2019 நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்
- Gender Vulnerability Index (GVI). - பாலின பாதிப்பு குறியீடு - நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக 'கோவா'' மாநிலம் உள்ளது. அடுத்த இடத்தில் “கேரளா” உள்ளது. பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக "பீகார்" உள்ளது.
- பாரம்பரிய ரயில்வே அருங்காட்சியகம் - நீலகிரி மலை
- காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 10மீ 'ஏர் பிஸ்டல்' பிரிவில் ஹீனா சித்து தங்கம் வென்றார்
- காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் பிரகாஷ் நஞ்சப்பா தங்கம் வென்றார்.
- இந்தியக் கடலோரக் காவற்படையினால் இலங்கை கடலோர காவற்படைக்கு வழங்கப்பட்டுள்ள வருணா எனும் கடற்படை ரோந்து கப்பல் 'SCCG சுரக்ஷா'' எனப் பெயரிடப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற விழாவின்போது இலங்கை கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பை (IMS - Integrated Management System) செயல்படுத்திய இந்தியாவின் முதல் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உருவெடுத்துள்ளது.
- பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில், புலம் பெயர் உயிரினங்களுக்கான பான் உடன்படிக்கை(Bonn Convention)யின் உறுப்பு நாடுகளின் 12-வது குழுக் கூட்டம் அக்டோபர் 23-28 வரைநடைபெற்றுள்ளது. இதன் கருப்பொருள்: அவர்களின் எதிர்காலமே நமது எதிர்காலம் - வன உயிர்மற்றும் மக்களுக்கான நீடித்த வளர்ச்சி (Their Future is our future – sustainable Development for Wildlife & Peoples)
- ஸ்ரீரங்கம் கோயிலுக்கு "யுனெஸ்கோ”வின் சார்பில் ஆசிய-பசிபிக் மெரிட் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
- யுனெஸ்கோ வழங்கும் 2017-க்கான ஆசிய பசுபிக் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு விருது, மும்பையில் அமைந்துள்ள ராயல் ஒபரா மாளிகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிறுவப்பட உள்ள வீரசிவாஜி சிலை உயரத்தை, 689 அடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்திய ராணுவத்தில் முதன் முறையாக நாட்டு நாய்கள் இனமான முதோல் ரக நாய்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளன.
- இந்தியாவின் முதல் கறுப்பின மான்கள் சரணாலயம் அலகாபாத்தில் அமைக்கப்படும் என உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.