Ads Here

16 டிசம்பர், 2018

நான் முதல்வரானால்...


  • இட ஒதுக்கீடு கண்டிப்பாக உண்டு. ஆனால் சாதி, மத ரீதியிலாக இல்லாமல், மக்களின் பொருளாதார நிலையினை அடிப்படையாக கொண்டு, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் (Proportional Representation) அடிப்படையில் வழங்குவேன். 
    • நாட்டில் 80% ஏழைகளாக இருந்தால் 80% சதவீத இடங்கள் அவர்களுக்கே.
  • வங்கிகளுக்கிடையே 'வங்கிக் கணக்கு பெயர்வு' (Bank Account Portability) கட்டாயம்.
  • அனைவருக்கும் கல்வி கட்டாயம். 
    • அதிலும் தாய்மொழி வழியிலான 'நெறிமுறைக் கல்வி' (Ethical Study) கட்டாயம்.
    • ஒருவேளை பெரியவர்கள் சிறுவயதில் கல்வி கற்காமல் இருந்தால் கூட, அவர்களுக்கு கல்வி போதிக்கப்படும். இதற்கு சன்மானமாக, படிக்கும் காலத்தில் அவர்களுக்கு கூடுதலாக உதவித்தொகையும் வழங்கப்படும்.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழிக் கல்விக்கே முன்னுரிமை. இதற்கு முன்னோடியாக, அரசு பயன்பாட்டில், தாய்மொழி முன்னுரிமை பெற்று விளங்கும் வகையில், பல்வேறு துறைகளிலும் தாய்மொழி புகுத்தப் பட்டிருக்க வேண்டும். 
    • ஆராய்ச்சி படிப்புகளும் தொழில் நுட்ப படிப்புகளும் முன்னேற வேண்டும்
  • இணையம் சீர்செய்யப் பட்டு, அனைத்து தரவுகளும் தாய்மொழியில் ஒழுங்குப்படுத்தப்படும் (Organized Data). 
    • விளம்பரங்களுக்கென மட்டும் ஒரு குறிப்பிட்ட இணையதளம் ஆரம்பிக்கப்படுவதுடன், மற்ற இணையதளங்களில் அது தடையும் செய்யப்படும்
  • உலகின் அனைத்து துறை சார்ந்த நிகழ்வுகளையும், உடனுக்குடன் தாய்மொழியில் (பிறமொழிக் கலப்பின்றி) மொழியாக்கம் செய்தல் வேண்டும். இதற்கு ஏதுவாக மாநிலமெங்கும் மொழிப்பெயர்த்தலுக்கென்றே பல்கலைக்கழகங்கள் (Translation Universities) நிறுவப்பட வேண்டும்.
  • வேளாண்மையினை பொருத்தவரை பண்டமாற்று முறையே (Commodity Exchange) பின்பற்றப் படும்
    • இதன் மூலம் வேளாண்மை பெருமளவில் வளர்ச்சி பெறும்
    • இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, உற்பத்தியாளரே விலை நிர்ணயம் செய்யவும் இது வழிவகுக்கும்.
    • இடைத்தரகர்கள் இல்லாததால், அனைத்து பொருட்களும் அந்தந்த பகுதிகளிலேயே விளைவிக்கவும் செய்ய முடியும் (சிறிது காலம் பிடிக்கும் !) .
  • நாட்டில் வறுமை, பட்டினி முற்றிலும் அழிக்கப்படும் வரை, பணப்பயிர்களை வளர்க்கவும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்படும்.
  • தமிழ் மொழியில், கணினி இயங்குதளங்கள் (Operating Systems) நிரலாக்கம் / குறியீடு (Programming / Coding) செய்யப்பட்டு, வளர்ச்சிபெறவும் வகை செய்யப்படும்.
  • செல்வம் ஒருவர் கைகளிலேயே குவிவதை தடுக்க, ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் அவரிடமே விட்டுவிட்டு, மீதி தொகையை அரசு பிடுங்கிக் கொள்ளும் (அலாவுதீன் கில்ஜி செய்தது போல...). பல தலைமுறைகளுக்கு சொத்துக்களை வைத்திருப்போரிடம் முதலில்  செல்வம் பிடுங்கப்படும்.
    • இதன் மூலம் தந்தை ஏமாற்றி எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், அது அவன் குடும்ப உறுப்பினர்களிடம் செல்வது தடுக்கப்படும்.
    • நாட்டின் (அசையும், அசையா சொத்துக்களின்) மொத்த பணமதிப்பினை ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமாக மதிப்பீடு செய்து, அதையே 'தனிநபரின் அதிகபட்ச சொத்து மதிப்பாக (Maximum Per-Capita Property)' அறிவிக்கப்படும். இதனை மீறி வைத்திருந்தால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும்.
  • "One Currency One World" என்ற நிலையினை கொண்டு வர, அனைத்து நாடுகளிடமும் வலியுறுத்தப்படும்.
    • விலைவாசி தட்டுப்பாட்டு காலங்களிலும், பஞ்ச காலங்களிலும் அப்படியே இருக்கும். (அலாவுதீன் கில்ஜி !)
  • நீர் மேலாண்மை & சுற்றுச்சூழல் மேம்பாடு காட்டாயம்.
    • அணைகள் அமைக்க தடை. பழைய அணைகள் இடிக்கப்படும்.
    • எரிபொருள் மூலங்கள் ஆராயப்பட்டு, மேம்பாடு செய்யப்படும்.
    • கால் நடைகள் இறைச்சிக்காக பயன்படுத்தத் தடை. மீன்கள் மட்டுமே  இறைச்சிக்காக பயன்படுத்தப்படும்.
  • நாடுகளுக்கிடையே சுதந்திரமாக செல்லவும் (No Passport, No Visa), குடியேறவும் வலியுறுத்துவேன்.
    • If good translation feature, there is no language barrier.
  • மத ரீதியிலான விழாக்கள் தடை செய்யப்பட்டு, இயற்கையை போற்றும் விழாக்கள் மட்டுமே நடத்தப்படும்.
    • ஏனெனில், ஒரு நாட்டின் பண்பாடு அதன் இயற்கை அமைப்பை சார்ந்தே அமைந்திருக்கும்.
    • மதம் சார்ந்த கட்டிடங்கள், இயற்கை பூங்காக்களாகவும் கலைக்கூடங்களாகவும் மாற்றப்படும்.
  • தேர்தலில் நிற்கும் வேட்பாளர் குறைந்த பட்சம் Degree ஆவது படித்திருக்க வேண்டும். மேலும் தாய்மொழிப் பயன்பாட்டிலும், நெறிமுறைக் கல்வியிலும் (Ethical Study) கட்டாயம் மிகச் சிறந்த புலமை பெற்றிருக்க வேண்டும். அவர் மீது குற்றப் பதிவு இருந்தால் அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் பொய்யென அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும்.
    • இவருக்கு ஓய்வு 50 வயது இருக்க வேண்டும். விரைவில் இறப்பினை நேரிடுபவராகவும் இருக்கக் கூடாது.
  • வேட்பாளர் பொய் வாக்குறுதிகளை தரக்கூடாது. ஆனால் மக்கள் தேர்தலின் போது கேட்கும் நியாயமான வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தயங்கக் கூடாது.
  • தேர்தல் மறைமுகமாக (இணைவழியிலும் கூட) நேர்மையான வழியில் நடத்தப்பட்டு, குறைந்தது 97.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். (மிகவும் முடியாதவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதுடன், அதனை ஆய்வும் செய்தல் வேண்டும்)
  • முதல்வரை தேர்வு செய்யும் பொழுது, தேர்தலில் வெற்றிப் பெற்ற, முதல் இரண்டு வேட்பாளர்களை மட்டும், முதல்வர் பதவிக்காக நிறுத்த வேண்டும் (இவர்களை பல்வேறு கட்டங்களில் மதிப்பீடு செய்ய வேண்டும்). மேலும் அடுத்த தேர்தல் வரும்வரை அனைத்துக் கட்சிகளும் பணியாற்றவும் தடை விதிக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் கட்சிக்கு எந்த பணவரவும் கூடாது. மேலும் அடுத்த தேர்தல் இடைவெளியில் அந்தக் கட்சி பணியாற்றும் போது, அதன் வரவு-செலவு மிகத்தீவிரமாகவும் கண்காணிக்கப்படும்
    • இதன் மூலம், வேட்பாளர்கள் சுதந்திரமாக முடிவெடுத்து, நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்படும். மேலும், முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின்னரும் கட்சிப் பணியாற்றுவது தடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக