Ads Here

21 டிசம்பர், 2018

வைட்டமின்கள் (Vitamins)

வைட்டமின் - பெயர் - மூலப்பொருள் - குறைப்பாட்டு நோய்கள் - அறிகுறிகள்
(Vitamin - Name - Source - Disease caused by its deficiency - Symptoms)

உயிர்ச்சத்து - Vitamin
தாது / கனிம உப்பு   - Mineral Salt
தாது - Ore
கனிமம் - Mineral / Inorganic

  • வைட்டமின் A - ரெட்டினால்கள் & கரோட்டினாய்டுகள் (Retinols & Carotenoids) - பால் பொருட்கள், மீன், கல்லீரல், தாவர வகையிலிருந்து அடர்ந்த பச்சை நிறம் கொண்ட இலைகள், காய்கறிகள், காரட், பரங்கிகாய் - மாலைக்கண் நோய் (Night Blindness), ஹைபெர்கெரடோஸிஸ் (Hyperkeratosis) & கெரடோமலேசியா (Keratomalacia) - எலும்பு வளர்ச்சி குறைவு; பல் வளர்ச்சி குறைவு; திசுக்களின் வளர்ச்சி குறைவு; நோய் எதிர்ப்பு சக்தி குறைவு; சருமம்கண், வாய் உள்தசை, மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்றவை வறண்டு காணப்படுதல்
  • வைட்டமின் B கூட்டுக்குழுமம் (B complex vitamins)
    • வைட்டமின் B1 - தையமின் (Thiamine) - ஓட்ஸ், கைகுத்தல் அரிசி, காய்கறி, உருளைக்கிழங்கு, முட்டை  - பெரிபெரி (Beriberi) நோய் - மறதி, சோர்வு, நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, உண்மையில் நடக்காத நிகழ்ச்சிகளை நடந்தவையாகச் சொல்லும் உளவியல் குறைபாடு (Confabulation) 
    • வைட்டமின் B2 - ரிபோஃபிளவின் (Riboflavin) - பால் பொருட்கள், வாழைப்பழம் - ஏரிபோஃபிளவினோஸிஸ் (Ariboflavinosis) - உதட்டில் வெடிப்புகள் ஏற்படல், சூரிய ஒளிக்கு அதிக உணர்திறன் கொண்டிருத்தல், கடை வாய்ப் பகுதியில் ஏற்படும் புண்கள், வெடிப்புகள், நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண்
    • வைட்டமின் B3 - நியாசின் / நயசின் (Niacin / Nicotinic Acid) - அசைவம், மீன், முட்டை, காய்கறி  (ஆனால், அதிகம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்) - டிரிப்டோபான் குறைபாட்டுடன் சேர்ந்து 'பெல்லாக்ரா (Pellagra)' நோய் - சரும நோய், ஜீரண குறைபாடு, கெட்ட கொழுப்பு உருவாதல் 
    • வைட்டமின் B5 - பான்டோதெனிக் அமிலம் (Pantothenic Acid) - அசைவ உணவு, மீன், முட்டை, காய்கறி - பரெஸ்தீஷியா (Paresthesia) - symptoms
    • வைட்டமின் B6 - பைரிடாக்ஸின் (Pyridoxine) - அசைவம் காய்கறி, கொட்டைகள், வாழைப்பழம் - மைக்ரோசிடிக் இரத்தசோகை / அனீமியா (Microcytic Anemia) - சிறிய குருதிச் சிவப்பணுக்கள் உருவாதல்
    • வைட்டமின் B7 - பயோடின் (Biotin) - முட்டை, கடலை, கீரை - டெர்மாடிடிஸ் & என்டெரிடிஸ் (Dermatitis & Enteritis) - சரும பாதிப்பு, குடல் பாதிப்பு
    • வைட்டமின் B9 - ஃபோலிக் அமிலம் / இலைக்காடி (Folate / Folic Acid) - source - மெகலொப்லாஸ்டிக் இரத்தசோகை / அனீமியா (Megaloblastic Anemia) - symptoms
    • வைட்டமின் B12 - பலதரப்பட்ட கோபாலமின்கள் (Cobalamin) - அசைவ உணவுகள் - பெர்னிசியஸ் (தீவிர) இரத்தசோகை / அனீமியா (Pernicious Anemia) - சிவப்பணுக்கள் உருவாதல் தடுக்கப்படுதல்
  • வைட்டமின் C - அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic Acid) - பழங்கள், காய்கறிகள், கல்லீரல் - ஸ்கர்வி (Scurvy) - பல், சருமம், எலும்பு, ரத்த நாளங்களில் ஆரோக்கிய குறைப்பாடு, ஞாபகத் திறன் குறைவு
  • வைட்டமின் D - கால்சிஃபெரால் (Calciferol)- சூரிய ஒளி, பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் - ரிக்கெட்ஸ் & ஆஸ்டியோமலேசியா (Rickets & Osteomalacia) - எலும்பு, பல் வளர்ச்சி குறைபாடு, வளைந்த கால்கள், பெரியோருக்கு எலும்பு அடர்த்தி குறைதல், குழந்தைகளுக்கு பின் தலை தட்டையாகின்றது, ரத்தக் கொதிப்பு, எளிதில் நோய் பாதிப்பு ஏற்படுதல்
  • வைட்டமின் E - டோகோபெரால் & டோகோட்ரைனால் (Tocopherols & Tocotrienol) - நல்ல பழங்கள், காய்கறிகள், சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் - அபெடாலிபோப்ரோடெய்னெமியா (Abetalipoproteinemia) - symptoms
  • வைட்டமின் K - குயினோன் (Quinone) - பச்சை முட்டைகோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய், குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் - தொடர் வயிற்றுப்போக்கு, இரத்தம் உறையாமை (Bleeding Diathesis) - தொடர் வயிற்றுப்போக்கு, இரத்தம் உறையாமை

நீரில் கரையும் வைட்டமின்கள் - வைட்டமின்கள் B1, B6, B7, B12, C
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - வைட்டமின்கள் A, D, E, K