Ads Here

03 பிப்ரவரி, 2022

பொது அறிவு

  • ஆங்கிலத்தில் dous என்று முடியக்கூடிய சொற்கள் சிலவே உள்ளன. அவை tremendous (மிகப்பெரியது), horrendous (பயங்கரமான) , stupendous (அற்புதமான), hazardous (தீங்கு விளைவிக்கக்கூடிய), apodous (வெறுக்கத்தக்க).
  • வானில் சூரியனும் சந்திரனும் ஒரே அளவாகத் தோன்றுவதற்கு ஒரு வியக்கத்தக்க தற்செயல் நிகழ்வே காரணம் ஆகும். உண்மையில் சந்திரன் சூரியனைவிட 400 மடங்கு சிறியதாக இருந்தாலும், பூமிக்கு சந்திரன் சூரியனைவிட 400 மடங்கு நெருக்கமாக அமைந்திருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
  • துணி துவைக்க எது சிறந்தது - சோப்பு (Soap) அல்லது டிடர்ஜென்ட் (Detergent) ?
டிடெர்ஜென்ட் தான் சோப்பை விட கறையை நன்கு அகற்றும். டிடெர்ஜென்ட் பவுடர் வடிவிலோ அல்லது பார் வடிவிலோ கிடைக்கிறது. 'டிடெர்ஜென்ட் சோப்' என்று இரண்டையும் சேர்த்து அழைக்கக்கூடாது. Tide Detergent Bar என்ற டிடெர்ஜென்ட் தான் எனக்கு தெரிந்த அளவில் சோப்பைக் காட்டிலும் சிறந்தது.
  • சைப்ரஸ் (Cyprous) என்பது மத்திய தரைக்கடல் பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது ஐரோப்பிய கண்டத்தை சார்ந்த நாடாகும். இதன் தலைநகரம் நிகோசியா (Nicosita) நகரம் ஆகும்.
  • வானத்தில் பஞ்சு போன்று காணப்படும் மேகங்களை திரள் மேகங்கள் (Cumulus Clouds) என்று அழைக்கிறோம். ஒரு சிறிய திரள் மேகம் கூட இரண்டு யானைகள் மற்றும் இரண்டு விஞ்ஞானிகள் சேர்ந்தாற் போன்ற எடையுள்ளதாக இருக்கும்.
  • ஸ்காட்லாந்து நாட்டின் தேசிய விலங்கு புராணகால உயிரினங்களில் ஒன்றான யூனிகார்ன் (Unicorn) எனப்படும் ஒற்றைக் கொம்புக் குதிரை.
  • 1096ல் தோற்றுவிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (Oxford University), வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் இருந்த ஆஸ்டெக் (Aztec) பேரரசை விட மூத்தது அல்லது பழமையானது.
  • அக்பரின் தூண்டுதலின் காரணமாக பைராம்கான் எங்குக் கொல்லப்பட்டார்? - குஜராத்
  • மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து ___ ஆம் ஆண்டில் சித்தூரையும் ____ ஆம் ஆண்டில் ராந்தம்பூரையும் கைப்பற்றினார். - 1568, 1569
  • உதய் சிங்கின் மகனான ராணா பிரதாப்பை ஹால்டிகாட் (ஹால்திகாட் / ஆல்திகாட்) போரில் அக்பர் வெற்றி கொண்ட ஆண்டு? - 1576
  • அக்பர் இயற்கை எய்திய ஆண்டு? - 1605
  • அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது? - ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவில்
  • முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ____ வரியை அக்பர் நீக்கினார். - ஜிசியா
  • அக்பரின் அளவில்லா மதிப்பைப் பெற்றிருந்த சூபி துறவி யார்? - சலீம் சிஸ்டி
  • அக்பர் யாருக்கு அமிர்தசரசில் இடம் வழங்கினார்? - சீக்கிய குருவான ராம்தாஸ்
  • ஹர்மிந்தர் சாகிப் கருவறை எங்குக் கட்டப்பட்டது? - அமிர்தசரஸ்
  • இபாதத்கானா என்னும் மண்டபம் அக்பரால் எந்த நகரில் கட்டப்பட்டது? - பதேப்பூர் சிக்ரி
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் நியூடெல்லா (Nutella) உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது சாக்லெட் கேக் மற்றும் மாவுத் தின்பண்டங்களை தயாரிக்கும் ஒரு இத்தாலிய நிபுணர், தனது கோகோயா (Cocoa) தூளை நீட்டிக்கச்செய்ய, எதேச்சையாக சாக்லேட் உடன் ஹேசல்நட்ஸ் (Hazelnuts) எனப்படும் ஜாதிபத்திரிக்காய்களை கலந்து விட்டதால் கிடைத்தது.
  • இந்தியாவில் விலையேற்றத்திற்கு மூலக்காரணங்கள் :
    1. பெட்ரோலிய நிறுவனங்கள் - ரிலையன்ஸ், இந்துஸ்தான் ஆயில், போன்றவை தான்.
    2. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் - ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ - இவற்றின் பயன்படுத்தப்படாத ரீசார்ஜ் பணத்தை திரும்ப பெற முடிவதேயில்லை.
    3. மக்கள் மூன்றாவதுதான். 
  • மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் எத்தனை வகைகள்!
    Motocross Racing என்று சொல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பல வகைகள் உள்ளன.
    (1) Free Style - ஃப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் வாகன ஓட்டி 360 கோணம், பேக் ப்ளிப் Backflip, அண்டர் ப்ளிப் Underflip போன்ற திறமைகளை காட்டுவர். அத்திறமைகளின் கடினத்தன்மை மற்றும் செயலாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
    (2) Enduro - உறுதியாளர் - இதில் வாகன ஓட்டி தனது வாகனத்தை இயற்கையான தடைகள் வழியாக செலுத்துவார். இயற்கையான தடைகள் எனப்படுபவை சிறிய தொங்கும் கிளைகள், கீழே விழுந்த மரக்கட்டைகள் போன்றவை. இப்போட்டி நீண்ட தூரம் கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
    (3) Trials - ட்ரையல் - இவ்வகை போட்டியில் வாகன ஓட்டி தடைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் (Terrains) வண்டியை ஓட்டுவார். தடைகளாக கற்பாறை துண்டுகளும் கீழே விழுந்த மரக்கிளைகளும் இருக்கும். இவ்வகை ஆட்டத்தில் என்ன சவால் என்றால் கால்களைக் கீழே பூமியின்மேல் தொடக்கூடாது. அப்படி தொட்டால் ஒவ்வொரு முறைக்கும் தண்டனைப் புள்ளிகள் உண்டு. ஆக மிகக் குறைந்த புள்ளிகளை பெற்றோரே இந்த ஆட்டத்தின வெற்றியாளர் ஆவார்.
    (4) Supercross - சூப்பர் கிராஸ் - இந்த ஆட்டம் பெரிய ஒரு விளையாட்டுத்திடலில் அமைக்கப்பட்ட செயற்கையான பாதையில் நடைபெறும். இந்தப் பாதையில் வாகன ஓட்டி வண்டிய தாவல்கள், வளைவுகள், மற்றும் சிறு சிறு மேடுகள் போன்றவற்றில் வண்டியை செலுத்த வேண்டியிருக்கும்.


Tags / Keywords / Search Terms :

  • Amazing Facts in Tamil
  • வியக்கவைக்கும் விடயங்கள்
  • வியத்தகு விடயங்கள்
  • Soap vs Detergent
  • motor race
  • bike games
  • motocross
  • motorace
  • மோட்டார் சைக்கிள் பந்தயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக