Ads Here

07 ஜனவரி, 2020

பொது அறிவு General Knowledge GK

(அனைத்தையும் மறுஉருவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
👉ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனாக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉ஆக்டோபசுக்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
👉குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
👉 சுகப்பிரசவம் இல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் தான் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சிசேரியன் என்றுபெயர் வந்தது.
👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
👉 ஷி-ஹூவாங்-டி என்பவரின் ஆட்சிக் காலத்தில் சீனப் பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டு பழைமையானது.
👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம். ஆனால் அதான் ஆயுட்காலம் வெறும் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
👉இலைகள் உதிர்க்காத மரங்கள் – ஊசி இலை மரங்கள்
👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
👉குளிர் காலத்தில் குயில் கூவாது.
👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதிக் கொண்டே மற்றொரு கையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலையின்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் – ஈரிதழ்சிட்டு.
👉வால்டிஷ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
👉யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
👉புழுக்களுக்கு தூக்கம கிடையாது.
👉நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

விலங்கியல்

கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகளினால் சுரக்கப்படும் ஹார்மோன்கள். இவற்றிலுள்ள ஆல்பா செல்கள் குளுக்கோகானையும், பீட்டா செல்கள் இன்சுலினையும் சுரக்கின்றன.

இன்சுலின் குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றி, கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கிறது. மாறாக, குளுக்கோகான் கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுகிறது.

இன்சுலின் மற்றும் குளுக்கோகான் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக செயல்பட்டுதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கின்றன.

80 - 120 மில்லிகிராம்/டெசிலிட்டர்

இன்சுலினின் அளவு உடலில் குறைவாக சுரப்பதால் தான் மனிதர்களுக்கு டயாபட்டிஸ் மெலிடஸ் என்ற நோய் உருவாகிறது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

எறும்புகள் ஒருபோதும் தூங்குவதில்லை.

தங்க நிற மீன்களை (கோல்டன் ஃபிஷ் - golden fish / gold fish) நீண்ட நேரம் இருட்டு அறையில் வைத்திருந்தால், அவை அடிக்கடி வெள்ளை நிற நிறமாக மாறும்.

பூமியில் 13 சதவீத மக்கள் இடதுகைப் பழக்கம் (left handed) உள்ளவர்கள்.

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் சுமார் 75 ஆயிரம் லிட்டர் (75000 litre water) நீரைப் பருகுகிறான்.

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்பெயின் நாட்டு மன்னன், இரண்டாம் பிலிப்பின் (King Philip II of Spain) பாதிரியார் மாளிகை (Episcopal Palace) 1200 கதவுகளைக் கொண்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக