Ads Here

06 டிசம்பர், 2019

இணையத்திலும் இயந்திரங்களிலும் மின்னணுத் தமிழ் வளர ஒன்றுபடுங்கள் நண்பர்களே!

நண்பர்களே !

உலகில் உள்ள எண்ணற்ற மொழிகளுள் தனித்தியங்கும் நம் தமிழ்மொழியின் இணையப் பயன்பாடு 4G, 5G என்ற வேகத்தில் வளர்ந்துவரும் இன்றைய நவீன காலகட்டத்தில், வியத்தகு அளவில் வளர்ந்து வருகின்றது. ஆங்கிலம், இந்தி, வங்காளம், மராத்தி, தெலுங்கு போன்ற நமக்கு அறிமுகமான பல மொழிகளைக் காட்டிலும், தமிழில் இணையப் பயன்பாட்டு மூலங்கள் (IoT - Internet of Thingsமிகக்குறைந்த எண்ணிக்கையிலே உள்ளன. இருப்பினும் இந்த மிகஅதிகளவிலான பயன்பாட்டிற்குக் காரணங்கள் பல: 
  1. தாய்மொழியில் கிடைக்கும் புரிதலுணர்வு
  2. நம்மிடையே இயற்கையாக வெளிப்படும் தமிழுணர்வு.
  3. இயற்கையாகவே தமிழின் மிகப்பெரும்பான்மையான சொற்கள் ஏதேனும் ஒரு காரணத்தை கொண்ட காரணச்சொற்களாகவே உள்ளன. பிறமொழிச் சொற்களைவிட அவற்றை நம்மால் அழகாகவும் மிகஎளிதாகவும் உச்சரிக்கவும், புரிந்துக்கொள்ள முடிகிறது.  
  4. தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. எம்மொழியில் பிறக்கும் குழந்தைகளும், பிறந்தவுடனே 'அம்மா' என்று தாய்த்தமிழ் மொழியைப் பேசிவிட்டுதான் பிற மொழிகளை கற்கின்றன. என்னே ஒரு விந்தை!
  5. பிறமொழிகளில் அதிகளவில் கலந்துள்ள தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள். (தமிழில் மட்டுமே இந்த வேர்ச்சொற்கள் உள்ளன) இன்று தமிழை ஆராயும் வேற்றுநாட்டவர்கள் கூட, 'எந்த ஒரு பிறமொழிச் சொல்லின் வேர்ச்சொற்களை கூர்ந்து ஆராய்ந்தாலும் அவை தமிழ்ச்சொற்களாகவே அல்லது காலமாற்றத்தில் திரிந்துபோன தமிழ்ச்சொற்களாகவோ உள்ளன' என்று ஒப்புக்கொள்கின்றனர். சான்றாக. பாகிஸ்தானில் அமைந்திருக்கும் சிந்து சமவெளி நாகரீகத்தின் ஊர்ப்பெயர்கள்.
ஆகவே, தமிழ் மொழியின் இணையப் பயன்பாடு இனி இன்னும் பல திசைகளில் பயணிப்பதற்கும், பரிணாமிப்பதற்கும் நாம் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு பரிணமிக்க தமிழுக்குத் தேவையான அடிப்படை மின்னணு பயன்பாட்டு மூலங்கள்:
  1. Offline Tamil OCR (Optical Character Recognition) - இணைய இணைப்பு இல்லாமலேயே போட்டோ, கையெழுத்து, சுவடிகள், மின்திரை போன்றவற்றிலிருந்து தமிழ் எழுத்துக்களை எடுக்கவல்லது.
  2. Offline Tamil TTS (Text-To-Speech) engine - இணைய இணைப்பு இல்லாமலேயே, திரையில் உள்ள தமிழ் எழுத்துக்களை பேச, குரல் துணுக்குகளாக மாற்றவல்லது
  3. Offline Tamil STS (Speech-To-Text) engine - இணைய இணைப்பு இல்லாமலேயே, தமிழில் பேசபேச அவற்றை அப்படியே புரிந்துகொண்டு தமிழ் எழுத்துக்களாக மாற்றம் செய்யவல்லது.
  4. Offline Tamil Audio clip to Tamil Text converting transcription service - இணைய இணைப்பு இல்லாமலேயே, தமிழ் குரல் துணுக்குகளை தமிழ் எழுத்துக்களாக மாற்றம் செய்யவல்லது.
  5. Offline Tamil text grabber from PC/Android screen without taking screenshot - இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆன்ட்ராய்டு/கணினி தொடுதிரையில் உள்ள எழுத்துக்களை (ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டோவாக மாற்றாமலேயே) OCR உதவிகொண்டு, தமிழ் எழுத்துக்களை எடுக்கவல்லது.
  6. Full-featured Computer Programming Language in Tamil - தமிழ் மொழியில் செயல்படும் ஒரு கணினி நிரலாக்க மொழி - தமிழ் மொழி ஆங்கிலத்தைக் காட்டிலும் மிகவும் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்ட ஒரு மொழி. ஆகவே இது எளிதே.
  7. மிகப்பெரிய, விளம்பரங்கள் இல்லாத ஆன்லைன் தமிழ் கலைச்சொல் அகராதி - இதில் யார் வேண்டுமானாலும் கலைச்சொற்களை சேர்க்க முடிய வேண்டும்.
  8. தமிழ் மொழியின் இணைய வளர்ச்சிக்கென்றே ஆங்காங்கே பல கல்லூரிகள், Websites, Community Groups, etc. (ஏன் எந்த கட்டாயமும் இல்லாத, பல்நோக்குத் திறமுடைய தமிழ் வளர்ச்சிப் பல்கலைக்கழகங்களையும், தமிழ் கலைச்சொல் பல்கலைக்கழகங்களையும், தமிழ் மொழிப்பெயர்ப்புப் பல்கலைக்கழகங்களையும் உருவாக்க கூட உருவாக்கலாம்!)
  9. புதிதாக அறிமுகமாகும் மென்பொருட்களை தமிழில் வெளியிட கட்டாயப்படுத்தவும், தமிழ் மொழிப்பெயர்ப்புகளை அதிகரிக்கவும் என ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணக்கர் குழுக்களை அமைக்க வேண்டும்.
தமிழ் மொழிக்கு ஏன் இப்படிப்பட்ட அடிப்படை மென்பொருட்கள் தேவை ?
  1. சில மேம்பட்ட வசதிகளுடன் கூடிய தமிழ் மென்பொருட்கள் இன்றும்கூட இலவசமாக கிடைப்பதில்லை. அவைகூட Google, Microsoft போன்றவற்றால் பெரும்பாலும் லாப நோக்குடன் உருவாக்கப்பட்டவை. மொழிவளர்ச்சிக்காக அல்ல.
  2. முக்கியமாக, உயர்நிலை, மேல்நிலைக் கல்விக்கான காணப்படும் கற்றல் சார்ந்த மூலங்கள் தமிழில் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன. எனவே தமிழ்வழிக் கல்வி வளர இவை தேவை.
  3. சந்தைகளில் தமிழ் மொழி சார்ந்த Open Source Softwares மிகக்குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. இதனால் தமிழ் மென்பொருள் மேம்பாட்டாளர்களும் சரியான மூலதனம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.
  4. இன்றைய நாளில் PDF Documents அதிகளவில் பகிரப்படுகின்றன. ஆனால் இவை ஆங்கில மொழியை மட்டுமே Copy செய்ய அனுமதிக்கின்றன. இவைகளில் உள்ள  கருத்துக்களை தமிழ் போன்ற இதர மொழிகளில் நாம் மற்றவருக்கு பகிர வழியே இல்லாத மிகப்பெரும் அவலநிலை இருக்கிறது. இவ்வாறு அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருப்பதால் தான் ஆங்கிலம் பெருமளவில் வளர்கின்றது.
  5. இந்தியாவில் தற்போது வெளிவரும் மென்பொருட்களில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் சேர்த்து திணிக்கும் வகையில் மைய அரசாங்கமே மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. உதாரணமாக ஆன்ட்ராய்டில் Google TTS Serviceல் Hindi மொழி மட்டுமே Offlineல் கிடைப்பது (பல ஆண்டுகாளாக கோரியும் தமிழ் மொழி இன்றும் சேர்க்கப்படவில்லை), Jio Cinemaவில் ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி மொழியையும் பயனர்கள் Disable செய்ய முடியாமல் போவது.
  6. இனம், மதம் என்று பிரிந்திருக்கும் நம்மை இக்காலத்தில் இணைக்கவல்லது இயற்கையின் தமிழ்மொழி ஒன்றே! ஆகவே நம் தாய்மொழி வளரவளர நாமும் நெருங்கி நெருங்கி மீண்டும் ஒருநாள் ஒன்றிணைவோம்.
  7. இன்றைய காலகட்டத்தில் ஆங்கில மொழி இருக்கும் நிலையை, இதே வளர்ச்சிநிலையில் செல்லும் தமிழ் மொழி அடைய எத்தனை வருடங்கள் ஆகும் என்று எவராலும் சரியாகக் கூறிவிட முடியாது. எனவே இதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தேவை.
தமிழ் இணையப் பயன்பாட்டை அதிகரிக்க சில வழிகள்.
  1. பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் எழுதுவது சுலபம் என்றும், அதில்தான் சிறிய வார்த்தைகள் கொண்ட சொற்கள் அதிகம் என்றும் கூறுவார்கள். அது தவறு. 247 எழுத்துக்கள் கொண்ட தமிழ் அல்லது 26 எழுத்துக்கள் கொண்ட ஆங்கிலம் இவற்றில் எதில் அதிகளவில் சிறிய சொற்களை அமைக்க முடியும்? உண்மையான காரணம் அப்படிப்பட்ட சிறிய தமிழ் சொற்களை நாம் காலப்போக்கில் மறந்துவிட்டோம் அல்லது ஆங்கிலத்தைப்போல புதிதுபுதிதாக உருவாக்கத் தவறிவிட்டோம்! எனவே தமிழ் எழுத்துக்களிலேயே உங்கள் கருத்துக்களை இனி பகிருங்கள்.
  2. தமிழில் சுலபமாக எழுதிப் பழகுங்கள். தற்போது Azhagi, Gboard போன்ற மென்பொருட்கள் எளிமையாக உள்ளன. இவற்றில் Handwriting, Glide typing, Voice Typing போன்ற முறைகளில் மிக விரைவாக தமிழில் எழுத முடியும்.
  3. Tamil Documents தயாரிக்க Voice Typing, Google Lens OCR feature போன்றவற்றை பயன்படுத்தி விரைவாக உருவாக்குங்கள். பழைய முறைகளில் டைப்பிங் செய்து நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்காதீர்கள்.
  4. Tamil Documentகளை பகிரும் போது PDF போன்ற File typeகளில் பகிராதீர்கள்‌. இவற்றில் இருந்து தமிழ் எழுத்துக்களை Copy செய்ய முடியாததால், அனைவரும் அவற்றில் தமிழில் இருக்கும் மிகச்சிறந்த கருத்துக்களை தேடவும், பயன்படுத்தவும் முடியாமல் போய்விடுகிறது. முடிந்தவரை Editable Tamil Documents (Word, Unicode Tamil Text File, EPUB)-களை பெரிய மனதுடன் பகிருங்கள்.
  5. நூலாசிரியர்கள் தயவுசெய்து கல்வி சம்பந்தமான புத்தகங்களை Editable Tamil Documents ஆக மின்னணு புத்தகங்களாக வெளியிட வேண்டும். கவலை வேண்டாம். மின்னணு புத்தகங்களை யாரும் இதுவரை முழுவதும் படிக்க பயன்படுத்துவதில்லை. ஆகவே மக்கள் மிகச்சிறந்த கருத்துக்கள் முழுமையாக படித்தறிய காகிதப் புத்தகங்களை பணம் கொடுத்து கண்டிப்பாக வாங்கித்தான் தீர்வார்கள். மேலும் கல்வியை இன்றுவரை நாம் வியாபார நோக்கோடு பார்த்ததால் அல்லவாவா இந்த நிலையில் இருக்கிறோம். கல்வியும் தொழில்நுட்பமும் பகிரப்பகிரத்தான் அசுர வளர்ச்சியடைந்து நன்மை பயக்கும். வியாபார நோக்கோடு பார்த்ததால் அவை தீயகாரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு ஒவ்வொருவரையும்  அடிமையாக்கி பிரித்துவிட்டு, கடைசியில் அழித்துவிடும்
  6. தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்காக Telegram, Whatsapp, Facebook போன்றவற்றில் குழுக்களை உருவாக்கி, மனிதர்களை ஒன்றுபடுத்துங்கள். மேலும் இதனால் மென்பொருட்களை சரியான அளவில் கட்டமைக்க முடியும். ஏற்கனவே உள்ள தமிழ்  மென்பொருட்களில UI, Accessibility போன்றவற்றை மேம்படுத்தி, அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து thing'sஐ integrate செய்யுங்கள்.
  7. இணையத்தில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் (வங்கி சலான்களை நிரப்புதல் போன்ற சிறு செயல்களில் இருந்து ஆரம்பியுங்கள்) தமிழின் பயன்பாடுகளை அதிகரியுங்கள். அவை சுற்றுப்புறச் சுழல்களில் இருந்து தொடர்ந்து தமிழ் வளர்ச்சிக்கு ஓர்உந்துதல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
தற்போது கிடைக்கும் தமிழ் பயன்பாடு கொண்ட மென்பொருட்கள் :
  • ஆன்ட்ராய்டு : Google Lens feature & integration, Google Docs, Google Tamil TTS, Google Live Transcribe, Microsoft Translate, Transcriber for Whatsapp, Webreader, TTSReader Pro - Text to Speech - இவை அனைத்தும் ஆன்லைன் செயலிகளே.
  • கணினிDragon Tamil OCR (Windows, minimum 4gb RAM), GT text (Tamil Offline OCR available ஆனால் சரியாக இல்லை), Azhagi+ Tamil Unicode Keyboard (Offline)

ஆகவே இது போன்ற தமிழ் மொழி சார்ந்த இணைய செயல்பாடுகளை துரிதப்படுத்துங்கள். அவற்றை வெற்றிகரமாகவும் நிறைவேற்றுங்கள். என்றும் இணைந்திருப்போம். 
வளர்க இணையத் தமிழ்
இப்படிக்கு அனுதாபி/அபிமானி/அபுதாபி. 
(எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.)