! பகிருங்கள்!
இது போன்ற தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் மென்பொருட்களை மென்மேலும் உருவாக்கி, சிறுதும் வியாபார நோக்கில்லாமல் சமூகம் மேம்பட வழிவகுத்ததுத் தாருங்கள் மனிதநேயம் கொண்ட நெஞ்சங்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக