Electronegativity (எலக்ட்ரான் கவர் திறன்)
Definition
v Periodicity of properties (ஆவர்த்தனப் பண்புகள்)
v It is property of a bonded atom.
v Electro negativity measures the inclination of an atom to pull the electronic cloud in its direction during chemical bonding with another atom.
v Electronegativity may be defined as the tendency of an atom in a molecule
to attract towards itself the shared pair of electrons.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுவானது பிணைப்பிலுள்ள எலக்ட்ரான்
ஜோடியை தன்பால் ஈர்த்துக் கொள்ளும் பண்பே எலக்ட்ரான் கவர் திறன் எனப்படும்.
Dependency
v The main factors, which the electronegativity depends, are (1) effective
nuclear charge [பயனுடைய அணுக்கரு மின்சுமை] and (2) atomic radius [அணு ஆரம்]. Greater the effective nuclear charge greater is the
electronegativity. Smaller the atomic radius greater is the electronegativity.
v In binary compounds of non-metals,
the more electronegative atom has negative oxidation number, but less
electronegative atom has positive oxidation number.
இரு அலோக அணுச் சேர்மங்களில், அதிக எலக்ட்ரான்கவர்தன்மை உள்ள அணு
எதிர் ஆக்ஸிஜனேற்ற எண்ணையும், குறைந்த எலக்ட்ரான்கவர்தன்மை உள்ள அணு நேர்
ஆக்ஸிஜனேற்ற எண்ணையும் பெற்று இருக்கும்.
(Example) : Oxidation
number of Cl in ClF3 is
positive (+3) while that in ICl is
negative (-1).
(எடுத்துக்காட்டு) : ClF3 சேர்மத்தில் Clக்கு நேர் (+3) ஆக்ஸிஜனேற்ற எண்ணும், ICl சேர்மத்தில் Clக்கு எதிர் (-1) ஆக்ஸிஜனேற்ற எண்ணும் அமைந்துள்ளன.
Pauling’s Scale
Pauling's
scale is a widely used method to order chemical elements according to
their electro negativity. Nobel prize winner Linus Pauling developed this
scale in 1932.
Values of electro negativity
v The values of electro negativity are
not calculated, based on mathematical formula or a measurement. It is more like
a pragmatic range. It is a number and has no units.
v Pauling gave the element with the highest
possible electro negativity (most electronegative element – least
electropositive element), Fluorine, a value of 4.0 (பாலிஸ்
அளவீடு). Francium or Cesium,
the element with the lowest possible electro negativity (least
electronegative element – highest electropositive element), was given a
value of 0.7. All of the remaining elements are given a value of somewhere
between these two extremes.
v ஒரு தனிமத்தின் எலக்ட்ரான்கவர்ஆற்றலின் (Electronegativity) மதிப்பிலிருந்து பிணைப்புத் தன்மையை நிர்ணயிக்கலாம் (bond character). இரண்டு அணுக்கள் ஒரே எலக்ட்ரான்கள் கவர் ஆற்றலை பெற்றிருந்தால் அவை சகபிணைப்பைப் (covalent) பெற்றிருக்கும். மாறாக, அதிக எலக்ட்ரான்கவர்ஆற்றல் வேறுபாடு இருந்தால் அயனிப் பிணைப்பைப் (ionic bond) பெற்றிருக்கும். தூய சகப்பிணைப்பு (purely covalent bond) மற்றும் தூய அயனிப் பிணைப்பு (purely ionic) ஆகிய இரண்டுக்குமிடையே பிணைப்புகள் வெவ்வேறு அயனிப் பண்பைப் பெற்றுள்ளன (different degrees of ionic character). அளவீட்டுப்படி (As a rough estimate), எலக்ட்ரான் கவர் ஆற்றல் வேறுபாடு 1.7 இருந்தால், அதில் 50% அயனித்தன்மை இருக்கும். 1.7ஐ விட குறைவாக இருந்தால் சகபிணைப்பையும், 1.7ஐ விட அதிகமாக இருந்தால் அயனிப் பிணைப்பையும் பெற்றிருக்கும்.
v இது
தொகுதி அல்லது வரிசையில் ஒழுங்காக மாறுகிறது.
v ஒரு வரிசையில் (period) இடமிருந்து
வலமாகச் செல்லும்போது எலக்ட்ரான் கவர் ஆற்றல் அதிகரிக்கும். வரிசையில் அணு
ஆரம் குறைவதும், அணுக்கரு மின்சுமை (nuclear charge) அதிகரிப்பதுமே
இதற்குக் காரணமாகும். ஹாலஜன்கள் அதிக
எலக்ட்ரான் கவர் மதிப்பைப் பெற்றுள்ளன.
v தொகுதியில் (group) கீழிறங்கும் பொழுது எலக்ட்ரான்
கவர் ஆற்றல் மதிப்பு குறைகிறது. அணு ஆரம் உயருவதே இதற்குக் காரணமாகும்.
v Diagonal relationship between
Beryllium and Aluminium (பெரிலியத்திற்கும் அலுமினியத்திற்கும் இடையேயுள்ள மூலைவிட்ட தொடர்பு)
பெரிலியம் தனிம வரிசை அட்டவணையில் இரண்டாம் வரிசைத் தொடரில் (period) உள்ளது. இத்தனிமம் இரண்டாம் தொகுதியை சார்ந்த அதன் தொகுதி தனிமங்களைக் காட்டிலும் 13ம் தொகுதியில் உள்ள அலுமினியம் தொகுதியின் பண்புகளைப் பெற்றுள்ளது. இத்தனிமத்தின் மிகச்சிறிய அளவு மற்றும் அதிக எலக்ட்ரான்கவர்தன்மை ஆகியவைகளே பெரிலியத்தின் அசாதாரணமாக பண்பிற்குக் (anomalous behaviour) காரணமாகும். இவ்விரு காரணங்களுமே, Be2+ அயனியின் முனைவுறும் தன்மையினை (polarizing power) அதிகரிக்கச் செய்து, Al3+ அயனியின் முனைவுத் தன்மைக்கு சமமாகவும் மாற்றுகின்றன. எனவே, பெரிலியமும் அலுமினியமும் பல பண்புகளில் ஒன்றுபட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக