Ads Here

07 ஜனவரி, 2020

இயற்பியல் குறிப்புகள் மற்றும் வினா விடைகள்

இயற்பியல் என்பது இயற்கையை விளக்குகிறது.

திருகு அளவியின் மிகக்குறைந்த அளவு அளக்கும் திறன் (மீச்சிற்றளவு) - 0.001 cm

திருகு அளவியில் உள்ள உலோகச் சட்டத்தின் வடிவம் - U வடிவம்

திருகு அளவியில் உள்ள மில்லி மீட்டர் அளவுகள் புரிக்கோல் அளவுகள் என்று அழைக்கப்படுகிறன.

திருகு அளவியின் குவிந்த முனை 100 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருகு அளவியின் குவிந்த முனைக்கு தலைக்கோல் என்று பெயர்.

மீயொலியை உருவாக்கும் தன்மை கொண்ட விலங்கு - டால்பின்

திருகு அளவியின் திருகு, அளவுக்கதிகமாக திருகப்படுவதை தடுப்பது - பற்சட்டம்

திருகு அளவி திருகு தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது.

திருகு அளவியின் முனை முன்னோக்கி நகரும் தொலைவு, சுற்றப்பட்ட சுற்றுகளின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்.

திருகின் முனை நகரும் தொலைவு, இரு அடுத்தடுத்த புரிகளுக்கிடையே உள்ள தொலைவுக்கு சமம்.

இரு அடுத்தடுத்த புரிகளுக்கிடையே உள்ள தொலைவுக்கு புரியிடைத்தூரம் என்றுபெயர்.

திருகு அளவியின் திருகின் முனை நகரும் தூரமே, திருகு அளவியின் மீச்சிற்றளவு எனப்படும்.

குமிழோடு திருகின் முனை இணையும் போது தலைக்கோலின் சுழிப்பிரிவு, புரிக்கோலில் வரைகோட்டுக்குக் கீழ் அமைந்தால் அது ‘நேர்ப்பிழை’ எனப்படும்.

குமிழோடு திருகின் முனை இணையும் போது தலைக்கோலின் சுழிப்பிரிவு, புரிக்கோலில் வரைகோட்டுக்கு மேல் அமைந்தால் அது ‘எதிர்ப்பிழை’ எனப்படும்.

தற்காலத்தில் பயன்படுத்தும் திருகு அளவி முறை - மின்னணு (DIGITAL) திருகுஅளவி

மிக நீண்ட தொலைவுகளை அளக்கப் பயன்படும் முறைகள் - எதிரொளிப்பு முறை, லேசர் துடிப்பு முறை, இடமாற்று தோற்ற முறை

நீண்ட தொலைவுகளை அளக்க பயன்படும் அலகுகள் - வானியல் அலகு, ஒளி ஆண்டு

புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம் வரையுள்ள சராசரித் தொலைவே 1 வானியல் அலகு ஆகும்.

வானியல் அலகின் குறியீடு – AU

1 வானியல் அலகு என்பது - 1.496 x 1011 மீட்டர் தூரம் 

1 ஒளி ஆண்டு என்பது - 3 x 108 மீட்டர்/விநாடி தூரம் 

திருகு அளவியின் திருகின் அச்சுக்கு இணையாக மில்லிமீட்டர் அளவுகோல் இருக்கும்.

தலைகோல் 100 பிரிவுகளை கொண்டது.

ஓய்வு நிலையில் உள்ள ஒரு பொருளை இயங்கச் செய்வது – விசை

இயக்கத்தில் உள்ள ஒரு பொருளை ஓய்வு நிலைக்கு கொண்டு வருவது – விசை

ஒரு பொருள் ஓய்வு நிலையை மாற்றுகின்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல் – விசை

விசை என்பது ஒரு வெக்டர் அளவு.

விசையின் S.I. அலகு - நியூட்டன்

ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் அப்பொருளின் இயக்க நிலையை மாற்றாமல் இருந்தால் அவை சமமான விசைகள் எனப்படும்.

இரு விசைகளின் தொகுபயன், ஒரு பொருளின் மேல் செயல்பட்டு அதனை இயங்கச் செய்யுமானால் அவ்விசைகள் சமமற்ற விசைகள் எனப்படும்.

இயங்கும் பொருட்களில் உராய்வு விசையானது, பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும்.

சாய்தளத்தில் பொருள்களின் இயக்கத்தை ஆய்வு செய்தவர் - கலிலியோ கலிலி

‘இயங்கும் பொருளின்மீது புறவிசையொன்று செயல்படாதவரை, அது தொடர்ந்து மாறாத வேகத்தில் இயங்கும்’ என்று கூறியவர் -  கலிலியோ கலிலி

கலிலியோ கலிலி பிறந்த ஆண்டு – 1564

நியூட்டனின் மூன்றாவது விதி வெளிப்படக் காரணமான நிகழ்வு - கலிலியோ கலிலியின் இயக்க விதி

கலிலியோ கலிலி இத்தாலி நாட்டை சார்ந்தவர்.

இயக்கம் பற்றிய மூன்று விதிகளை (இயக்க விதிகளை) வெளியிட்டவர் – ஐசக் நியூட்டன்

‘புறவிசையொன்று செயல்படாதவரை இயக்க நிலையில் அல்லது ஓய்வு நிலையில் உள்ள பொருள் ஒன்று தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்’ என்பது நியூட்டனின் முதல் இயக்க விதி.

நியூட்டனின் முதல் இயக்க விதி என்பது – நிலைமம்.

திடீரென இயங்க ஆரம்பிக்கும் பேருந்து ஒன்றில், நின்று கொண்டிருப்பவர் பின்னோக்கி விழுவது நிலைம விதி.

கேரம் விளையாட்டில், காய்களை அடிக்கும் போது காய் நகருவது நிலைம விதிக்கு உதாரணம்.

நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையை மாற்றிக் கொள்ளவியலாத தன்மையே நிலைமம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பொருளின் நிலைமம் பண்பு, நிறையை சார்ந்து அமைகின்றது.

தொடர் வண்டியில் நிலைமம் மிகவும் அதிகமாக காணப்படும்.

ஒரு பொருளின் நிலைமம் நிறையை கொண்டு அளவிடப்படுகிறது.

உந்தம் நியூட்டனால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு பொருள் ஏற்படுத்தும் தாக்கம், அதன் நிறை மற்றும் திசைவேகத்தைப் பொருத்து அமைகிறது.

நிறையும் திசைவேகமும் சேர்ந்து உருவாக்கும் இயற்பியல் அளவே உந்தம் எனப்படும்.

நேர்க்கோட்டு உந்தம் என்பது p = mv

பொருளின் நிறை (m) மற்றும் அதன் திசைவேகம் (v) ஆகியவற்றின் பெருக்கற்பலனே உந்தம் எனப்படும்.

உந்தம் என்பது ஒரு வெக்டர் அளவு.

உந்தத்தின் திசை எப்பொழுதும் அதன் திசைவேகத்திலேயே அமையும்.

உந்தத்தின் அலகு – Kg m s-1

உந்த மாறுபாட்டு வீதம் சமமற்ற விசைக்கு எதிர்த்தகவில் அமையும்.

விசையின் அலகு – Kg m s-2

நிறை மற்றும் முடுக்கம் இவற்றின் பெருக்கற்பலனே விசை எனப்படுகிறது.

‘ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு’ என்பது நியூட்டனின் மூன்றாம் விதி.

‘துப்பாக்கி சுடுதல்’ என்பது நியூட்டனின் மூன்றாம் விதிப்படி நடக்கிறது.

‘சமமற்ற புறவிசைகள் செயல்படாத வரை ஓர் அமைப்பின் மொத்த உந்தம் மாறாது.’ என்பது உந்தம் மாறாக் கோட்பாடு.

பொருளின் மீது செயல்படும் விசையை சார்ந்து, அப்பொருளை இடஞ்சுழி திசையில் சுழற்றினால், அதன் திருப்புத்திறன் இடஞ்சுழி திசையில் இருக்கும்.

விசையின் திருப்புத்திறனின் அலகு – நியூட்டன்-மீட்டர்

வலஞ்சுழித் திருப்புத்திறன் எதிர்க்குறி குறியீடு கொண்டு குறிப்பிடப்படுகிறது.

ஐசக் நியூட்டன் பிறந்த ஆண்டு - 1720

ஐசக் நியூட்டன் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்.

கோள்களுக்கும், சூரியனுக்கும் இடையே செயல்படும் விசை - சூரியனின் ஈர்ப்பு விசை

அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்ற பொருள்களின்மீது செலுத்தும் ஈர்ப்புவிசை - அப்பொருட்களின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடைப்பட்ட தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.

இரு பொருள்களின் மையங்களை இணைக்கும் நேர்க்கோட்டின் வழியே செயல்படுவது விசை.

நிறை என்பது ஓர் அடிப்படை அளவு ஆகும்.

எடை, முடுக்கம் என்பவை வழி அளவுகள் ஆகும்.

நிறையின் அலகு – கிலோகிராம்

எடையின் அலகு - நியூட்டன்

வில் தராசினால் அளக்கப்படுவது – எடை

இயற்பியல் தராசினால் அளக்கப்படுவது – நிறை

இடத்திற்கு இடம் மாறாது நிலையாக இருப்பது – நிறை

நிறை என்பது - பருப்பொருளின் அளவு

நிலவில் நம் உடலின் எடை மாறும்.

நிலவில் நம் உடலின் நிறை மாறாது.

புவியின் ஈர்ப்பு விசையை விட நிலவின் ஈர்ப்பு விசை குறைவு.

எடை என்பது w = mg

புவியீர்ப்பின் காரணமாக பொருளின் இயக்கத்தைப் பற்றி முறையான ஆய்வினை முதன்முதலில் மேற்கொண்டவர் – கலிலியோ கலிலி

‘வெற்றிடத்தில் எல்லா பொருட்களும் சம வேகத்தில் கீழே விழுகின்றன என்ற உண்மையைக் கூறியவர்’ – கலிலியோ கலிலி

வெற்றிடத்தில் கனமான கல் மற்றும் லேசான ஓர் இறகு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் கீழே விழச்செய்தால், இரண்டுமே சமமான வேகத்தில் கீழே விழும்.

ஈர்ப்பு விசையினால் பொருளில் ஏற்படும் முடுக்கம் - ஈர்ப்பு முடுக்கம்

புவியீர்ப்பு முடுக்கம் g என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.

புவிஈர்ப்பு முடுக்கத்தின் அளவு g = 9.8 ms-2

புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பொருளின் எடையைப் பொருத்தது அல்ல.

புவியீர்ப்பு முடுக்கத்தின் அளவு 45° அட்சரேகையின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகிறது.

சந்திராயன்-1 -ன் திட்ட இயக்குனர் – மயில்சாமி அண்ணாதுரை.

சந்திராயன்-1 நிலவிற்கு அனுப்பட்ட நாள் - அக்டோபர் 10, 2008ஆம் ஆண்டு.